Monday, October 31, 2016

காஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி


காஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர்ஸ் பண்ணக்கூடிய ஆள். அந்த ராஜநாயக் பார்ட் அசத்திட்டேள் போங்கோ.உடல்மொழி அருமை. குரல் தான் கொஞ்சம் மாற்றி பேசிருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை! காமெடி பார்ட் அவர் ஏற்கனவே செய்தது தான் ஒன்றும் புதிதில்லை.பக்காவா ப்ளான் பண்ணி பேய்,பிசாசு எல்லாம் செட்டப் பண்ணீன்னு கலக்குறார். நிறைய இடங்கள்ல அந்த தலைல சுத்தி துணி கட்டிக்கிட்டு கண்ணில கருவளையம் வெச்சிக்கினு வரும்போது இயக்குநர் பாஇரஞ்சித் மாதிரியே இருக்கார். எனக்கு மட்டும் தான் தோணுதா இல்லை எல்லாருக்கும் தானா ?.
ஹிஸ்டாரிக்கல் பார்ட்டுக்கு டீம் நிறைய வேலை பார்த்துருப்பாங்க போலருக்கு, உழைப்பு அபாரம். ஏதோ ஃபேன்டஸி படம் மாதிரி இல்லாம ஒவ்வொரு காட்சியும் இழைக்கப்பட்டிருக்கிறது. அலீஸ் இன் வொன்டர்லேன்ட் மாதிரி இருக்கும்னு நினைத்து ஏமாந்தேன். வியூகம்,அரண்மனை,போர்க்காட்சிகள் எல்லாம் அபாரம்.எதுவும் எங்கும் அட்டை போல பல்லிளிக்கவேயில்லை. தேர்ந்துட்டானுடே.

ஹிஸ்டரிக்கல் பார்ட்ல கேரக்டரைசேஷன்லாம் கரீபியன் பைரேட்ஸ் போல தலையற்ற உடல்கள், அவ்வளவு பெரிய சான்டிலியர்ஸ்னு பிரம்மாண்டம். இப்பல்லாம் இந்த சிஜி பண்றது ஈஸி போலருக்கு, பொசுக்கு பொசுக்குன்னு பீரியட் படம் எடுத்து விட்டுர்றானுவ.ஹிஹி. ரத்னமகாதேவிய பக்கத்து நாட்டின் இளவரசன் குதிரையில் தூக்கிச்செல்லும் காட்சிகள், அதைத்தொடரும் சண்டைக்காட்சிகள் , வசனம் எல்லாமே அருமை. ஹ்ம்.. பாஜிராவ் மஸ்தானி ..ஹிஹி..ஞாபகம் வருது. விவேக் ரொம்ப நாட்களுக்கு பிறகு நிறைவான வயதுக்கேற்ற வேடம். அந்த பாட்டி இன்னாமா ஆக்ட் குடுக்குதுங்ணா. ரிமொட் கன்ரொல் வெச்சிக்கினு நாய்ச்சங்கிலிய சுத்தவிடுது.


சந்தோஷ்க்கு செம தீனி, அவர் ஏற்கனவே வில்லா' படத்துல ட்ரை பண்ணினது தான். அது கொஞ்சம் லோ பட்ஜெட் ,இங்க அளவுக்கு அதிகமாவே பட்ஜெட். இருந்தாலும் அதுல ஒரு பியானொ தீம் ம்யூஸிக் பண்ணீருப்பார்.அரண்டு போயிருவோம் இங்கயும் அதே மாதிரி அரண்மனை தான் ஆனாலும் இங்க தீம் ம்யூஸிக்னு ஒண்ணும் இல்லை. இருப்பினும் அடிச்சு மெரட்டுறார். கார்த்தி பாடும் முதல் பாதியில் வரும் பாடல்  திக்கு திக்கு சார் பாடல் , நிக்கி மினாஜ் ( ஹிஹி...அவாளேதான் ) இன்ன பிற ஹிப் ஹாப் தோழர்கள் கூட பாடிய இந்தப்பாடல் தான்.. David Guetta - Hey Mama ft Nicki Minaj, Bebe Rexha & Afrojack பாடல் காட்சி அமைப்புகள், ஆடல் பாடல், மற்றும் லொகேஷன் எல்லாம்.அதேதான். பாருங்களேன். ஆனாலும் சந்தோஷோட ட்யூன் மட்டும் வேற நல்ல வேள.."லெட்சம் பெரியார் வந்தாலும்" ஹிஹி.. ஆனாலும் ஒரு பாட்டும் வெளங்கல. கொஞ்சம் க்ளாஸிக்கலா ட்ரை செய்த நயன்தாராவின் பாடல் மட்டும் கேட்கலாம் ரகம்.


