Tuesday, January 25, 2022

Pretty Savage - from - BlackPink

 


இந்தப்பாட்டு எப்பவுமே பெங்களூர் ரேடியோ இண்டிகோ 91.9ல ஒலித்துக் கொண்டே இருக்கும், என்ன பிரச்னைன்னா பாடியவர்கள் பெயர்,குழு, நாடு எதுவுமே சொல்றதே இல்லை. பெரும்பாலான பாடல்களைக்குறித்த விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதேயில்லை. CountDown-ல் மட்டுமே இது போன்ற வியத்தகு விடயங்கள் பகிரப்படும்..ஹிஹி.. நானும் ரொம்பத் தேடிக்கிட்டு இருந்தேன்.  இடையிடையே வரும் ஆங்கிலச் சொற்களை வைத்து. ஒருவழியாக பிடிபட்டது Pretty Savage – from – BlackPink Girl Band – Ko-PoP..! ஆஹா,,,!

வழக்கமா ’கோ-பாப்’ கொரியன் பாப்- என்றாலே அது BTS தான் அவா மட்டுந்தான் அப்படீன்னு நினைப்பேன். (Monsta X-ன்னும் ஒரு குழு இருக்கிறது Boy Band) அதுவும் சரியாகத்தானிருக்கும் பல சமயங்களில். ஏன்னா VH1-ல அவங்க பாடலைத்தவிர வேறே எந்த குழுவினரும் பாடலும் அத்தனை கவர்வதில்லை. இன்னமும் Non Matured Babies போலவே மற்றவர்களின் பாடலும் இருக்கும். அதுக்கும் மேலே அது Girl Band-ன்னா கேக்கவே வேணாம். ஏயப்பா ஏசப்பான்னு ஓடீரலாம் போலத்தோணும். DO-RE-MA என்ற அடிச்சரடு அங்கிருந்து வந்தது தான் எனினும் அவசரக் கோலத்தில் அள்ளித்தெளிக்கும் இந்த ‘காளான்பாப்’கள் பாட்டுக்கேட்கும் மூடையே கலைத்து விடுகின்றன. கொஞ்சம் முன்னேறி இப்பல்லாம்  Mic Drop பாடல் புகழ் BTS, அமேரிக்காவின் பிரபல பல குழுக்களுட்ன் சேர்ந்து இசைக்கவும் ஆரம்பித்துவிட்டனர். அதிலொன்று Cold Play உடன் பாடிய My Universe , மற்றுமொன்று எனக்கு மிகவும் பிடித்த பாடகி Halsey உடன் பாடிய Boy with Luv’ இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம்.

பியானோக்கட்டைகளை அழுந்த துடைத்தெடுக்கும் ஒலியுடன் ஆரம்பிக்கும் பாடல். இது அவங்க இசையா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லணும். குறுகிய காலத்தில் புகழ் பெறவேணும், மில்லியன் டாலர்ஸ் வேணும், ஹாலிவுட் ஹில்ஸில் ஒரு இல்லம் என்றபடியே  எல்லா கொரியர்களும் நினைக்க ஆரம்பித்ததின் விளைவு. தடம் புரளும் இசை. இப்ப சமீபமாக ஒரு இசைக்கலைஞர் பெண்மணி தற்கொலை செய்துகொண்டார். பெரும்பாலும் மூடிமறைக்கப்படும் காரணங்கள். அதீத கடன் தொல்லை, மேற்குலகைப்போல வாழ நினைக்கும் இளைஞர் கூட்டம். முக்கியமாக தென் கொரியாவில் கலைக்குப் பஞ்சமில்லை.  ஒரு பெரிய ஆர்ட்டிகிளே வந்தது Wire தளத்தில். அது போகட்டும். 

சரி இந்தக்குழுவின் உறுப்பினர்களெல்லாம் ஆரார்னு பார்க்கலாம்னு போனா எல்லா முகமும் ஒரே மேரி இருக்கி... ( யார் இசைப்பது, யார் எழுதுவது, யார் நடனமைப்பது என்றெல்லாம் பார்ப்பது வழக்கம் Main Vocalist, Song Writer, Dance) .அதான் ப்ரச்னையே இந்த கொ-பாப் எழவுல... இன்னி வரைக்கும் BTSல இருக்கிறவனுங்க ஒருத்தன் பேரையும் பார்த்தா என்னால சொல்லவே ஏலாது... ஹிஹி...

இந்தப்பாடல் இசை ப்ளெயின் பாப், கொஞ்சம் EDM, கொஞ்சம் Rap இன்னும் கொஞ்சம் மெக்ஸிகன் பீட்ஸ், அதோடு கூடிய புல்லாங்குழல் ( இதற்கு ஒரு பெரிய ஸ்கோப்பே இருக்கிறது பாடலில்) இப்படி கொஞ்சம் கலவையான சங்கீதம்.  Savage-உம் Pretty-யாக வாய்ப்பிருக்கிறதா?! J  மாட்டுக்கொம்பு மேலே ஒரு பட்டாம்பூச்சி போல .ஹிஹி  பாடல் வரிகள்லாம் ..ஹிஹி.. அதெல்லாம் நமக்கெதுக்கு.. ஜஸ்ட் ம்யூசிக் கேட்டா போதும். ராகம் அற்புதம். பாடலின் அற்புத தருணத்திற்காக நீங்க 02:53 வரை காத்திருக்க வேணும் அதான்.. Finishing தான் பிரமாதம். .  விரல் விட்டு சுண்டிக்கொண்டே கேட்பேன் இந்த இடத்தை.. அதற்கான அச்சாரம் 02:29-லேயே ஆரம்பித்து விடும். Kill them with Smile போல இந்த காட்டுமிராண்டித்தனமான Savage கொஞ்சம் Pretty தான்.. இந்த இடத்தின் புல்லாங்குழல் கொஞ்சம் ஹிஸ்பானியா (நம்ம யுவன் ஆரண்ய காண்டத்தில் முயற்சி பண்ணினது) சரி பாட்டுல அந்த ப்ளாக் ஓவர்கோட் ட்ரெஸ் போட்ருக்கிற பொண்ணையே பார்த்துக்கிட்டு இருக்காம முழுப்பாட்டையும் கேளுங்க..பாருங்க.. ஹிஹி..  # PrettySavage