Sunday, May 30, 2010

நாம் 'டம்ப்ளர்'

நாம் 'டம்ப்ளர்'

இளைஞனுக்கு பிடித்துப்போனது சிங்கம்
கிழவனுக்கும் பிடிக்குது பெண் சிங்கம்
சிறுவர்களுக்கு பிடித்தது முரட்டு சிங்கம்
அசிங்கம்..!

Saturday, May 29, 2010

மல்லிகை



அம்மா..'நான் பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டு வாரேன்'.சரிப்பா.என்று அம்மா அடுக்களையில் வேலையிலிருந்தபடியே குரல் கொடுத்தாள்.மல்லிகை இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகிறாள்.வீட்டில் அப்படி ஒன்றும் வசதியில்லை.அப்பாவுக்கு ஜவுளி வியாபாரம் , அதுவும் அவர் வயதை விடவும் கிழமாகிவிட்ட சைக்கிளில் பின் 'கேரியரில்' கட்டி வைத்து சிறு கிராமங்களில் கூவி விற்று வரும் வேலை.அப்படி ஒன்றும் பெரிய வருமானம் பார்த்துவிட இயலாது.அம்மாவுக்கு அடுக்களையே கதி.


நேற்றுப் பொங்கிய சோறில் நீரிட்டு வைத்திருந்ததை தூக்குசட்டியில் நிரப்பிக்கொண்டு மல்லிகை புறப்பட்டாள்.அடுத்த தெரு சினேகிதி ரோஜாவைக்கூட்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.ரோஜா படிப்பதோ பெரிய தனியார் பள்ளியில்.நாள்தோறும் டியூஷன்,ஸ்பெஷல் கிளாஸ் என்று எப்போதும் பிஸியாக இருப்பதாய் காட்டிக்கொள்வாள்.ஆனால் பள்ளிக்குச்செல்வது இருவரும் ஒன்றாகத்தான்.மல்லிகை படிப்பதோ வெறும் மா நகராட்சிப் பள்ளியில் தான்.இருவரின் பள்ளியும் அருகருகில் தான்.


'வேட்டைக்காரன்' பார்த்தியாடி?..ரோஜா தான் கேட்டாள்.'இல்லப்பா' , நான் அதெல்லாம் பார்க்கல, நேத்து நடத்தின பாடத்தப் படிக்கவே நேரம் சரியாகிருச்சி.அதுவும் வீட்டில கரண்ட்பில் கட்டாததால ஃபியூஸை எடுத்துட்டுப்போய்ட்டாங்க...லாந்தர்ல தான் படிச்சிக்கிட்டு இருந்தேன்.'நான் பார்த்துட்டேண்டி,அந்தப் படத்தப் பத்தி இன்டெர்னெட்'ல வந்த எஸ்.எம்.எஸ் பார்த்தியா ?அவ்ளவ் ஜோக்..அத உடனே என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்க்கும் ஃபார்வர்ட் பண்ணிட்டேன்.ஒரே கூத்து தான் போ.ரோஜாதான் பேசிக்கொண்டே வந்தாள்.மல்லிகையின் கவனமெல்லாம் நேற்றைய பாடத்தின் தொடர்ச்சியையும், அத்ற்கு தயார்படுத்தி வெச்சிருந்ததையும் மனது அசை போட்டுக்கொண்டே இருந்தது.பத்தாவது படிக்கிற புள்ளக்கி செல்ஃபோன் எதுக்கு ?


பேசிக்கொண்டே வந்தவள் மீண்டும் செல்ஃபோனில் மூழ்கிவிட்டாள்.காலர் ட்யூன்ஸ் ஏதும் புதுசா வந்திருக்கான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன், வந்திருந்தா 'டௌன்லோட்'பண்ணிருவேன்.நேற்று கணிதப்பாடத்தில் டீச்சர் எடுத்த 'டீ மொர்கன்ஸ்' "லா"வை மல்லிகை மறுபடி ஒருமுறை ஞாபகப்படுத்தி மனதிற்குள் ஓட விட்டுக்கொண்டாள்.இன்று டீச்சர் கேட்டால் சொல்லவேண்டுமென்று.


