Saturday, October 29, 2011

சலனங்கள்




நகர்ந்து கொண்டேயிருக்கும் ஆறு
ஆற்றின் அடியில் கிடக்கும்
கூழாங்கற்களை சிறிது புரட்டிப்போடுகிறது

விடாமல் காற்றுக்கு
தலையசைத்துக்கொண்டேயிருக்கும்
மரக்கிளைகள், அமர்ந்திருக்கும்
பறவைகளை கொஞ்சம்
அலைபாயச்செய்கின்றன

பறந்து கொண்டேயிருக்கும் பறவைகள்
வெய்யிலின் கதிர்களை படுக்கை வசமாக
நறுக்கிக்கொண்டு பறக்கின்றன

இடம் மாறிக்கொண்டேயிருக்கும் மேகங்கள்,
தங்கள் உருவத்தையும் அவ்வப்போது மாற்றிக்கொண்டு
கீழிருக்கும் வயல்களை நனைத்துச்செல்கின்றன

அலைந்து கொண்டேயிருக்கும் மனது
என்னை வேறு எதையும் செய்யவிடாமல்
வெறுமனே அலைக்கழித்துக்கொண்டேதானிருக்கின்றது.









.

5 comments:

  1. //அலைந்து கொண்டேயிருக்கும் மனது
    என்னை வேறு எதையும் செய்யவிடாமல்
    வெறுமனே அலைக்கழித்துக்கொண்டேதானிருக்கின்றது.//

    அப்படி என்றால் தவறு உங்களிடம் உள்ளது,

    ReplyDelete
  2. ஹ்ம்..அதான் யோசிச்சிக்கிட்டேதான் இருக்கேன் ஜீவா,,:-) ஒண்ணும் நடக்கமாட்டேங்குது..! :)).

    ReplyDelete
  3. அலைந்து கொண்டேயிருக்கும் மனது
    என்னை வேறு எதையும் செய்யவிடாமல்
    வெறுமனே அலைக்கழித்துக்கொண்டேதானிருக்கின்றது.

    அடடா நோய் முத்திடிச்சோ ..!!! ஹா ..ஹா ...ஹா ...அருமை சகோ அருமை! ...உங்கள் கவிதையைச் சொன்னேன் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு ......

    ReplyDelete
  4. எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ .......

    ReplyDelete
  5. //அடடா நோய் முத்திடிச்சோ ..!!! ஹா ..ஹா ...ஹா ...அருமை சகோ அருமை! ...உங்கள் கவிதையைச் சொன்னேன் //// நன்றி அம்பாளடியாள்..!

    ReplyDelete