Wednesday, March 25, 2020

லாக்டௌன்21

எங்கள் பெங்களூர் அப்பார்ட்மெண்ட் பில்டிங்ல ’வொர்க் ஃப்ரம் ஹோம்’ பண்ணும் இளந்தாரிகளின் தொல்லை பெருத்துவிட்டது. அவரவர் வீட்டின் கக்கூஸுக்குள் உட்கார்ந்து சிகரெட் பிடிக்கிறார்கள். கேட்டால் புகைத்தால் தான் வெளிவரும் என்கின்றனர். உபயோகித்த நீர் வெளியேறும் பைப்கள்/வெண்டிலேட்டர்கள் மூலம் மற்ற தளங்களின் கக்கூஸ்/பாத்ரூமுக்குள் இலவச புகைச்சேவை. மறந்து கதவைத்திறந்து வைத்தால் அறைக்குள்ளும் புகை வாசம் மண்டுகிறது. கண்டதையும் ஆன்லைனில் ஆர்டர் பண்ணி இல்லை நடந்துபோய் வாங்கிக் கொண்டு வந்து கீழ் வீடுகளிலிருக்கும் உப்பரிகைகளில் போட்டு விடுகிறார்கள். கேட்டால் கை தவறி விழுந்து விட்டது என அழிச்சாட்டியம். பீர் பாட்டில்களை குடித்து விட்டு பின்னிலிருக்கும் நந்தினி கார்டனில் தூக்கி வீசுகின்றனர். ரெண்டு முறை ரெய்டு வந்து சென்றனர் கே.எம்.எஃப் லிருந்து. சில்லி சாஸ் பாகெட்டை பிரித்து எனது வீட்டு உப்பரிகையில் கொட்டி வைத்திருந்தனர். நான் கூட எதோ புறாக்கழிவாக்கும் என நினைத்து தண்ணீரை ஊற்றி கழுவி விட்டேன்.பிஸ்ஸா வாங்கி வந்து அதன் மேல் தூவும் பெப்பெர்/சில்லி பாக்கெட்டுகளை பிரிக்கிறேன் பேர்வழியென தூவி விடுகிறார்கள் அது ஜன்னல் வழி விழுந்து பெருந்தும்மல் இருமல் வருகிறது. விட்டால் போலீஸே வந்துவிடும் போலருக்கிறது இந்த பில்டிங்க்ல எவனுக்காவது கரோனா புடிச்சிருக்கான்னு கேட்டூ. 

லிஃப்ட் பயன்பாடு வேண்டாம் என்றால் கேட்பதேயில்லை (மொத்தமே நான்கு தளங்கள் தான் பில்டிங்கில்). டெலிவரி பாய்ஸ்களை பில்டிங் உள் நுழையுமுன் கைகளைக்கழுவி விட்டு வர ஏற்பாடாக சோப்புக்கரைசல் செக்யூரிட்டியிடம் கொடுக்கப் பட்டு கையெழுத்து போட்டு வீடு வருமுன் கழுவி விட்டு வர ஏற்பாடு செய்திருக்கிறது. வீட்டு வேலை செய்ய வரும் அம்மணிகளிடமும் அங்கனமே செய்துவிட்டு வர பணித்திருக்கிறோம். வீட்டின் மேல் தளத்தில் ஒரு ஜிம் உள்ளது. ஒரு உபகரணமும் ஒழுங்கில் இல்லை. எல்லாவற்றையும் பாழடிக்கின்றனர். இந்த இளந்தாரிகள் டம்பிள்ஸை தூக்கிக்கொண்டு தமது வீட்டில் வைத்து கொண்டு இல்லை எனச் சாதிக்கின்றனர்..வெயிங் மெசினை என்ன செய்தார்களென தெரியவில்லை. தும் தும்’மென்று விட்டிலிருக்கும் ஹோம் தியேட்டரில் பாட்டு போட்டு பில்டிங்ல எதோ கல்யாணம் போலருக்குன்னு நினைக்க வைக்கிறாங்யள். இவங்யளுக்காகவாவது கொரொனா மனசு வெச்சு பெங்களூரை விட்டு ஓடிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்டீல்லாம் கோள்மூட்றாங்யன்னு தெரிஞ்சு அசோசியேஷன் வாட்சப் க்ரூப்ல இந்த அங்கிள்கள் தொல்லை தாங்கலைன்னு மீம் போட்டு விடுறாங்ய. அடச்ச. #லாக்டௌன்21