ரோஜா நடந்து கொண்டிருக்கும் போதே பையைக்குடைய ஆரம்பித்தாள்.'என்னடி என்ன தேட்ற' இல்ல நேத்து 'பில்டிங் ஃப்ண்ட்' கட்டின ரசீது காட்டினால் தான் டீச்சர் உள்ள விடுவேன்னு சொன்னாங்க , அதைத்தான் தேட்றேன்..ஆங் கிடைச்சிருச்சி.மல்லிகை தன் கிளாஸை நினைத்துப்பார்த்தாள்.பல நாட்கள் வகுப்பு நடப்பது என்னவோ மரத்தடி தான்.'க்ளாஸ்' இருக்கு..ஆனால் அதுக்குப்பக்கத்திலேயே 'சத்துணவுக்கூடமும்' இருக்கிறதால வர்ற புகையும்,வாசமும் அவர்களை அங்கு உட்காரவிடாமல் விரட்டி அடித்தது.


'டை'யை சரி பார்த்துக்கொணடே வந்தாள் ரோஜா,மல்லிகையோ நேற்று அறுந்த செருப்பின் வாரை இழுத்திப்பொருத்திக்கொண்டாள்.இன்னும் கொஞ்ச தூரம்தானே ஸ்கூல்.போய்ட்டால் உட்காந்துரலாம், அப்புறம் செருப்பை சரி செய்ய வேண்டியதில்லை.ரோஜாவின் பள்ளி போல கட்டமைப்பு வசதியோ,உயர்ந்த கல்வித்தரம் கொண்ட ஆசிரியர்களோ,பல்வேறு வகையான கற்பிப்பு முறைகளோ இல்லை மல்லிகையின் பள்ளியில்.'பாப்பாத்தி மாடு வந்துருச்சி..கட்டுனா கட்டு..கட்டாட்டாப் போ'ங்ற மனப்பான்மைதான்.ஒழுங்கா டெய்லி அட்டெண்டன்ஸ் கூட எடுக்கறதில்ல..அதுலயும் பல வாத்தியார்கள் மட்டம் போடுறதும் சாதாரண விஷயம்.பாடங்கள் அப்படியே மிஞ்சிப்போகும்,லீவு முடிஞ்சு வந்த பிறகு அவ்வளவையும் அவசர அடியாஎடுத்து முடிக்கிற கூத்தும் பழகிப்போச்சு மல்லிகைக்கு,இருந்தாலும் அவள் தன் நிலை உணர்ந்து அன்றன்று நடத்தும் பாடங்களை விடாமல் குறிப்பெடுத்துக் கொண்டு அன்றே படித்து விடுவாள்,நாளைக்கென்று எதையும் விட்டுவைக்காமல்.


அம்மாவும் மல்லிகை படிக்க உட்கார்ந்து விட்டால் அவ்வளவாகத் தொந்தரவு செய்வதில்லை.அவள் காலத்தில் பள்ளி என்பது சிலருக்கே சொந்தமான விஷயம்.மகள் படிக்கிறாளே என்ற மகிழ்ச்சியில் அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வாள்.


மல்லிகையின் அப்பாவும் அவளை எப்படியாவது ரோஜாவின் பள்ளியில் சேர்த்துவிட வேண்டுமென்று பெரு முயற்சி செய்து பார்த்தார்.பின்னர் தான் தெரிந்தது,அவங்க கேக்குற ஃபீஸுக்கு தொழிலே தொடங்கிறலாம்னு.'நீங்க குடுக்கறேன்னு சொல்ற ஃபீஸ் எங்களுக்கு 'கட்டுபடியாகாது' என்று நிர்வாகத்திடமிருந்து பதில் வந்தது அவள் தந்தைக்கு.'கட்டுப்படியாகாது'ன்னு என்பது எங்களைப்போன்ற வியாபாரிகளின் வார்த்தை, எப்படி கல்வி போதிப்பவரிடமிருந்து வருகிறது என்று விக்கித்துதான்போனார்.அதானால் அவளை மா நகராட்சிப்பள்ளியிலேயே சேர்த்து விட்டார்.'நல்லாப் படிக்கிற புள்ள எங்கயும் படிக்கும்'ங்ற நம்பிக்கைதான்.


