Saturday, July 29, 2017

I'm just talking to myself




இந்தப்பாடலைப்பாடிய லீட் ஸிங்கர் 'செஸ்ட்டர் பெனிங்டன்' இறந்து கிடந்தார். இந்தப்பாடல் வெளிவரும் நாளில் 20 ஜுலை 2017. லிங்க்கின் பார்க்' புகழ்பெற்ற ராக் பேண்ட் பாய் பேண்ட். லைட்டாக கொஞ்சம் பாப்' ஸ்டைலில் இந்த ராக் பாடல். வலுக்கட்டாயமாக உச்சஸ்த்தாயியில் பாடியே ஆகவேணும் என்று பாடியதைப்போல , எல்லா ராக் பாடல்களும் அப்டித்தாங்ணா.


வரிகள் எல்லாம் சூப் பாய்ஸ் லைன்ஸ்தான். ‘ எனக்குள்ளேயே பேசிக்கொள்கிறேன்' அதத்தான் செய்ய முடியும் வேறு என்ன செய்வது ? I'm just talking to myself இதே குழுவின் இன்னொரு பாடகரும் இதே போல் தற்கொலை செய்துகொண்டார் சில ஆண்டுகளுக்கு முன்னர். இசை கொல்லுமா? ஹ்ம்.. கொலையும் செய்யும் போலிருக்கிறது


இந்தக்காட்டுக்கத்தலை பொறுத்துக்கொள்ளும் மனமிருந்தால் பாடலை ரசிக்கலாம். Pure Rock Band Song. இந்த வீடியோ ஸீக்வென்ஸை கட் செய்து முடித்து இயக்குநர் யூட்யூபில் ஏற்றி சில மணிகளுக்குப் பிறகே இறப்பு நிகழ்ந்திருக்கிறது. I'm just talking to myself கடைசியில் ஒலிக்கும் அந்த கிட்டார் பீஸ். மாயம்.

கடந்த இரண்டு நாட்களாக லிங்கின் பார்க்' குழுவிற்காக ட்ரிப்யூட் என 'விஎச்1’ சேனலில் தொடர்ந்து இக்குழுவினரின் பாடல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. முக்கியமாக இந்தப்பாடல். மேலும் இக்குழுவினரின் பாடல்கள் மட்டுமே அடங்கிய 'டாப் 20’ பல முறை ஒளிபரப்பாகியது.

The truth is, you turn into someone else
You keep running like the sky is falling
I can whisper, I can yell
But I know, yeah I know, yeah I know
I'm just talking to myself
Talking to myself

மிஸஸ் டவுட்ஃபையரில் நடித்த (அவ்வை சண்முகி ஆங்கில மூலம்) ரொபின் வில்லியம்ஸும் இதே போல தற்கொலை செய்துகொண்டே இறந்தார். அதீத மன அழுத்தம் காரணமாக. அப்போது நம்ம கமல் அவரைக்கடிந்து கொண்டார். (இங்கயும் கமல் வந்துட்டாரா ?!) அதீத மன அழுத்தமோ அல்லது தாங்க முடியாத துயரோ ஏற்படும்போது காட்டுக்கூச்சல் போட்டுக் கத்தினால் அத்தனை ரிலீஃப் ஆக இருக்கும். செய்து பாருங்களேன். பிறகேன் செஸ்ட்டர் இந்த முடிவை எடுத்தார் ??? இந்தக்குழுவிட ம் இல்லாத பணமோ ,புகழோ,  ஏகத்துக்கு ரசிகர் கூட்டமோ என வேறேந்தெக்குழுவிற்கும் இல்லை. எல்லாருமிருந்தும் இப்படி ஒரு முடிவு.!
# I'mJustTalkingToMyself

