Sunday, June 14, 2020

சுஷாந்த்சிங் ராஜ்புத்

’Once upon a Time in Hollywood’ படத்தில லியோ’வுக்கு சிக்கல் வரும் தமக்கு தொடர்ந்து இனியும் வாய்ப்புகள் கிட்டுமா இல்லை இப்படியே வாய்ப்புகளின்றி போய்விடுமா என. இப்படிக்கும் படத்தில் அவர் கேரக்டர் ஒரு சூப்பர் ஹீரோவைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒரு நிறைவற்ற நிலை இவ்வளவு சம்பாதித்தும், பேர் புகழ் சென்றவிட மெல்லாம் ரசிகர்கள் என இருந்தும் ஒரு வெறுமை அவர் மனதில் குடியிருக்கும். அதே போல லிங்க்கின் பார்க்’ இசைக்குழு’வுக்கு கிட்டாத புகழ் உலகில் வேறெந்தக் குழுவுக்கும் இல்லை என்றே சொல்லலாம். புகழ் பணம் பெயர் எல்லாமிருந்தும் எதோ ஒன்று உளச்சிக்கலாக உருவெடுத்து தன்னையே மாய்த்துக்கொள்ள வைக்கிறதெனில் மேற்சொன்ன எதுவும் திருப்தி தருவதில்லை. வேறென்ன வேண்டும் அந்த ஆன்மாவைத்தான் கேட்க வேண்டும். 

கொஞ்சம் ஓரளவு தோல்வியை ஒத்துக்கொள்ளும் மனப்பாங்கு இயல்பிலேயே வாய்க்கப் பெற்றிருந்தால் , இப்படித்தான் இருக்கும் நம்ம தகுதிக்கும் திறமைக்கும் இது தான் வாய்க்கும் , இல்லை இன்னமும் கொஞ்சம் முயற்சி செய்யலாம் என தேற்றிக் கொண்டு மேல் செல்ல நினைக்கலாம் எனக்கடந்து விட்டால் தன்னை மாய்க்கத் தோணாது. இப்படிக்கும் தனது அணுக்க நண்பர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்து இருக்கிறார் முன்னிரவில். அது நீண்டு அதிகாலை வரைக்கும் சென்றிருக்கிறது. எவரிடமும் சொல்லாது பிரச்னைகளை தமக்குள் பூட்டி வைத்து வெளிவிட வாய்ப்பில்லாது ஒரு வடிகால் கிட்டாத நிலையில் தான் இந்த தன்மாய்ப்பு களெல்லாம் நிகழ்கின்றன. என்னைக் கேட்டால் எதுவும் கடந்து போகும் என்றுதான் சொல்வேன். இதுவும் மட்டுமல்ல. #சுஷாந்த்சிங்ராஜ்புத்

.