பேச்சைத்தொடர்ந்தாள் ரோஜா..'நேத்து மானாட மயிலாட' பார்த்தியாடி , ஆட்டம் கலக்கிட்டாண்டி' உனக்குத்தான் டியூஷன் இருக்குமே,அப்புறம் எப்படி பார்த்த.?' ஆமா இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா.?,செல்லுல மிஸ் கால் குடுக்க சொல்லிட்டு அதை அட்டெண்ட் பண்றா மாதிரி டீச்சர் கிட்ட சொல்லிட்டு ஓடிற வேண்டியதுதான்.'அப்ப படிப்பு' ' அதான் ரிவிஷன் டெஸ்ட் வெப்பாங்கள்ல..அப்ப படிச்சிக்கிர்றது' என்றாள் ரோஜா.எல்லா சேனலும் பார்த்துருவேன்.அதுலயும் டான்ஸ் ப்ரொக்ராம்' விடவே மாட்டேன்.

மல்லிகையின் மனதில் 'படிப்பு' என்ற ஒற்றை சேனல் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.

ஹேய் ..இந்த வீக்கெண்ட்'ல லைஃப்ஸ்டைல்'ல புது டிசைன் சுடிதார் எல்லாம் வந்திருக்காம்..நாங்க எல்லாம்போறோம்.நீயும் வாறியா?என்றாள் ரோஜா.'இல்லடி ஞாயிற்றுக்கிழமைகள்ல அப்பாவுக்கு உதவியா துணிகளை கட்டி ஒழுங்கு பண்றதுக்கும் , இந்த வாரப்பாடங்கள மறுபடி ஒரு தடவை ரிவிஷன் பண்றதுக்குமே நேரம் சரியாயிருக்கும்.'அதனால என்னால வர முடியாது.' மல்லிகை.


ஆயிற்று.நாட்கள் கடந்து முழுப்பரிட்சையும் வந்தது.பல முறை படித்து வைத்திருந்ததால் எந்தவித குழப்பமோ பயமோ இல்லாமல் இருந்தாள் மல்லிகை.பாடங்களை மீள வாசித்து மனனம் செய்தவற்றை அசை போட்டுக்கொண்டிருந்தாள்.விரைவில் நினைவுக்கு வராதவற்றை மற்றவைகளோடு தொடர்புபடுத்தி வைத்துக்கொள்வாள்.அதனால் சிரமமான பாடக்குறிப்புகள் அந்த சங்கிலித்தொடர் முடிவடையும் போது சரியாக ஞாபகத்திற்கு வரும்.எவ்விதக் கலக்கமுமின்றி பரீட்சை எழுதி முடித்தாள் மல்லிகை.ரோஜாவோ கடைசி நேரத்தயாரிப்பில் அனத்தும் மலை போல் குவிந்து கிடப்பதை நினைத்துக் கவலைப்பட்டு மிகவும் சிரமத்தினூடே பரீட்சை எழுதி முடித்தாள்.


முடிவுகள் வெளியாகும் நாள், அன்றும் வழக்கம் போல் ரோஜா 'செல்'லும் கையுமாக திரிந்து கொண்டிருந்தாள், தொடர்ந்து ஒலி எழுப்பிய செல்லின் அனைத்து எஸ்.எம்.எஸ் களையும் ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருந்தாள் ரோஜா.எந்த சேனலையும் பார்க்க விருப்பின்றி அணைத்தாள் டீ.வி.யை..


செய்தித்தாள்களிலும் , அவள் பார்க்கும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் மல்லிகை 'பேட்டி' கொடுத்துக்கொண்டிருந்தாள்.'''ஆம்''' மல்லிகை மானிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள்.


Tuesday, May 25, 2010

மெய் பதினெட்டு

மெய் பதினெட்டு

மரமில்லா பூமி வேண்டும்

அமில மழை வேண்டும்
கோட்டானின் சங்கீதம் வேண்டும்
நித்தம் பூமியில் சண்டை வேண்டும்
மண்ணும் விண்ணும் சிவக்க வேண்டும்
ஒவ்வொருவனுக்கும் ஒரு மதம் வேண்டும்
மனித நேயம் ஒழிய வேண்டும்
அணு ஆயுதம் பரவல் வேண்டும்
தேசியப்பறவை வல்லூறென வேண்டும்
ரத்தமே ஆறென வேண்டும்
என்றும் ஆறாக் காயம் வேண்டும்
பருவம் அற்ற பாலை வேண்டும்
இல்லான் வகுத்ததே வாய்க்காலென வேண்டும்
மனிதன் மீண்டும் குரங்காக வேண்டும்
ஆப்பிள் மரத்திலிருந்து நியூட்டன் விழ வேண்டும்

Sunday, May 23, 2010

வைரமுத்து'வின் ராவணன் பாடல் வரிகள்..!