Sunday, July 23, 2017

நீர்மூழ்கி - வார் சிம்ஃபொனி



இசைக்கு மயங்காதோர் உண்டோ இவ்வுலகில்
. இதோட நூறு முறைக்கும் மேலே கேட்டிருப்பேன் இதை. பெர்ஃபெக்ட் வார் சிம்ஃபொனி...03:40ல் எங்கிருந்தோ வருவது நம்மைக்கடந்து செல்ல ஆறு நொடிகள் ஆகிறது. அதே போல 0420லும். ஹ்ம்.. இடையிடயே உருட்டுக்கட்டைகளை மொஸைக் தரையில் உருட்டிவிட்டது போல உருண்டோடும் இசை
 


எம்ப்பி3 கிடக்குதானு பாத்து தரவிறக்கி டிவீடி ப்ளேயரில ஒலிக்கவிட்டா நல்ல சலூன் கடைல வெட்டிப்போட்ட இது மாதிரி கேக்குது...அடச்சை ..அடக்கண்றாவியே.. ஹ்ம்.. ஐநாக்ஸ்ல தான் கேக்கணூம்..ஹிஹி... 0530-ல் ஒரு வாரியாக முடிந்தேவிட்டது என்று நினைக்கும்போது மீண்டும் ஆரம்பிக்கிறது இன்னமும் அதி வேகத்தில...அட அட...  நோலா.. எப்டீல்லாம் செலக்ட் பண்றான்டா இவன்... ஹான்ஸ் ஸிம்மர் இசைக்கு இவ்வாண்டு ஆஸ்கார் உறுதி

.

Sunday, July 16, 2017

I Support Rahman!




எனக்கு முன்னால் பிறந்த ஜெனரேஷன்கள் வேணுமானால் இந்திப்பாடல்களின் பிரியராக இருந்திருக்கலாம். அந்தக்காலக்கட்டத்தில் பிறக்காத/வாழாத என்னால் அதைப்பற்றி கருத்து எதும் கூறவியலாது. இங்கு இந்திப்பாடல்களை ஒவ்வொரு ஐ போனிலும், ஆன்றாய்டிலுமாக பொதிந்து வைத்துக்கொண்டு அலையும் பெண்டுகள்/ பிள்ளைகள் பற்றி என்ன சொல்வது? ராசைய்யாவும் ரஹ்மானிடமும் உள்ள இசைச்செறிவு அவர்களின் இசையில் நான் கேட்டதில்லை. வழக்கம்போன்ற இந்துஸ்தானியில் எந்தவித முயற்சியும் செய்யாது அதை மெருகூட்டக்கூட இயலாது அதன் உண்மை வடிவிலேயே கொடுப்பதே அவர்களின் வழக்கம். ஐயா சாமிகளே கொஞ்சம் இசை பற்றிய அறிவு இருப்பதாலேயே இதை எழுதுகிறேன். சில இசைக்கருவிகளை மேடையில் வாசிக்குமளவிற்கு ஞானமும் உண்டு.

கொஞ்சமும் மாற்றாது அதை அதன் வடிவிலேயே கொடுக்க செவ்வியல் கச்சேரி மேடைகள் இருக்கின்றன. கற்பனை கலக்காத ,மெருகூட்டப் படாத ஒன்று இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன?. கூட இருக்கும் நண்பர்கள் கேலி செய்வர். எப்படி தமிழ்ப்பாடல்களை மட்டுமே சிலாகிக்கிறாய் , விட்டால் இங்கிலீஷுக்கு தாவிவிடுகிறாய் என்று. செறிவு இல்லை மக்கா உங்கள் இசையில். புது முயற்சிகள் இல்லை. விதிவிலக்கு அமித் த்ரிவேதி மட்டுமே. அவரை எத்தனை பேர் விரும்புவர் என விரல் விட்டு எண்ணி விடலாம். சமகாலத்தில் இசைக்கும் அமித் தவிர எவரின் இந்தி இசையையுமென்னால் இரண்டு நிமிடம் கூட கேட்கவியலாது. ஷங்கர் எஹ்ஸான் லாய் செய்வதெல்லாம் கத்துக்குட்டிகள் செய்து விடும் நம்முலகில். நதீம் ஷ்ரவன் பாடல்கள் எல்லாம் பழஞ்சரக்கு.