Monday, March 23, 2020

கொரோனாடைரீஸ்

பெங்களூரில் லேடீஸ் பிஜி பாய்ஸ் பிஜிக்களை மூடச்சொல்லி உத்தரவு வந்து இரண்டு வாரங்களாகி விட்டது. அவர்களை சொந்த ஊருக்கு செல்லும்படி கேட்டுக்கொண்டு சுற்றறிக்கை எல்லா பிஜிக்களுக்கும் கையளிக்கப்பட்டது. இருப்பினும் பல பிஜிக்களில் இன்னமும் பெண்கள் உலவிக்கொண்டு தானிருக்கின்றனர். வீதிகளில் கூட்டம் இல்லை. இருப்பினும் பீஜிக்கள் இன்னமும் நிறைந்து தானிருக்கின்றன. அவற்றின் சுத்தம் சுகாதாரம் பற்றி கேட்கவே வேணாம். டூ ஷேரிங், த்ரீ ஷேரிங் என்ன 4 ஷேரிங் உள்ள பீஜிக்களின் நிலைமை சில சமயங்களில் நான் கண்டதுண்டு. துணி துவைக்க மொத்தமே நாலு வாஷிங் மெஷின்கள் மட்டுமே. அதற்கு மாபெரும் க்யூ. போதும்டா சாமி என கைகளால் துவைக்கும் அம்மணிகளின் கதைகளை நான் கேட்டதுண்டு. கொரோனா மட்டுமல்ல, டெங்கு பரவலும் மிக அதிகமாகக் காணப்பட்டது இம்மாதிரி பீஜிக்களால் தான். 

மேலும் ஆன் சைட் போய்விட்டு திரும்பும் மக்கள் அதிகம் பெங்களூரில். வந்தாலும் அறிவிக்காது தெரிவிக்காமல் கமுக்கமாக இருந்து விடும் பார்ட்டிகளும் உண்டு. பெங்களூர் ஏர்போர்ட் மூடியாயிற்று என்று வதந்தி பரவிவிட்டது, பெரும்பாடு பட்டு அதை இல்லை எனக்கூறிட ட்வீட்டுக்கு மேல் ட்வீட் போட்டு விளக்கியது ஏர்போர்ட் நிர்வாகம். இண்டிகோ பதிவு செய்த டிக்கெட்டுகளை இன்னொரு நாளுக்கு இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என ஒப்பாரி வைக்காத குறையாய் மெயில் மேல் மெயில் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலை இன்னமும் தொடர்ந்தால் உள்ளூர் விமான நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படல் உறுதி. ஏற்கனவே பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

வெளிநாடு போய்விட்டு பெங்களூர் திரும்பி வந்த தம்மகனை டெஸ்ட்டுகளிலிருந்து மறைத்ததாக ரயில்வேயில் வேலை பார்க்கும் அன்னை கைது, மேலும் வெளிநாடு சென்று வந்த இன்னொரு நபர் யாருக்கும் சொல்லாமல் மெஜ்ஸ்டிக்கில் பேருந்து ஏறி குடகு வரை பயணித்திருக்கிறார். அவருடன் முன்பதிவு செய்யாத 40 பேரும் பயணித்திருக்கின்றனர். உள்ளூர் போலீஸ் ட்வீட் போட்டு பஸ் நம்பரை சொல்லி இதில் இன்னதேதியில் பயணித்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனை செல்லவும் எனக்கெஞ்சுகிறது.