வைரமுத்து'வின் ராவணன் பாடல் வரிகள்..!


கோடு போட்டா.. கொன்னு போடு..

வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..

வில்லப் போல வளஞ்ச கூட்டம்

வேலப் போல நிமிர்ந்து விட்டோம்
சோத்துல பங்கு கேட்டா அட எலயப்போடு எலய
சொத்துல பங்கு கேட்டா, அவன் தலய போடு தலய
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்தான் கேக்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது

பாம்பக் கூடப் பழகி பசும் பால ஊத்தும் சாதி

தப்பு தண்டா செஞ்சா, அட அப்ப தெரியும் சேதி
கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்லாப்பெத்த வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஊத்த சோத்து வீரமடா

கோடு போட்டா.. கொன்னு போடு..

வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..


எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்

எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒரைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்காணி போன அட எவனும் எழ இல்ல
மானம் மட்டும் போனா நீ மைக்கா நாளே எழ
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்

சீயான் காட்டத் தோண்டிப் பாத்தா

செம்மண் ஊத்து ரத்தம்தான்
கோடு போட்டா.. கொன்னு போடு..
வேலி போட்டா.. ஹெய் வெட்டி போடு..

நேத்துவரைக்கும் உங்க சட்டம்

நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்....!

Saturday, May 22, 2010

பறப்பு.

பறப்பு.

தயார்படுத்திக்கொண்டிருந்தேன் 27ஆவது முறையாக.ஏன் இந்தத் தயார்படுத்தலின் போது மட்டும் இத்தனை ஆர்வமும்,பயம் கலந்த எதிர்பார்ப்புமோ தெரியவில்லை.ஆனால் இரண்டும் இருந்தது என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.


பெட்டியைக்குடைந்தேன்.செல்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் சரியாக வைக்கப்பட்டிருந்தாலும் மறுபடி ஒருமுறை எடுத்துச்சரி பார்த்தேன்.ஒரு கணம் மூழ்கிப்போனேன் சிந்தனையில்,ஏன் இந்தப் பறப்பு?ஆனால் அது இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துப்போய் விடும் போலத் தோன்றியது.முந்தைய பறப்புகளின் போது இல்லாத ஒரு உணர்வு எனை ஆட்டிப்படைத்தது.


உடையை ஒரு கணம் சரி பார்த்துக்கொண்டேன்.பொத்தான்கள் சரியாகப்போடப்பட்டு வழியில் எந்த வித இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் போலத் தோன்றியது.மனதில் ஒரு நம்பிக்கை உண்டானது.


நான் இதைப்போல எத்தனையோ கணங்களை அனுபவித்திருக்கிறேன்.அவைகளை அனுபவிப்பதே சுகம்.அவை அனைத்தும் நடந்து முடிந்தபின் பணி ஏதுமின்றி ஓய்வெடுக்கும் போது சிறிதாக அசை போட்டால் உள்ள சுகமே தனி.ஆனால் அவை அனைத்தும் வேண்டியதாயிருந்தது எனக்கு,


பறப்புக்குப்பின் சென்றடையும் இடத்தைப்பற்றி சிந்தித்தேன்.முந்தைய பறப்புகளின் முடிவாகத்தான் இதுவும் இருக்கும்.மாற்றங்கள் ஏதும் இராது.ஆனாலும் சில நாட்களில் எதிர்கொள்ளும் எதிர்பாராதவைகளைப்பற்றி நினைத்தால் ஒரு கணம் திடுக்கிடும்.


எனைப்போல் அந்த இடத்தை வந்தடையும் மற்றவர்களை நினைத்துப்பார்த்தேன்.அவர்களும் என்னைப்போலவே தயார் படுத்திக்கொண்டு வந்திருப்பார்கள் என்று தோன்றியது.ஆனால் அவர்கள் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகிவிட்டனர்.இதுவே அவர்களின் பணியாகிப்போனதால்.