நவ்ஷாத், சலீல் சௌத்ரி போன்றோரின் இசை கேட்டதேயில்லையா என வினவுவர் என்னிடம். கொஞ்சம் கேட்கிறேன். அடிப்படையாகவே வட ஹிந்தியர்களின் மனப்பாங்கு அங்கனமே. மொழி என்றால் இந்தி , பாடல்கள் என்றால் இந்திப்பாடல்கள், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே இசை. அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நான் கவனத்தில் கொள்கிறேன். ஒட்டுமொத்த குழு மனப்பான்மையாக வேற்று மொழிப்பாடல்கள் என்றாலே கேவலம் அவர்களுக்கு. அதிலும் சவுத் இண்டியன் பாடல்கள் என்றால் 'கல்லை தகர டப்பாவில்' போட்டு குலுக்குவது என்ற பதம். இதையே நான் பத்து ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன் கொஞ்சம் சொலவடையையாவது மாத்துங்கடா.! அடிப்படை வெறுப்பு மண்டிக்கிடக்கிறது அவர்களின் மனதில்.

அடிப்படையில் வட ஹிந்தியர்களுக்கு தாய்மொழிப்பற்று என்பது பற்றி கொஞ்சமும் ஞானம் இல்லை. அவர்கள் குஜராத்தியோ /மராட்டியோ/இல்லை போஜ்புரியோ எல்லாம் நமது தாய் மொழியில் வேணும் என்று கேட்கும் மனப்பாங்கே இல்லை. எதுவாயினும் இந்தியில் கிடைத்தாற் போதும். பெங்காலிகள் இந்திப்பாடல்ளை பொதிந்து வைத்துக்கொண்டு கேட்பதை பல நேரங்களில் விமர்சித்திருக்கிறேன். ஏன் பெங்காலியில் பாடல்களே இல்லையா, இல்லை உருவாக்குபவர்கள் அனைவரும் ஹிந்திக்கு இடம் பெயர்ந்து விட்டனரா என்று.

ராசைய்யா என்ன காரணத்தினால் இந்திப்படங்களுக்கு இசைக்கவில்லை என்ற காரணம் எனக்கு தெரியவில்லை. வந்த வாய்ப்புகளை வேண்டாமென்றாரா இல்லை , அத்தனை உச்சத்திலிருந்த அவரால் இந்தியில் கவனம் செலுத்த இயலவில்லையா என்றும் தெரியவில்லை. அப்படி அங்கும் இசைத்திருப்பாரானால் ஒரு வேளை இந்த வெற்றுக்கூச்சல் அப்போதே கூட கிளம்பியிருக்க வாய்ப்பிருக்கிறது. அமிதாப் பலமுறை சொல்லியிருக்கிறார் ராசைய்யாவை ஏன் இந்திப்படவுலகு பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று.

இதே ரஹ்மானிடம் என்டிடீவி'யில் ஏன் இசைப்பள்ளியை சென்னையில் தொடங்கினீர்கள் என்று கேட்டார் பேட்டி எடுப்பவர். எனக்கு நன்கு ஞாபகமிருக்கிறது. வட நாட்டு ஊடகங்களில் பணி புரிபவர்கள் கூட அந்த வெறுப்பை அடியாழத்தில் சுமந்து கொண்டே திரிகின்றனர். அவரவர் அடையாளத்தோடு வாழவே துணைக்கண்டம். சக புரிதல்களோடு கூடி வாழவே இந்தக்கட்டமைப்பு. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பெங்களூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முதல்வர் சித்தாராமய்யா தமிழர்களைப்போல மொழி உணர்வு கொள்ளவேணும் என அறைகூவல் விடுக்கிறார்.