அத்தனை தகவல் தொழில் நுட்ப ப்ராஜக்ட்களும் தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போடப்படுகின்றன. இந்தியா பெரும்பாலும் அவுட்சோர்ஸிங் என்ற அடிப்படையில் மட்டுமே தகவல் தொழில் நுட்ப துறையில் சம்பாதிக்கிறது. அத்தனை வேலைகளையும் செய்ய அலுவலகம் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் கீழ் நிலையில் பணிபுரியும் டெக் சப்போர்ட் மற்றும் கால் செண்டர் ஊழியர்களுக்கான கேப்/வேன் வசதிகள் குறுக்கப்படுகின்றன. மூன்று ஷிஃப்டுகள் செய்தே ஆகவேண்டிய ஊழியர்களுக்கு அப்/டவுன் வசதிகள் ஒரு முறை மட்டுமே என்று ஆக்கப் பட்டிருக்கிறது. விளைவு கூடுதல் நேரம் பணியிடத்தில் அமர்ந்தாக வேண்டும். அலுவலகங்களில் சானிட்டைஸர்/மாஸ்க் தட்டுப்பாடு மேலும் பகல்/இரவு என நாள் முழுதும் ஏசியில் அமர்ந்து பணிபுரிய வேண்டிய கட்டாயம். கொஞ்சம் சீனியர் ஊழியர்களுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதி. அதிலும் நெட் கனெக்‌ஷன் செலவுக்கு பெரும்பாலும் பணம் கிடைப்பதில்லை. டெலி ப்ரசென்ஸ் வசதிகளுக்கு அலுவலகம் சென்றே ஆக வேண்டிய கட்டாயம்.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரின் மனத்திலும் ஒரு தேக்க நிலை வந்து விட்டதை கண்கூடாகக் காண முடிகிறது. மனிதப்பண்பு என்பது கிஞ்சித்தும் காணக்கிடைக்காத துறை த.தொ.துறை. இன்னமும் மனிதர்களை அந்நியப்படுத்தித்தான் வைக்கிறது இன்றைய நிலைமை. இத்தனை காலம் கட்டமைத்த அத்தனையையும் நிர்மூலமாக்கி விட்டுத்தான் செல்லும் போலிருக்கிறது இந்தக் கொரோனா . எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க....... .#கொரோனாடைரீஸ்

Sunday, March 15, 2020

#வாத்தீரெய்டூடா

 
ஆனா ஆவன்னா ...வாத்தீ ரெய்டூ... ங்கொம்மா.. செமடா .அற்புதமான ராப்! முதல் ரெண்டு பாட்டு சொதப்பினவொடன லோகேஷ் , தம்பி அநிருத் மேல கரோனாவ ஏவி விட்டு கடிக்க விட்டார் போலருக்கு. துள்ளி எழுந்திரிச்சு மந்திரிச்சு விட்டமேரி அடி பொளந்துட்டான்.. ங்கொய்யால இதாண்டா பாட்டு. என்ன ஒண்ணு, ராப்’ல அதிகமா தமது யோசனை, தமது கற்பனை கலந்து எதுவும் செய்ய விடாத ஜானர். அதான். அப்டியே செய்ன் ரியாக்‌ஷன் மேரி இதுக்கு முன்னால வந்த பேட்ட ராப்’ வர இஸ்த்துக்கினு போயிரும். இருந்தாலும் இண்டர்ல்யூட்களில் வரும் ‘தரநாநா தரநாந’ ஹம்மிங் அடிநாதமாக ஒலித்து (இந்த ஹம்மிங் மட்டும் தம்பி பாடீருக்கார் போல) பாலமாக அமைந்து இரண்டு சரணங்களை இணைத்து ஒர் மென்மையை உருவாக்குகிறது. தெருக்குரல் ‘அறிவு’ இவர கள்ளமெளனி பாட்டுலயே அடையாளம் காண வைத்துவிட்டார். அதான் எமினெம் ஸ்டைல்ல இங்க ஒரு ராப்பு. ஆப்பு. எவ்வளவு சொன்னாலும் ராப்’ ஜானரில் அதிகம் கற்பனை கலக்கவியலாது அதனால் வரிகளை அழுத்தமாக எழுதித்தான் கேட்கவைக்க இயலும். அதுவும் இங்க இழுக்குது. சரி பரவால்ல.