.

Wednesday, October 26, 2016

ஆக்டோபஸும் நீர்ப்பூவும்
இன்று எழுத்தாளர்/முனைவர் தமிழவனை அவர்தம் பெங்களூர் பன்ஷங்கரி இல்லத்தில் சந்திக்க வாய்த்தது.நிறைய மனம்
திறந்து பேசிக் கொண்டிருந்தார். ஸ்ரீனியும் , நல்லதம்பியும் கூட இருந்தனர், பழங்கால சிசுசெல்லப்பா,கநாசு, மற்றும் இன்னபிற நாஸ்டால்ஜியாக்களைப்பற்றிய அவர்தம் எண்ணங்கள் எங்களுக்கு அரிய செய்தியாய் இருந்தது. ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்ட நீச்சல் குளத்தைப்பற்றி (ஆம் நீச்சல் குளம் என்றுதான் கூறினார்..முகநூலில் அனைவரும் ‘கிணற்றில் அல்லவா’ குதித்தார் என கூச்சலிட்டனர்.) வருத்தத்துடன் கூறிக்கொண்டு இருந்தார். சிசுசெல்லப்பா 'சுவை' என்ற பெயரில் ஒரு தனிச்சுற்று இதழ் நடத்தி வந்ததைப்பற்றி கூறினார், எல்லோருக்கும் தெரிந்தது 'எழுத்து' மட்டுமே. பின்னர் தமது முயற்சியில் வெளிவந்த 'படிகள்' இதழ்களைத் தொகுத்து இக்கால சந்ததியினருக்கு கொடுக்க வேண்டிக்கொண்டார். என்னைப்பற்றி விசாரித்தவர் “சின்னப்பயல் ..ஹ்ம். தெரியுமே என்றவர் 'சிற்றேடு' இதழில் எழுதுமாறு பணித்தார். எழுத வேணும்.!

 
நிறையப்பேசுகிறார், இன்னதானென்றில்லை, நாம் எடுத்துக்கொடுக்க வேணும் என்ற உந்துதலின்றி அவர்தம் போக்கில் பேசிக்கொண்டே இருக்கிறார். முதுமை வருத்தினும் பேச்சு குறையவில்லை. கநாசு பாரதிதாசனை சட்டை போலும் செய்ததில்லை, எப்போதும் சிசுசெல்லப்பாவையே கொண்டாடினார். ஆத்மாநாம் பற்றி பேசுகையில் அவர் குரல் கம்மியது, பையன் போல வருவார் , நிறைய கவிதைகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார். வரும்/போகும் வழியில் இருந்த நீச்சல் குளத்தை பார்த்து வைத்துக்கொண்டு ஒரு நாள் முன்னிரவில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்றார். மறுநாள் டெக்கான் ஹெரால்டில் அவர் மரணச்செய்தி சின்ன பெட்டி செய்தி போல வெளியிடப்பட்டது.

சிசுசெல்லப்பா’வின் எழுத்துகளை வைத்து ஒரு பெண் சென்னையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்ததையும் , அவரிடம் இருந்து கிடைத்த சில ‘சுவை’ இதழ்களை எங்களுக்கு பார்க்க கொடுத்தார். பட்டம் பெற்றதும் அந்தப்பெண் பின்னர் தொடர்பிலில்லை ,அதோடு அவரின் வருகையும் நின்றுபோனதை ஞாபகப்படுத்தி கூறினார்.