எனினும் கலைஞர்களுக்கு மொழியில்லை. கேட்பவர்களின் அதை ரசிப்பவர்களின் மனநிலையும் அவ்வாறே மாற வேண்டும். #I Support Rahman



.

Friday, July 14, 2017

பாஸு பாஸு பாஸு



சோ அடிக்கடி வடமாநில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கும் போது எப்போதும் சொல்வார். முதலில் என்ன ஃபேஷனாக இருந்தாலும், புதிய மோஸ்தர்கள் முயற்சியாய் இருந்தாலும், நிகழ்ச்சிகள், இன்னபிற மற்ற ஊடக உத்திகள் எல்லாம் முதலில் பாம்பேக்கு வந்தபிறகு தான் சென்னைக்கு வருமென. (அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் அது வேறே விஷயம் ) அதே தான் இந்த பிக் பாஸும். என்ன மாறினாலும் இந்த காலனிய மனப்பான்மை நம்மை விட்டு மாறாது போலிருக்கிறது.

அத்தனையும் திறம்பட எழுதிய திரைக்கதைகள். கமலுக்கு வழக்கம் போல அவர் பாணியை கிஞ்சித்தும் மாற்றாது வெளிநாட்டு பாணியில் நடிக்கவேண்டிய கட்டாயம். என்ன ஒன்று மேனரிஸங்கள் ஏதும் இல்லை. கடல் மீன்களில் மார்லன் ப்ராண்டோ'வின் காட்ஃபாதர் ஸ்டைல் போல (குரலைச்செருமி உச்சந்தலையை சிறிதே சொறியும் )இங்கு ஏதும் செய்ய வாய்க்கவில்லை. அவ்வளவே. நான் இதுவரை ஒரு நிகழ்ச்சி கூடப் பார்த்ததில்லை,நேரமும் இல்லை. கமலின் பேட்டியும் ஆங்காங்கே தூவப்பட்டிருந்த சில காட்சிகளும் மட்டுமே பார்த்திருக்கிறேன். அத்தனை ஈர்ப்பு ஒன்றும் இல்லை. அடுத்தவர் வீட்டை படுக்கையறையை எட்டிப் பார்க்க விருப்பமில்லை என்றெல்லாம் சினிமா வசனம் பேசவெல்லாம் தோணலை. நேர விரயம்

கமலின் நிழல்/வாசம் கூட பிடிக்காத சாரு அந்த நிகழ்ச்சியைப்பற்றி இத்தனை ஏன் சிலாகிக்கிறார் என்று தெரியவில்லை. எழுதிக் கொண்டிருக்கும் புதிய புதினத்துக்கு ஏதேனும் இப்படி உத்திகள் கிடைக்குமாவென ஏங்குகிறார் போல. ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஏற்கனவே வந்து வெளிநாடுகளில் டிஆர்பி ரேட்டிங்கிற்காக செய்யப்பட்ட/புனையப்பட்ட நிகழ்ச்சி தானிது. ஷரோன் ஸ்டோன் நடித்து வெளியான ஸ்லைவர், இன்னொரு ஜிம் கேரி நடித்து வெளியான (பெயர் மறந்துவிட்டது) போன்ற படங்களில் இயல்பில் கேமரா வைத்து முழுக்க முழுக்க லைவ்'வாக குடும்பம்/தனி மனிதன் போன்றோரைக் கண்காணிப்பதை பொழுது போக்காகக்கொண்ட புனைவுகளில் வெளியானவை.எல்லாம் வெளிநாட்டு சரக்கு. அதற்கு கமலே பிரதானம் என்பதில் ஒரு ஆச்சரியமுமில்லை. அவர் நடித்த ,இயக்கிய மேலும் மற்ற இயக்குநர்களின் அத்தனை படங்களும் ஏதோவொரு ஹாலிவுட் படங்களின் சாயலே.