”தெருவில் நடக்கிற ,
கொடுமையக்கடக்குற,
தலை முறை படிக்கிற
தமிழில் இருக்குது
பொதுமுறை எதுக்குன்னு
விலகிற பழக்கம் எனக்கில்லை
எப்போதும் என்னுடம் இருக்கும் பட்டாளம்.
உண்மை உரைக்கும் ,
கட்டாயம் மண்ணைத் திரட்டும்,
பேதங்கள் இல்லாதிருக்கும்,
நாடெங்கள் கண்ணாயிருக்கும்,

மேலும் “கற்பி ஒன்று சேர்.! ” இந்த வரிகளை மெச்சலாம், 



அருணகிரிநாதர் ஆரம்பிச்சு வெச்சார் இந்த ராப் ஸ்டைல. நம்ம ரஹ்மானின் பேட்ட ராப்பிற்கு பிறகு (காதலன்) ,அவராலேயே மீண்டும் உருக்கொள்ள வைக்க வியலாத ராப் (ஓக்கே கண்மணி,அச்சம் என்பது மடமையடா’ முயன்று பார்த்தார், எடுபடவேயில்லை ) இங்கு உருவெடுத்து அடித்துப் பொளித்திருக்கிறது. ‘வாத்தீ ரெய்டூடா’.. ங்கொய்யால,.யார்கிட்ட? ஹ்ம்...! இது பீஸ்ட் மோடூ.! சமத்துக்குட்டீ :) இந்த வாத்தீ கிட்ட வெச்சுக்காத , ஓரம் போய்டூ கெழபோல்ட்டுகளா,,,ஹிஹி.. #வாத்தீரெய்டூடா

Saturday, March 14, 2020

கரோனா

பகலிலும் ஜகஜ்ஜோதியாக எரிந்து கொண்டே யிருக்கும் பெங்களூர் கேஎலெம் மால் அடைத்துக் கிடக்கிறது. ஒரு நாள் போலும் அடைக்காதவரே அடைத்துவிட்டனர். பிரிட்ஜ் ஏரியாவே வெறிச்சோடிக் கிடக்கிறது. வழக்கமாக சாலையைக் கடந்து அந்தப்பக்கம் செல்ல கிட்டத்தட்ட ஐந்து நிமிடத்துக்கும் கூடுதலாக காத்துக்கிடக்க வேணும். இன்றோ ரெண்டு செகன்டுகள் போலும் ஆகவில்லை. காவிரிக் கலவரம் ஏற்பட்ட நாளன்று தான் கடைசியாக இங்கனம் பிரிட்ஜ் ஏரியா முழுக்க பாலை போல வெறிச்சோடிக்கிடந்தது. பேருந்துகள் வழக்கம் போல இயங்கத்தான் செய்கின்றன. ஆனால் அதிலேற ஆட்கள் தான் இல்லை. மல்லு ஒருவரின் சிறிய அங்காடி ஒன்று நடுத்தரமானது, அவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. எங்களையும் மூடச் சொல்லீருவாங்களோ என்று. ‘ஜனம் கூடுன்ன ஸ்தலங்களெயெல்லாம் மூடணுன்னாணு பறஞ்சது, ஙங்களையும் அடச்சுபூட்டான் பறயுவோ?’ என்கிறார் முகமூடியை சரிப்படுத்திக் கொண்டே. பிள்ளைகளுக்கு லீவு விட்ட கு‌ஷியில் வீட்டின் கீழ் தளத்து கார் பார்க்கிங் முழுதும் ரணகளமாக ஆகிக் கொண்டிருக்கிறது. இன்னமும் ஒரு வாரம் இருக்கிறது அவர்களுக்கு விடுப்பு முடிவதற்கு. அதற்கு மேலும் திறக்கப்படும் என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. ஓட்டல்களில் ஆட்களே இல்லை. ஈயாடுகிறது.