கர்நாடகத்தில் மொழி வளர்ப்பிற்கென நிதி ஒதுக்குவதாகவும் , அதை நிர்வகிக்க செயலர்கள் மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு. அதில் எந்த அரசியல் கட்சிகளும் இடர்ப்பாடு செய்வதில்லை, எக்கட்சி ஆட்சியிலிருப்பினும் இந்த நிதி ஒதுக்குதல்/குழு அமைத்து மொழி வளர்த்தல் தொடர்கிறது. இப்படி ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பே இல்லை. 60களுக்குப்பிறகு மொழி வளர்ப்பு என்பது வேறுபக்கம் இழுத்துப்போகப்பட்டது இன்னமும் அதை மீண்டும் பாதையில் கொணர இயலவில்லை என்பதை நினைத்து வருந்துகிறார்.
கேரளாவில் தாம் தமிழ் எம்.ஏ படித்துக்கொண்டிருந்தபோது, நம்பூதிரிபாடு ( அப்போதைய முதலமைச்சர் ) சைக்கிளில் செல்வதையும், அதை/அவரை யாரும் பெரிதுபடுத்துவதேயில்லை என்பதை அதே ஆச்சரியத்துடன் கூறினார். கம்ப்யூட்டர்கள் பணிகளில் பயன்படுத்துவதை எதிர்த்து எப்போதும் கூச்சல்/ ராலிகள் போராட்டங்கள் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

சுஜாதா’வைப்பற்றி பேசுகையில் நல்ல திறமைசாலி, இன்னமும் இலக்கியம் சார்ந்த படைப்புகள் அவரிடமிருந்து வந்திருக்கலாம். இந்த ‘குமுதம்’ தான் அவரை வேறு பாதைக்கு அழைத்துச்சென்றது. வணிக நோக்கில் அவரை எழுத வைத்து வருமானம் தேடிக்கொண்டது. அவர் முன்னர் இந்தப்பாதைக்கு வருமுன்னர் எழுதிய கதை ஒன்றை ( பெயர் மறந்து விட்டது ) ‘நைலான் கயிறு’ என்ற பெயரில் புதினமாக எழுதினார் அதில் அந்தப்பழைய கதையின் முக்கிய வரிகளை ஆங்காங்கே உறுத்தாமல் புகுத்தியிருந்தார். பலமுறை கமலஹாசன் வந்து செல்வதையும் குறிப்பிட்டார். அவரைச்சந்திக்க ஒரு முறை சென்ற போது ‘இப்போ தான் கமல்’ வந்து விட்டு சென்றார் என்று சுஜாதா கூறியதைப் புன்முறுவலுடன் பகிர்ந்துகொண்டார். ‘பெல்’ லில் வேலை செய்தபோது அவரின் பையன் ஒரு ஜப்பானியப் பெண்ணை மணம் புரிந்துகொண்டதை வெகுவாக வெறுத்ததாகவும், ஒத்துக்கொள்ளவேயில்லை என்பதை தமக்குள் சிரித்துக்கொண்டே பேசினார். மதம்/ஜாதி இவற்றை கடைசி வரை விட்டுக் கொடுத்ததேயில்லை அவர் என்பதைக்கூறினார்.

இடையில் இரண்டு மூன்று முறை தொலைபேசியில் அழைப்பு வந்து தொந்தரவு செய்தபோதிலும் எங்களுடன் பேசுவதிலேயே மும்முரமாயிருந்தார். கையில் எடுத்து அதை அணைத்துவிட்டு பின் பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஸ்ரீனி சிலபோது அவர் தானாகவே பேச்சை நிறுத்திவிடுவார். பின்னர் நாமாக கிளம்பி வந்துவிட வேண்டியது தான் என்றெல்லாம் பயமுறுத்தி இருந்தார் என்னை. நல்லவேளை அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் பேசியது மூன்றுபேருமாகச்சேர்ந்து பத்து வரிகள் தான் இருக்கும். அவரோ மடை திறந்ததுபோல் பொழிந்து கொண்டிருந்தார்.காவிரிப்பிரச்னை குறித்த எனது சந்தேகங்களுக்கு அவரிடம் எவ்வித நேரடி பதிலும் வரவில்லை. யூஆர் அனந்தமூர்த்தி, இன்னொருவரின் பெயரையும் குறிப்பிட்டார். அவர்களெல்லாம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டபோதும் தமிழ் கவிதைகள்/எழுத்துகள் மீது ஆர்வமாக இருந்தனர். என்ன புதியவை வந்திருக்கின்றன என்பதை ஆவலுடன் எதிர்நோக்கினர். தாக்குதல்கள் நடந்ததை பலமுறை (முன்பு , வெகு காலம் முன்பு ..இப்போதல்ல ) கண்டித்திருப்பதை குறிப்பிட்டார். எப்படி ஒட்டுமொத்த கர்னாடகாவும் இப்போது இப்படி வெறிச்செயலுக்கு போனதைப்பற்றி அவருக்கு ஏதும் புரிதல் இல்லை.