அவருக்கு பணமுடை.நடிக்க வந்துவிட்டார் சின்னத்திரைக்கும் கூட. ஒரு படத்தில் சத்யராஜைப்பார்த்து ஒரு சின்னத்திரை கலைஞர் இப்படி ஏசுவார். எல்லாம் சரக்கு தீந்துருச்சுன்னா டெலிவிஷனுக்கு வந்து தான் ஆகணூம்னு. அதான். சரி விடுங்க. அவர் கொடுத்த பேட்டிதான் எனக்கு ரொம்பப்பிடித்தது. ஒரு வேளை அதுகூட ஸ்க்ரிப்ட் எழுதி இயக்கப்பட்டதாவென அத்தனை கச்சிதமான கேள்விகள்/பதில்கள். ஊடகத்திற்கு எத்தை விற்றால் பித்தம் தெளியும் என்ற நிலை. பார்வையாளனுக்கு அலுங்காம குலுங்காம அடுத்த வீட்டில என்ன நடக்குதூன்னு பாக்கணும்னு கொஞ்சம் குஜ்லி. அவ்ளவ்தான். விஜய் டீவியின் பங்குகளைப்பற்றி மனிகண்ட்ரொல்.காம்-ல் பார்த்தால் எல்லாம் விளங்கும். நமக்கு கதிராமங்கலம் முக்கியமில்லை. கச்சத்தீவு முக்கியமில்லை. உலகமே நாடகமேடை. அதில் அனைவரும் நடிகர்கள். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். அவளோடு சேர்ந்து நாமும் பார்க்கலாம். கொண்டாடலாம். வாக்களிக்கலாம். பாஸு பாஸு பாஸு என் பேரேதாண்டா பாஸூஊஊஊஊஊ.!



.

Monday, July 10, 2017

'தலை விடுதலை'


'தலை விடுதலை' பெர்ஃபெக்ட் ராக் தம்பி அநிருத்திடமிருந்து. mettalicaவை hard rock cafe’யில் கேட்டது போல அத்தனை ஒரிஜினல். வெள்ளமெனப் பாயும் அற்புத ராக். என்ன ஆச்சரியம் இந்த முறை ராப்'போ ஹிப் ஹாப்'போ கலக்கவில்லை. சிக்கரி கலக்காத அதி உத்தம காப்பி. குளம்பி. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இப்படிப்பட்ட அதி தூய ராக் இசை அத்தனை பரிச்சயமில்லை. கேட்பதில்லை. இதே பிரச்னையில் விஐபி' யில் அந்தப்பாட்டு ராக்'கில் ஆரம்பித்த போதும் பின்னர் ராப் கலந்து பிளாக் காப்பியில் கொஞ்சம் பாலைக்கலந்து காப்பியாக கொடுத்தார். ‘வேலையில்லாப்பட்டதாரீஈஈஈ' அந்தப்பாடல். தமிழ் ரசிகர்கள் கேட்பார்களோ இல்லையோ என்ற சிறிய ஐயத்தில் எப்போதுமான பாணியில் அந்தக்கலவை நிகழ்ந்தது. அதே பாணியைத்தான் சந்தோஷ் நாராயணனும் செய்திருந்தார் 'நெருப்புடா'வில்.

ராக்'கிற்கு நம்முலகில் இன்னமும் ரசிகர்கள் உருவாகவில்லை என்பதே வருத்தம். இங்கு அதன் இலக்கணம் கிஞ்சித்தும் பிறழாமல் அடிதடியான ட்ரம்ஸ் பெர்குஷன்ஸ் மற்றும் மிக அதிர்வெண் அலைகள் கொண்ட எலெக்ட்ரிக் கிட்டார்கள் பொழிந்து நனைக்கவில்லை. தரைமட்டமாக ஆக்குகிறது. கரைந்து ஓடியே ஆகவேண்டும். மனதளவில் இன்னமும் தயாராகத தமிழ் கூறும் நல்லுலகம் இதை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்று இன்னமும் விளங்கவில்லை.