எனக்குத்தான் திடுக்கிடும் உணர்வு தலைப்படும்.அதைச்சமாளிக்கும் திறனை சிறிது சிறிதாகப் பெற்றுக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.ஆனால் நானும் மற்றவர்களைப்போல் ஆகி விடுவேனோ என நினைக்கும் போது கவலை தோன்றியது.எதைப்பற்றியும் சிந்தனை இல்லாது வெற்றிடத்தை நோக்குதல்,எதையும் மேம்போக்காக எடுத்துக்கொள்தல்,எத்தனை இடையூறு வந்தாலும் சமாளிப்பதாகக் கூறிக்கொண்டு தள்ளிப்போடுதல், போன்ற செயல்களை செய்யக்கூடிய சோம்பலுற்றவனாக மாறிவிடுவேனோ என்று நினைக்கும் போது..ஆனால் அது தான் நியதி என்றால் என் ஒருவனால் மட்டும் மாற்றி அமைக்க முடியுமா ?


ம்.எதைஎதையோ நினைத்து காலம் தான் விரயமாகிக்கொண்டிருந்தது.ஊர்தியைப்பற்றிக் கவலையே இல்லாமல் இருந்து விட்டேன்.சென்று அதையும் சரிப்படுத்திவிட்டு எனக்கென உள்ள பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிக்கிளம்பும்போது...


அம்மா கூவிக்கொண்டே வந்தாள்."ஏண்டா ஆஃபிஸுக்கு இந்தப் பறத்தம் பறக்கிற ?.இந்தக்காப்பியக் குடிச்சிட்டுத்தான் போய்த்தொலையேன்"ன்னு...!

Sunday, May 2, 2010

நட்பாராய்தல்

காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது எனக்கும் என் பிஸிக்கும் இடையே.கழுதை மட்டுமல்ல "லாஜிக்"கும் உதைக்கும் என அப்போதுதான் தெரிந்தது.நாமளா ப்ரோகிராம் எழுதுறது ஈஸி,எவனோ எழுதி வெச்சிட்டுப்போனத "மொடிஃபை" பண்ண எங்கிட்ட குடுத்துட்டானுங்க..தொண்டையில் வந்து அடைச்சிக்கிட்டிருந்தது.ஒருவழியா அந்த முடிச்ச அவிழ்க்கறதுக்குள்ள ராத்திரி பத்து மணி ஆயிருச்சி,...தனியா நடந்து கொண்டிருந்தேன் சாலையில்.."ராத்திரி பதினோரு மணிக்கு மேலே ரோட்டில உலாத்துறது யார்யார் தெரியுமா ?நாயும் சாஃப்ட்வேர் ப்ரொக்ராமருந்தான்"சீஃப் சொன்னது ஞாபகம் வந்து தொலைத்தது.ஓட்டமும் நடையுமாக ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தேன்.யப்பா கடைசி வண்டியாவது கெடைக்கணுமேன்னு "லினஸ் டொர்வால்ட்ஸை" வேண்டிக்கிட்டு வந்து பார்த்தேன்.புறப்படத்தயாராக நின்றுகொண்டிருந்தது கடைசி வண்டி."அப்பாடா.." ன்னு ஒரு வெஜ் பர்கரும் ஃபௌண்டன் பெப்ஸியுமாக ரயில் பெட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.போய்ச்சேர்றதுக்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகும்..கனவிலும் மறக்காத ஸ்டேஷன்கள் கடந்து கொண்டிருந்தன.'ச்ச பேப்பர' புறப்படற அவசரத்தில ஆபீஸிலேயே விட்டுட்டு வந்துட்டேனேன்னு ..அது இருந்தா படிச்சிக்கிட்டே பொழுதக்கழிச்சிடலாம்..வழியில்ல..பர்கரும் பெப்ஸியும் காலியானது.

பெப்ஸி காகிதக்கோப்பையை கையால் நசுக்கி சன்னல் கம்பிகளூடே வெளியே விட்டெறிந்தேன்.மார்கழிக்குளிர் சன்னல்வழி பெட்டியெங்கும் பரவியது.கண்ணாடிக்கதவை இழுத்து மூடினேன்.தூக்கம் வருவது போலிருந்தது.ம்ஹூம் கூடாது..இறங்க வேண்டியது கடைசிக்கு முந்தின ஸ்டேஷன்..முழிச்சிக்கிட்டு இருக்க வேண்டிய கட்டாயம்.திரும்ப வர்றதுக்கு வண்டி இருக்கோ என்னவோ..?கண்களைக்குறுக்கி சன்னல் வழியே வெளியே பார்க்க முயன்றேன்.ஆங்காங்கே சில தெருவிளக்குகளும் அவ்வப்போது கார்களும் கடந்து செல்வது தெரிந்தது.எரிச்சலாக வந்தது.நாளைக்கு சீக்கிரமே வேலையை முடிச்சிட்டு கிளம்பிறணும்....பெட்டியில் அவ்வளவா கூட்டம் இல்ல,..அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டொரு பேர்..என்னைப்போலத்தான் போலிருக்கிறது.அருகிலிருந்தவர் பேப்பரை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்.இரவல் கேட்கலாம் என நினைப்பே அடுத்தவனுக்கு வராதபடி படித்துக்கொண்டிருந்தார்.