முதுமை, யாரேனும் தம்முடன் உரையாட மாட்டார்களா என்ற ஆதங்கம் அவர்தம் முகத்தில் தெரிகிறது.இன்னமும் சந்திப்போம். இரண்டாம் ஞாயிறு கூட்டங்கள் குறித்து ஆவலாய்க்கேட்டறிந்தார். அவர் பகிர்ந்துகொண்ட பழைய தனிச்சுற்றுக்கான இதழ்களில் சிலவற்றைப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.. அவை சில இங்கே. அந்த தமிழ்த்தாய் வணக்கம் 'சுஜாதாவால் சிலாகிக்கப்பட்டது என்ற கொசுறு செய்தியையும் அவர் கூறத்தவறவில்லை..!
.

Thursday, October 13, 2016

சினிமா விமர்சனம்


சினிமா விமர்சனம் எழுதறதுக்கு எல்லோரும் ரெடி. ஆனா புதுசா வந்த ஒரு கவிதை புத்தகத்தையோ இல்லை புதினத்தையோ பற்றி யாரும் எழுதுவதேயில்லையே என்று இளங்கோ எழுதியிருக்கிறார் வருத்தத்தோடு. இதுல ஒரு பெரிய விஷயமே இருக்கு, கவிதைப்புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுறதுன்னா அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு மொதல்ல புரியணும். எல்லாக்கவிதைகளும் விளங்குவதேயில்லை. பூடகம் தான் அதிகம். சொல்லவந்ததை விளக்கிச்சொல்லாது வேறு மொழியில் எழுதுவது..அதை நான் விளக்குறேன் பேர்வழின்னு போயி வாங்கிக்கட்டிக்கிர்றத விட சும்மா இருக்குறது பெட்டர். இதுல ஒரு பெரிய விவாதமே தொடங்க வாய்ப்புமிருக்கு. விமர்சனம் பண்றேன்னு கெளம்பி இருக்கிற எல்லாரையும் ஒரு வழி பண்ணின ‘தீர்த்தமுனி’ய கொன்னே போட்டானுஹ..ஹிஹி.. இப்பத்திக்கு யாரும் அவ்வளவு காரசாரமா விமர்சனம் பண்றதுக்கு ஆளே இல்லைன்னு தான் சொல்வேன். சும்மா ஒப்புக்காச்சும் இந்த வரி பிரமாதம், இது போன்ற உயரம் யாருமே தொடலை ,வானமே அண்ணாந்து பாக்குதூன்னெல்லாம் எழுத வேண்டிவரும்.