அலறும் குரல்கள், இன்னதான் சொல்கிறாரென்று சொற்களைக் கேட்கவிடாத கிட்டாரின் அரற்றல்கள், பின்னில் அதி உயர் டெசிபல்களைக்கொண்டு செவிப்பறை கிழியவைக்கும் இசை. இவையெல்லாம் இலக்கணம். அதே தான்! ராக்! இருப்பினும் ராக் இசைக்கலைஞர்களை மிஞ்சும் கிட்டார் கார்டுகள் எடுக்க இன்னமும் யாரும் பிறக்கவில்லை.

Never Ever Give up என்ற ஒவ்வொர் சொல்லுக்கும் இடையில் ஒலிக்கும் அந்த இசை,சுதி ஏற்றி அடுத்த என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ,அட்ரினலை பம்ப் செய்து வெடிக்க வைக்கும். ஒவ்வொரு சொல்லாக பின்னில் கிட்டாரும் அதையே பாடுகிறது. அலை கிளம்பி சிதறி அடித்து சுனாமி முடிவுற்றது போல உணர்வு. முன்னில் வெளிவந்த எந்தப் பாடலையும் நினைவுறுத்தாத பாடல் இது. அத்தனையும் ஒரிஜினல். அடித்துப்பெய்த மழை சட்டென ஓய்ந்து விட்டாற்போல ஒரு உணர்வு. இத்தனை ஒரிஜினல் ராக்' இசையை நம்ம சனம் ஏற்றுக்கொள்ளுமா ?! ஹ்ம்… 0241 லிருந்து 0253 வரை சொர்க்கம். இதுதான் பேஸ்லைன் பாடலுக்கு. இடையிடையே ஒலிக்கும் அந்த 'ஹா' ஆஹா!!

ஷரிஷ் ஸ்வாமிநாதன் இடையியே பாடினாலும் அநிருத்தின் குரலே அத்தனை இரைச்சல்களையும் கடந்து ஒலிக்கிறது. இங்கும் அருண்ராஜ் (நெருப்புடா) தவிர்க்கப்பட்டு இருப்பது நினைவு கூறத்தக்கது.
 
மென்மையான பாடல்கள் எப்போதும் வெல்லும். இந்து மாதிரியான தமிழ் நெஞ்சங்களின் மொழியில் சொல்லுவதென்றால் இரைச்சல்கள் எப்போதாவது வெல்லும். இப்போது வெல்லும் இந்தப்பாடல்.

இம்முறை யூட்யூபில் வெளியாகாது சாவனில் வெளியாகி இருக்கிறது இந்த டீசர்!



 


.

Sunday, July 9, 2017

down down.....



இந்தக்குழுவின் பாடல்கள் இப்போது அத்தனை எடுபட மறுக்கிறது. எப்போது கேமிலா கேபலா நீங்கினாரோ அப்போதிலிருந்தே கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது, இப்போ அவர் 'crying in the club' என்று அழப்போய் விட்டார் :) , இந்தப்பாடலில் இடம்பெறாமல் போனதற்கு சரியானபதில் சொல்லாது,பரவால்ல அவங்க ஆல்பம் நல்லா வந்தா போதும் என்று மழுப்பியிருக்கிறார். இப்போது வெளிவந்திருக்கும் 'டவுன்' பாடல் உண்மையிலேயே டவுன் தான் :). Work from Home போன்றே இருப்பது க்ளீஷே




ஒரே மாதிரியான பாணியில் பாடல்கள் அமைப்பது என்ற வியாதி பிடித்தாட்டுகிறது. பாப்பில் ஆரம்பித்து பின்னர் கருப்பின ஒரிஜினல்களை வைத்து ராப்'பில் பாடவத்து பாடல் உருவாக்குவது என்ற பாணி சலிக்கிறது அம்மணிகளே. இந்த குழு மட்டுமல்ல பெரும்பாலும் இதே பாணியில் அத்தனை பாடல்களும் தொடர்ந்தும் வருவது சீக்கு ! ஐவரானோம் என்றிருந்து விட்டு கேமிலா நீங்கிய பின்னும் குழுவின் பெயரை இன்னமும் மாற்றாது ஃபிஃப்த் ஹார்மனி என்றே வைத்திருப்பதை மட்டும் வேணுமானால் மெச்சிக்கொள்ளலாம். Its Just a Fourth Harmony :) #downdown





.