லேசாகக் கண்ணயர்ந்தது.ஒரு மணி நேரம் கடந்து விட்டிருந்தது.இன்னும் அரை மணி நேரம் இருக்கிறதல்லவா என்ற நம்பிக்கையில் தூங்கியது தெரியவில்லை கடைசி ஸ்டேஷன் வரும் வரை.


யாரோ தட்டுவது போலிருந்தது....விழித்துப்பார்த்தால் அருகிலிருந்த பேப்பர்காரர் ..கடைசி ஸ்டேஷன் வந்திருச்சுப்பா..இறங்கிடு எனக்கூறிவிட்டு இறங்கிச்சென்றேவிட்டார்.வண்டி முழுவதும் காலி.வாட்சைப்பார்த்தேன்..மணி 12:45 எனக்காட்டியது...ஐயையோ காலைல சீக்கிரம் வேற போய்த்தொலைக்கணுமேன்னு நினைத்து எழுந்திருக்கும்போது வண்டி விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டது.கீழே இறங்கி ப்ளாட்ஃபார்மில் நின்றுகொண்டேன்.ஒருத்தரையும் காணோம் ..வெறிச்சோடிக்கிடந்தது,ப்ளாட்ஃபார்மில் கிர்ர் கிர்ரென்று சப்தம் எழுப்பிய சோக் ட்யூப்பை மினுக்மினுக்கியது.தூணுக்கருகில் முடங்கிக்கிடந்தான் ஒரு பிச்சைக்காரன்..அவனோடு ஒரு நாயும் உறங்கிக்கொண்டிருந்தது,அவர்கள் இருவரைத்தவிர வேறு யாரையும் காணவில்லை.மெதுவாக நடந்தேன்..ச்ச இப்டித்தூங்கி தொலைச்சிட்டேனே'ந்னு நொந்துகொண்டே நடந்து கொண்டிருந்தபோது இரண்டு ரயில்வே போலிஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தனர்."என்ன தம்பி வண்டிய விட்டீங்களா..இனிமே காலைல நாலேமுக்காலுக்குத்தான் வண்டி..'எங்க போகணும்...என்ன தூங்கிட்டியா ?"ன்னு ஏளனமாகக்கேட்டார்.பக்கத்திலிருந்த போலீஸ்காரர் 'தம்பி இங்க நிண்ணு ஒண்ணும் பிரயோசனமில்ல...வெளிய போய் ஏதாவது ஆட்டோ கிடைக்குதான்னு பாரு'..எப்படியும் 100ரூபாயாவது கேப்பான்..நடுராத்திரியாரிச்சில்ல..போ..போ..ன்னு விரட்டினர்.கடைசியில் வந்திறங்கிய வண்டியும் பெரிய சத்தம் போட்டுக்கொண்டு ப்ளாட்ஃபாரத்தை விட்டு சென்றுவிட்டது.ஒரு ஆள் பாக்கியில்லாம எல்லாரையும் திட்டித்தீர்த்துக்கிட்டே நடந்தேன்.