இருப்பினும் முனிசிபாலிட்டி வேலையாட்கள் வழக்கம் போல சாலைகளை கூட்டிப்பெருக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். வேலை பெரும்பாலும் வீட்டிலிருந்த படியே நடந்து கொண்டிருக்கிறது தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு. மாஸ்க் , மற்றும் சனிட்டைஸர்களுக்கு பக்கத்து மருந்துக்கடையில் சொல்லி வைத்திருக்கிறேன், ஸ்டாக் வந்தால் தெரிவிக்கிறேன் என்றார். ஃப்ளிப்கார்ட், அமேசானில் ஆணை கொடுக்கலாமென்றால் , நண்பர் ஒருவர் வாங்கி விட்டு இரண்டு நாட்கள் கூட தங்கவில்லை ஓட்டை விழுந்து விட்டது என்றார். அதிலும் டூப்ளிகேட். ஒரு சின்ன கண்ணுக்கு போலும் தெரியாத நுண்விசக்கிருமியால் ஒட்டு மொத்த மனித இனத்தையே மாதக்கணக்கில் முடக்கிப்போட முடியுமெனில் இத்தனை காலம் அறிவியல் சாதித்ததென்ன? #கரோனா

Wednesday, March 11, 2020

வாத்தி கமிங்



'வாத்தி கமிங்’ எங்க கமிங், ஃப்ளாப் கமிங், மவனே நீ இப்டியே அடிச்சிக்கிட்டு இருந்தேன்னு வெச்சுக்க, உன்னய அப்புறம் அப்டியே சரி வேணாம் . ‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’லல்லாம் இதப்போல பொருளற்ற சொற்கள் இல்லை. இருப்பினும் கேட்பவரை ஆடச் சொல்லும்,கிளப்பி விடும். இன்னும் தம்பி அந்த மரண மாஸுலருந்து வெளிவரவேயில்ல போலருக்கு. கொஞ்சம் இடைவெளி விட்டா நல்ல பாட்டு வர வாய்ப்பிருக்கு, தர்பார்ல ஒரு பாட்டு கூட சரியில்லை. இங்கயும் அப்டியே. சில வாத்தீங்கல்லாம் காலேஜ்ல அன்னிக்கு வராம இருந்தா இந்த மாதிரி தான் அர்த்தமேயில்லாம பாடத்தோணும். ஒண்ணும் சொல்லிக்கிர்றா மேரி இல்ல. 


ஒரே ஆறுதல். புல்லாங்குழலை அடிப்படையாக வைத்து குத்துப்பாடு போடலாம்னு காமிச்சதுக்கு வேணா பாரட்டலாம். இருந்தாலும் இதே பாணில கோவா ராப்’பர் ரெமோ ஃபெர்னாண்டஸ் ஒரு பாட்டு போட்ருக்கார். அதுவும் ஆட்டப்பாட்டு தான். பெரும்பாலும் டான்ஸ் ப்ரோக்ராம்லல்லாம ஆடி ஆடி போரடிப்பானுங்க.! இங்க 02:30ல ஆரம்பிக்கும் அந்த புல்லாங்குழல் வழி பாடுவது ரெமோ ஃபெர்னாண்டஸ் தான். என்ன கொஞ்சம் இங்க ஃபாஸ்ட் ட்ராக்ல போட்டதால அடையாளம் தெர்ல,ஹிஹி. #வாத்திகமிங்


