Wednesday, January 10, 2018

இசைச்சாதி

'கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்' நண்பர்கள் கொடுத்த யூட்யூப் சுட்டியில் கேட்டது வரை, ராப்' கலந்து கட்டி அடித்த கானா தான். வடிவம் கைகூடி வந்திருக்கிறது. ஏற்கனவே மேயாத மானில் வந்த 'நீ கெடச்சா குத்துவிளக்கு' பாடல் வடிவம் , கானவையும் கொஞ்சம் வில்லுப்பாட்டு வடிவத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டது. பின்னரும் முன்பு 'மெட்ராஸ்' ,மட்டும் அட்டக்கத்தி' யிலும் பரவலாக காணப்பட்டது. இங்கு கொஞ்சம் ஃயூஷன் வடிவம் கானா+ராப்+ஹிப் ஹாப்+ராக், எல்லாத்தையும் கலந்து கட்டினா ..ஆஹா.. இருப்பினும் ஒலித்தெளிவு இல்லை யூட்யூபில், நேரடியாக பதிவு செய்து ரசிகர்கள் வெளியிட்டிருக்கும் காணொலிகளில். முழு ஆல்பமும், ஒலிப்பேழையாக வரும்போது இன்னமும் சிறப்பாக விமர்சனம் எழுதலாம். எனினும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.

மேடையில் அத்தனை பேரும் கோட்சூட் அணிந்துகொண்டே பாடுகின்றனர்.! அங்க இருக்கு கெத்து. மாட்டுக்கறி , கேடுகெட்ட மனுசன், சாதி சம்பந்தமான பாடல்கள் வரிகள் அருமை. இருப்பினும் இந்த ராப் வடிவம் உலக அளவில் கறுப்பின இசைக்கலைஞர்களால் கொண்டு வரப்பட்டு இன்னமும் மீறி ஹிப் ஹாப்பாக உருவெடுத்து கலக்கிக்கொண்டிருக்கிறது. ஓரளவுக்கு மேல் இம்ப்ரூவ் செய்யவியலாத, சலிப்பூட்டும் இசை வடிவம் இது.ஏதோ ஒன்றிரண்டு வேணுமானால் கேட்கலாம். எமினெம் கூட முயற்சி செய்தார். ராசைய்யா இந்த வடிவத்தை மாற்றியமைத்து 'ஃரெண்ட்ஸ்' படத்தில் அதன் உள்ளுருத்தெரியாமல் இசைத்து மகிழ்வித்தார். ‘மஞ்சள் பூசும் மாலை நேரம்' பாட்டில். ரஹ்மான் 'பேட்டை ராப்'பிற்கு பிறகு இடைச்செருகலாக 'ஷோக்காலி' பாடலில் ரொம்ப நாளைக்குப்பிறகு கொண்டு வந்தார்.

கானாவுக்கென ஒரு வடிவம் இருக்கிறது. சிந்துபைரவி ராகத்தில் அதிகம் இசைக்கப்படும் கானாக்கள். இருப்பினும் பாகேஸ்வரி, மோஹனத்திலும் கூட இம்ப்ரொவைஸ் செய்து கானாவாக இசைக்கலாம் தான். தம்பி அநிருத் இப்போது 'தானா சேர்ந்த கூட்டத்தில்' சில பாடல்களை கானா வடிவத்தில் கொடுக்க எத்தனித்திருக்கிறார். ஏற்கனவே தேவா'வை வைத்து ஒரு பாடல் கொடுத்தார். இசைக்கு மொழியில்லை. சாதியுமில்லை. பாடுவதற்கு எளிதாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் இந்த கானா' அள்ளித்தெளிக்கிறது. இங்கு பாடும் அனைவரும் அடைமொழியாக கானா' என்ற சொல்லை தம்பெயருடன் சேர்த்தே சொல்கின்றனர். :) ஒருங்கிணைப்புங்கறது பெரிய விஷயம் இல்லை ரஞ்சித்துக்கு , இவ்வளவு பெரிய பட்ஜெட்ல படம் பண்றவர் இத செய்ய மாட்டாரா என்ன ?! :) மகிழ்ச்சி ! :) :) #CastelessCollective

.