இன்னிக்குன்னு பார்த்து பையில பைசா பாக்கியில்ல,..இருந்ததும் பர்கரும் பெப்ஸியுமாக காலியாகிவிட்டது.இருப்பினும் பையைக்குடைந்ததில் ஒண்ணுக்கு ரெண்டு க்ரெடிட் கார்ட் தான் மிச்சம்..தூக்கம் வேறு கண்ணைஸ் சுழற்றியது,நடந்து நடந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தேன்....குளிர் வெடவெடவென ந்டுங்கிக்கொண்டிருந்தது...ஏதானும் பஸ் கிடைக்குமா என எதிர்பார்த்தேன்..பஸ் ஸ்டாண்டின் கம்பிகளில் உட்கார்ந்து கொண்டேன்.ஜில்லிட்டது...இரும்புக்கம்பி...முழுவதும் இருட்டிக்கிடந்தது,.சுற்றுமுற்றும் பார்த்ததில் டைம் ஆபீஸ்-ல் ஒரு குமுட்டி பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது..ஒரு சத்தமுமில்லை.அப்போது டைம் ஆபீஸிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது..கையில் டார்ச்சுடன்..என்னை வெளிச்சமாக்கியது..அந்த கனத்த உருவம்..கழுத்தில் மஃப்ளர் கட்டிக்கொண்டு கையில் டார்ச்சுடன் வந்துகொண்டிருந்தது..'என்ன தம்பி பஸ்ஸுக்காக காத்திருக்கீங்களா ?எங்கே போகணும்"ன்னு குசலம் விசாரித்தார்...பதில் சொன்னவுடன் 'அடடா கடைசி பஸ்ஸும் போயிருச்சே..முதல் வண்டி காலைல நாலேமுக்காலுக்குத்தான்..அதுவரை என்ன செய்வ..ஒரு ஆட்டோ புடிச்சு போயிடு 'என்றார்.நிலைமையை விளக்கினேன்...'அப்ப எங்கூட டைம் ஆபீஸுக்குள்ள வந்து ஒக்காந்துக்க..இங்க பனி உடம்புக்கு ஆகாது..'என்றார்.சரி என்று அவரைப் பின் தொடர்ந்தேன்.ஆபீஸ் ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக இல்லை,...ரெண்டு சேர்,ஒரு பெரிய டேபிள்,தண்ணிக்குடுவை-ஒரு டம்ப்ளர்..மேலே ஒரு குமுட்டி பல்ப் அவ்ளவ்தான்..நான் உள்ளே நுழைந்ததும் லெட்ஜரை மூடி வைத்துவிட்டார்.'தம்பிக்கு எந்த ஊரு'..பார்த்தா உள்ளூரு மாதிரி தெரியவில்லையே..என்றார்.நான் பதில் ஏதும் சொல்லவில்லை.எழுந்து சென்று தண்ணீர்க்குடுவையிலிருந்து தண்ணீர் குடித்து விட்டு வந்து அமர்ந்து கொண்டேன்.'குளிரு கொஞ்சம் ஜாஸ்திதான்' என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவர் எழுந்து சென்றார்..எதற்கு என்று பார்த்தபோது..குடுவைக்குப் பின்னால் இருந்த சாந்துச்சட்டியில் இருந்து கொஞ்சம் ரம்பத்தூள் எடுத்து வந்தார்..ரெண்டு சேருக்கும் நடுவில் கொட்டிவிட்டு ,எதையோ தேட ஆரம்பித்தார்.'என்ன தேடறீங்க''இல்ல இங்கே தான் தீப்பெட்டிய வெச்சேன் ..காணோம்' ..ஆங்..கிடைச்சிருச்சி..'என்று சந்தோஷத்தில் தீப்பெட்டிய உரசி ரம்பத்தூளை பற்ற வைத்தார்.புகைக்கத் தொடங்கியது...கமறல் நெடி தொண்டையைத் துளைத்தது..புகை மண்டலமாக உருவெடுத்தது...லெட்ஜர் மேலிருந்த டார்ச்சை எடுத்து மேசையில் வைக்கப்போனபோது அசல் அய்யனார் போலவே இருந்தார்..சிரிப்பு வந்தது...டார்ச்சும் மிக நீளமாக கண்,காது,மூக்கு டாக்டர் வைத்திருப்பது போலே,.இருந்தது....புகைப்பின்னணியில் அவ்வாறாகத் தெரிந்தார்...