Sunday, March 1, 2020

#சீரியல்பாட்டூ

எந்த சீரியல்களையும் நான் பார்ப்பதில்லை. அதற்கு நேரமும் வாய்ப்பதில்லை என்பது தான் நிஜம். இருப்பினும் இப்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடைப் பொருட்களுக்கான விளம்பரங்களை விட சன் டீவியின் சீரியல்களுக்கான விளம்பரங்கள் தான் பெருகிக் கிடக்கின்றன. பார்த்தே ஆக வேண்டும் இல்லை யெனில் மறுபிறப்பில் கழுதையாகப் பிறப்பாய் என்று பயமுறுத்தாத குறை தான். இருப்பினும் அந்தந்த சீரியல்களின் முகப்புப் பாடல்கள், சொல்லப்போனால் ஜிங்கிள்ஸ்களின் (விளம்பரங்களுக்கான பின்னணிப்பாடல்கள்) தரத்தில் மிகநேர்த்தியாகவே வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்றே சொல்வேன். நிறைய சீரியல்களின் பாடல்கள் மனதைக் கவரும் விதமிருக்கின்றன என்பதே உண்மை.

அதிலும் ஜானர்கள் (பாணிகள்) வைத்துக்கொண்டு இசைப்பது என மெனக்கெடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. மின்னலே’ சீரியலுக்கான பாடல் கொஞ்சம் வெஸ்ட்டர்ன். நாயகி சீரியலுக்கான பாடல் ‘வா வா சந்தோசமா’அப்டியே ரஹ்மான் ஸ்டைல். ராப்’ பாடகரின் குரலில் பாடியது போல அத்தனை புதுமையானது. மகராசி முகப்பு பாடல் ராசைய்யா ஸ்டைல். அப்டியே மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு போட்டது போல அருமை. !அக்னி நட்சத்திரம் சீரியலின் பாடலை அப்படியே முழு மூன்று நிமிடத்துக்கு இசைத்தால் அருமையான மெலடிதான். யாரிசைத்ததப்பா ?... ராசாத்தி சீரியலுக்கான முகப்புப்பாடல் யுவன் இசைத்திருந்த ‘கோவா’ வில் ஒரு பாட்டு போலவே ரஸ்டிக் சென்ஸோட,சொம்மா அதையே காப்பி பேஸ்ட் அட்சா மேரி கலக்கல். இறங்கி வேல பார்க்கிறானுங்க மச்சா. கண்மணி சீரியலும் அப்படியே ராசைய்யா ஸ்டைல். புதுசா எதும் யோசிக்காம வில்லேஜ் ஸ்டோரி தானே அதான் அப்டியே அபேஸ்.! ரோஜா சீரியலுக்கு பச்சமலப்பூவு தான் தாளம். ஹ்ம்.. கேக்கலாம். சித்தி இன்னமும் அதே பழைய பாட்டையே போட்டுக்கிட்டு இருக்கார். அதனால அது வேணாம். ’கல்யாண வீடு’ம் வழக்கமான தமிழ்ப்பாட்டு.

எவ்வளவுதான் பாட்டுகள் வந்தாலும் அது எஸ்பிபி பாட்னா மேரி இருக்குமா.. கொண்டாங்கடா பாலுவ.. அதான் அழகு, எவ்வளவு நாளாச்சு இந்த பாலசுப்பிரமணியன் அண்ணாத்த பாடி. அதான் இருக்கதுலயே டாப்பு.. அழகம்ம்மா. எத்தனயோ பேர் பாடி வெச்சிட்டு போனாலும் அது பாலு பாடினா மேரி இருக்குமோ?! அண்ணாமலையாருக்கே பாலுண்ணா பாட்டுதான் பிடிக்குது,..ஹ்ம்.. #சீரியல்பாட்டூ.