Sunday, July 2, 2017

என்னுடன் இரு !





Stay !

இப்பல்லாம் ஹம்மிங் , ஹார்மனியில் ஆரம்பிக்கும் பாடல்களே இல்லாது போயிற்று, ராசையாவின் காலத்தோட போயிற்று அந்த அற்புதங்களெல்லாம். கிட்டதட்ட ஏகாந்தங்களிலெல்லாம் இந்த ஹம்மிங் வந்து கொல்லும். எகாவாக 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடலைச்சொல்லலாம் முள்ளும் மலருமிலிருந்து. ஆஹா..

இந்தப்பாடலும் ஹம்மிங்கிலேயே ஆரம்பிக்கிறது.இங்கு 'தங்கு என்னுடன்' என்கிறாள். அதே தொடராதா என்ற கேவல் நம்முள் எழும். முதல் 29 செகண்ட்களுக்கு வேறொரு ராகம். பின்னர் மெலியதான பாப்' இசையில் தொடங்கி பாடல் முழுக்க பயணிக்கிறது. தாளம் கணிக்க முடியாது வேறேங்கெங்கோ பயணித்தபோதும் ஒன்றிப்போக முடிகிறது. பிறகு புதிதாக ஆங்கிலம் பேசுபவர்களிடம் பேசுவது போல ஒவ்வொரு சொல்லாக ராப்'பில் (ஹிப் ஹாப் ஸ்டைல் கூட இது தான்) பாடுகிறார். கிட்டத்தட்ட சிம்ஃபொனி. ஒத்திசைவான இசையமைப்புகளில்லாத போதும் இருத்திவைத்து கேட்கவைக்கும் இசைக்கோவைகள்.

இது போல இந்த ராசைய்யாவின் பாடலில் எனக்கு இன்றளவும் சம்மதேமேயில்லாத சரணம் என்றால் 'நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று' என்ற பாடல், பல்லவி ஒரு ராகம் , சரணங்கள் இன்னொரு ராகம். இரண்டுக்கும் சம்பந்தமேயில்லாத தத்தமது தாளங்களில் பயணிப்பவை. இரண்டையும் இடையிசை கொண்டு இணைத்து இன்றளவும் கேட்க வைத்திருப்பார். ஒரே ராகத்தை வைத்துக்கொண்டு அதையே சோகத்துக்கும் ,மகிழ்வுக்குமாக இசைப்பது போல. தாளத்தை துரிதப்படுத்தினால் மகிழ்ச்சி, கீழிறக்கி மெதுவாக , பாடலில் குழையவிட்டால் சோகம் என கேட்பவரை மயக்கவைக்கும் அற்புதங்கள் நிகழும். கடவுள் தான் அற்புதங்கள் நிகழ்த்தவேணும் என்பதில்லை. இத்தகைய தருணங்களிலும் அது நிகழும். இது இடமாறு தோற்றப்பிழை அல்ல. தோற்ற மயக்கங்கள்.