'என்ன தம்பி சிரிச்சாப்ல இருக்கு ?''இல்ல ஒண்ணுமில்ல'ன்னு சொல்லி சமாளிச்சேன்..திரும்பவும் லெட்ஜரைத் திறந்து ஏதோ எழுத ஆரம்பித்தார்..'இந்த அர்த்த ராத்திரியில எதுக்குங்க திறந்து வெச்சிருக்கீங்க...மூடிற வேண்டியதுதானே..?'ஆஹாங்..ரெண்டு மணிக்கு ஒரு பஸ்..அப்புறம் மூணறைக்கு ஒண்ணு..இதெல்லாம் நோட் பண்ணணும்'...எனக்கு நைட்தான் டூட்டிதான்'...'இப்டி ரெண்டுங்கெட்டான் நேரத்தில பஸ்கள் வந்தா தூக்கம் கெட்டுப்போய்டாதா?''இல்ல தம்பி ..அதான் ரெண்டு மணி வரை தூங்கலாமே...அப்படியே அசந்துட்டாலும் ஹாரன் அடிச்சு எழுப்புவாங்க...கையெழுத்து வாங்கிட்டு திருப்பி அனுப்பிட்டா மறுபடி மூணரைக்குத்தானே...அந்த இடை வெளியில கொஞ்சம் தூங்கிக்கலாம் பாருங்க...!''என்ன இருந்தாலும் தொடர்ச்சியாத் தூங்காம..இப்டி விட்டு விட்டு தூங்கினா...'என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்,,,''எல்லாம் பழகிப்போச்சு தம்பி"...என்றவரின் குரலில் அந்த"பழகிப்போச்சு"சொல்லும்போது குரல் கம்மி கொஞ்சம் எனக்காக வாஞ்சனையோடு பரிதாபப்படேன் என்பது போல் தொன்றியது எனக்கு...'இன்னிக்கு எதிர்பாராத விருந்தாளி வந்திருக்கீக...அதனால தான் தூங்கல...இல்லன்னா இந்நேரம் மூணாஞ்சாமந்தான்..'என்றவர் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டார்,..ஐயோ நாம வந்து இந்தக் கோழித்தூக்கத்த கெடுத்திட்டோமேன்னு நினைத்துக் கொண்டேன்..'தம்பி உங்களுக்கு"என்று ஒரு பீடியை நீட்டினார்..'வேண்டாம் எனக்குப் பழக்கமில்ல"..' தம்பி நீங்க ஒண்ணும் மனசுல வெச்சுக்கவேணாம்..என்னடா இவன் தூக்கத்த கெடுத்துட்டோமேன்னு....' என்றார்..பீடிப்புகையும் ரம்பத்தூள் புகையும் ஒன்றானது...கொஞ்சம் இருமல் வந்தது...' பாத்தீங்களா..இதுக்குதான் பனியில் அலையக்கூடாதுங்கறது'..'அந்த சன்னலை சாத்திடவான்னு கேட்டார்..வேண்டாம் வேண்டாம்னு அவசரமாக மறுத்தேன்..இந்த அர்த்த ராத்திரியில் இப்படி ஒரு கவனிப்பா..?கண் சொக்கியது..நடந்த கால்கள் வலிக்கத்தொடங்கியது.....'பான்--பான்' என ஹாரன் ஒலி எனை எழுப்பியது..எழுந்து பார்த்தேன்..அய்யனாரைக் காணவில்லை..சன்னல் வழி வெளியே பார்த்தபோது டிரைவருடன் பேசிக்கொண்டிருந்தார்..பின்னர் வண்டி பின்னுக்கு எடுத்து வளைவில் சென்று மரைந்து விட்டது..


உள்ளே வந்தவர் 'என்ன தம்பி ..எழுந்துட்டீங்களா..?'தூங்குங்க....இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கு...நானும் கொஞ்சம் தூங்க முயற்சி பண்றேன்..' என்றார்....கீழே பார்த்தேன்...புகை அடங்கியிருந்தது...ரம்பத்தூள் கரியாகித்தூர்ந்து விட்டிருந்தது..என்னைக்கவனித்தவர் 'இன்னுங்கொஞ்சம் தூள் போடட்டுமா தம்பி..குளிருக்கு எதமா இருக்கும்'என்று கூறியவர் பதிலுக்குக் காத்திராமல்..சாந்துச்சட்டியை காலி பண்ணிக் கொண்டு வந்து கொட்டிப் பற்றவைத்தார்..மறுபடி புகை மண்டியது...உறங்கியே விட்டேன்...

யாரோ தட்டு வது போலிருந்தது..திடுக்கிட்டு விழித்தேன்..' தம்பி மணி நாலரையாகுது..இப்ப கிளம்பினீங்கன்னாத்தான் மொத வண்டியப் புடிக்க சரியாயிருக்கும்..கெளம்புங்க..."என்றார்..நானும் கண்களைத்துடைத்து விட்டுக்கொணடு கொஞ்சம் டையைத் தளர்த்திவிட்டு வெளியே வந்தேன்..பனி இன்னும் குறையவே இல்லை...பின் வண்டி பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்..