இந்தக்கருமத்துக்கு என்னாத்துக்கு குடிக்கொணூம்னு ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூன்னு சினிமாவப் பத்தி எழுதிரலாம். பொறந்ததே சினிமாக் கொட்டயில தானே அதனால எல்லாப்பயலுக்கும் சுளுவா எழுத முடியுது. அதோட எந்த டைரடக்கரும் சண்டைக்கில்லாம் வரமாட்டாங்க்ய..அவாளே டிவீடி பாக்க நேரமில்லாம அலயிறாங்க. முக்கியமா இன்னொண்ணு சினிமா மேரி டொரண்ட்,லைவ் ஸ்ட்ரீமிங்க், இந்த மேரி ஓசிச்சமாச்சாரமெல்லாம் புதின/கவிதை புத்தகங்களுக்கு கிடைப்பதில்லை. காசு குடுத்து வேங்கி அதப்படிச்சி, அப்பால வெமர்சன்ம்னு எழுதி,மேலே திட்டும் வேங்கணும்னு...என்னாத்துக்கு இந்த கெரகம் புடிச்ச வேலைல்லாம்னு தான் எழுதறதேயில்லை. அப்பால அந்த எழுத்தாளரே நம்மள ப்ளாக் பண்ணி ஆயுள் முழுக்க அவா மேக்கொண்டு என்ன எழுதறான்னு பாக்க வெடாம பண்றதுங்கற கருமமெல்லாம் வேற இருக்குதுங்க்ணா..அதான் ஒரு டொரண்ட் போட்டமா/ இல்ல லைவ் ஸ்ட்ரிமிங்க்ல பாத்தோமான்னு சோலிய முடீக்கிறத விட்டுட்டு நீங்க வேற #விமர்சனம்


Friday, October 7, 2016

தக்கதிமி தக்கஜுனு தக்கதிமி தக்கஜுனு
இது என்ன பாட்றா இது..செம.. சுந்தர் சி பாபு, ‘வாளை மீனு'க்கப்புறம் காணாமயே போய்ட்டார். புடிச்சி இஸுத்துக்கொணாந்துருக்கானுஹ இங்க..மச்சி அட்டி தாம்லே.. மாகபா கையைக்கையத்தட்டி 'இது அது எது'ன்னு இங்க வர வண்ட்டான். தகராறு/சண்டைங்கற மாதிரி வரிகள் வரும்போது மட்டும் 'சே குவாரா' பனியனப்போட்டுக்கினு ஆட்றான். சமீபகாலமா கேட்ட ராப்/ஹிப்ஹாபாப்ல இதாண்டா ஒரிஜினல். அழுத்தமான கர்நாடக சங்கீத அக்ரஹாரத்து ராகம் ஒண்ணு இருக்கு இதுல ( கொஞ்சம் பொறுங்க, இன்னான்னி கண்டுபிடிச்சுட்டு பின்னாலே சொல்றேண்டா அம்பி ) தேவாவின் கானா பாடல்கள் ஒரு காலம். இது கொஞ்சம் அட்வான்ஸ்டு வெர்ஷன். ( அவை முழுக்க சிந்துபைரவி ராகத்துல அமைந்தவை)

ஆமா கூட ஆட்றது மிஷ்கின் ஸ்டைல் மஞ்சச்சேலை நம்ம 'சிவா மனசுல சக்தி' அனூயா தானே...ஆஹா ரொம்ப நாளாச்சிபா பார்த்து ..ஆனாலும் இங்க முழுக்க சேலைய சுத்திகினு அவ்ளவ் சுத்தபத்தமா ஹிஹி ரம்பாவோட அஸெட்ஸ்க்கு அப்புறம் அம்மையாரொடது தான். ஆட்ற எல்லாரும் திருவிழா பச்ச மஞ்ச செவப்பு கண்ணாடில்லாம் போட்டுகினு ஸோக்காகீது மச்சி. ‘பழகீட்டா உயிரக்கொடுப்போம்டா மாட்டுவண்டீ கீழதான் படுப்போம்டா' ஆஹா என்ன வரிடா மச்சி..புல்லரிக்கிது.
.
ட்ரேக் (Drake ) இங்கிலீஷ்ல எடுத்து விட்டான் ஒரு ஹிப் ஹாப். you used to call me on a cell phone’ ன்னு ஒரு பாட்டு.டெக்னிக்கலான தாளமும், ஆட்டமும் கொள்ளை போகும் , அதே போல ( அதுவே இல்லை..ஹ்ம்.ச்சை ) தெளிவான வரிகளும் , ஆட்டமும் , நம்ம குப்பத்துல ஆடசொல்லீ காட்டீருக்கானுங்க. இதோட ஓரு நூறுதபா பாத்துட்டேண்ணா.. நீங்களும் கேளுங்களேன், தக்கதிமி தக்கஜுனு தக்கதிமி தக்கஜுனு #அட்டீ


.