ரஹ்மானும் இதுபோல பல செய்வார். மன்னிப்பாயா பாடலில் மிகத்தெளிவாக தெரியக்கூடியது அந்த பல ஏற்ற இறக்கங்கள் ஒரு வரி கொண்டு , பல ராகங்களில் ஒரு சொல்லை பாடவைப்பார். ஐந்து விதமான மன்னிப்பாயா, அடப்பாவி , இப்டீல்லாம் கேட்டா எந்தப்பய தான் மன்னிக்க மாட்டான். அப்டியும் அவன் மன்னிக்கலைன்னா அது மனுஷப்பிறவியே இல்லை.! ‘ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன்; என்ற வரிகளை முதலில் கொஞ்சம் குழைவாகவும் , பின்னர் ஒரு நாள் சிரித்தேன் ஒரு நாள் வெறுத்தேன் , சரியா நான் இவ்வளவு கேக்றேன்ல, ஏன் மன்னிக்கமாட்டாய் என்ற கோபத்தில் கொஞ்சம் வேகம் எடுத்து பாடுவார் ஷ்ரேயா. இதே டெக்னிக்கில் தான் அத்தனை பாடல் போட்டிகளிலும் பாடச்சொல்லி பரீட்சை செய்வர் புதுப்பாடகர்களை.

இங்கே ஸ்டே'யில் அதையே பயன்படுத்தியிருக்கிறார் குளித்துவிட்டு சரியாக தலை துவட்டாமல் அப்படியே வந்து பாடும் அலஸ்ஸீயா ! இங்கு பாடலில் Clock is Ticking’ எனும்போதெல்லாம் பின்னில் கடிகார ஒலி.ராசைய்யா இப்போது 'நீ தானே பொன்வசந்தம்'ல் சற்றுமுன்பு பார்த்த' பாடலில் அத்தனையும் காலத்தின் அடிப்படையில் அமர்ந்திருப்பதால் பாடல் முழுக்கவே பின்னில் தாளம் கடிகார டிக் ஒலி தான். கூர்ந்து கவனிக்கலாம். காலத்தை கணிக்க கடிகாரம் தவிர மேறு மானி ஏதும் கிடையாதா ?! ஹ்ம்..

Make it on my own, but I don't wanna grow up
We can stay forever young

எப்போதும் இளமையில் இருக்கலாம் , இருந்துவிட இயலுமா, மனதிற்கு மட்டும் கடிகாரங்கள் இல்லை எப்போதும். அதே காலத்தில் உறைந்து போய்விடுகிறது. All you have to do is stay a minute , ஒண்ணும் வேணாம் எங்கூட இருந்தா போதும். ஆயிரம் காரணங்கள் சொல்லமுடியும் என்னுடன் நீ இருக்கவேணும் என்பதற்கு. என்ன செய்வது அதான் வாய்ப்பதில்லை.!

01:05ல் தொட்டவுடன் நொறுங்கும் கண்ணாடி மனது இப்படித்தான் சில கணங்களுக்காக வாழ்நாள் பூராவும் காத்துக்கிடக்கும் ஜீவன்கள். 02:53ல் காற்றலையில் கரையும் குரல் பாடலை ஏகாந்தத்தில் அனுபவிக்க விடும். அருகில் இருந்து கேட்கும் பாடலைவிட காற்றில் கலந்து பயணித்து தாமாக வருவது அதிகம் அலைக்கழிக்கும். எதிர்பாராமல் வந்து விழுகிறதல்லவா!

பல தருணங்கள் இப்படி ஒரு முழு வாழ்வையும் மூன்று நிமிடத்தில் முடித்துவிடுகிறார். இப்படி ஒரு மூன்று நிமிடத்தில் அத்தனையும் அனுபவித்து முடித்துவிடும் வாழ்வு கிடைக்குமா?! கூட்டிக்கழித்துப்பார்த்தால் வாழும் அறுபதாண்டுகளில் மிஞ்சக்கூடியது இப்படியான மூன்று நான்கு நிமிடங்கள் மட்டுமே.

உணவு மேசையில் இருக்கும் உப்பை/சர்க்கரையைக்கொட்டி அதில் பேரெழுதி விளையாடுவது பின்னர் மேசையில் நீர்க்கோலம் இடுவது என்பதெல்லாம் வேறு எதையோ யோசித்துக் கொண்டு செய்யும் செயல்கள். இதெற்கெல்லாமாக என்னுடன் இரு Stay….!! 

.