Monday, January 1, 2018

அப்பால சிஸ்டர சரிபண்ணலாம்

என்னய்யாது நாட்டுல என்னென்னவோ நடந்துக்கிட்டிருக்குது , நீ பாட்டுக்கு சிப்பிச்சரம், வேளாங்கன்னி கருந்துளைன்னு சம்பந்தமில்லாம போஸ்ட் போட்டுக்கிட்டிருக்கன்னு உட்பெட்டியில் பல அங்கலாய்ப்புகள். நானே இங்க நியூ இயர் பார்ட்டி எல்லாம் கேன்ஸலாயிப்போச்சேன்னு கவலைல உக்காந்துக்கிட்டிருக்கேன். இவா வேற எடைல வந்து கடுப்புகளை கிளப்பிக்கொண்டிருக்கிறாங்கள்.

சரிய்யா, சொன்னத செஞ்சிருக்கார் அவ்வளவுதானே.? இப்ப என்ன? ஆட்சிக்கே வந்துட்டாப்ல குதிக்கணுமா ?,, தேர்தல், பரப்புரை, உள்ளடி வேலைகள், 20 ரூபா நோட்டு,சின்னம் கொடின்னு பல வேலைகள் இன்னும் இருக்கே அதுக்குள்ள ஏன் அவசரப்பட்டு கருத்து சொல்லணும்னு இருந்தேன். கிளப்பி விட்றீங்களேப்பா. சக நடிகர் பேபி ஸ்டெப்ஸ் வெச்சு அருமையா காய் நகர்த்தி,தொடர்ந்து நாட்டு நடப்புகளுக்கு எதிர்வினை, கருத்துகள்னு ராஜபாட்டை போட்டுக்கிட்டிருக்கார். மமதாவையும், கேரள, டெல்லி முக்யமந்த்ரிகளை சந்திச்சும்னு, பாதையை தெளிவுபடுத்தி அவர் வழியில் எந்த குழப்பமுமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்.

இவர் என்ன செய்தார், காலா ஷூட்டிங்ல சில ஸ்னாப்ஸ்களை வெளிய விட்டுக்கிட்டு, உள்ளூர் வெளியூர்ல நடக்கிற எந்த விஷயத்தையும் கண்டுக்காம,எந்தவிதமான எதிர்வினைகளையும் செய்யாது கம்முனு ஞானி மேரி ஒக்காந்திருந்துக்கிட்டு திடீர்னு மோனத்துலருந்து எழுந்து வந்தா மேரி, 234 தொகுதியும் எனக்கேன்னு கூவினா சிரிக்கிறத தவிர வேற என்ன செய்யமுடியும் ஓய் ? 

அனிதா,மீனவர், கர்நாடகால தமிழன தங்கத்தட்டுல ஏந்தி பாராட்டி சீராட்னது,சல்லிக்கட்டு, ஆர்கே நகர் 20 ரூபா, பணமதிப்பிழப்பு, காவிரி தீர்ப்பாயம் , இந்த மேரி எதுக்கும் வாய தொறக்காம சீல் வெச்சிண்டு இருந்துட்டு, இன்னிக்கே கட்சீ,ஆனா கொடி கெட்யாது,கொள்கே கெட்யாது,வாய மூடிண்டு சொம்மாரு, அப்பால பேத்துக்கலாம்னு ,ஆனாலும் 234ம் என்குதான்னு சொன்ன ஒரு கோமாளிக்குத்தான் இது நாள் வரை கோடி கோடியா கொட்டிக் கொடுத்தான் தமிழன். வெக்கமாயில்லயாடா ஒங்களுக்கு ? அடச்சீ. இதுல 'டேக்ட்டனிக் ஷஃபில்'னு பொடன்ட் குருமூர்த்தி சொல்லீட்டார். திராவிடக் கட்சிகளால பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகமே எந்திரிச்சி நிக்கப் போகுதூன்னு கப்ஸா வுட்றார்.

தமிழன தமிழன்தான் ஆளணும், மலயாளிய மலயாளிதான் ....அதப்பத்தீல்லாம் பேசவரல.இது நாள் வரை துரும்பக்கூட கிள்ளிப்போடாத உச்சம், பூரா தமிழ்நாடே எனக்குத்தான்னு மேடைல நின்னு கூவறப்போ கூசுதுடா. ங்கொய்யால.மொதல்ல ஒழுங்கா வரியக்கட்டுங்கடா. அப்பால சிஸ்டர சரிபண்ணலாம்.