Wednesday, August 25, 2010

பிடித்தம்... பிடிக்கவில்லை!



யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த என் ஆறு கவிதைகள்

நன்றி
யூத்ஃபுல் விகடன்
http://youthful.vikatan.com/youth/Nyouth/chinnapayalpoem250810.asp


பிடித்தம்
பிடித்தம் போக
கைக்கு என்ன வரும்?
பிடித்தம் போனால்
கைக்கு எதுவும் வராது.
அவள் கேட்டது என்
சம்பளத்தை
நான் சொன்னது
என் காதலை
*
வலைமனை
என்னோடு வா
என் வலைப்பூ
வரைக்கும்
என் இடுகையைப் பார்
என்னைப் பிடிக்கும்..!
*
தப்பு... சரி!
நான் செய்த தப்புகளை
மட்டும் பார்க்காதே
எத்தனையோ 'சரி'
செய்திருக்கிறேன்
பார் என்றேன்
எல்லாமே தப்பு
தான் என்றாள்
அப்ப சரி' என்றேன்.
*
நினைவுகள்
பறக்கும் பறவைகளை
எண்ண முயற்சித்ததில்
கழிந்தது மாலை...
பல தடவைகள்
மீளப் பறந்து வரும்
பறவைகளை மீண்டும்
மீண்டும் எண்ண
கடந்து சென்றவையே
திரும்ப வந்தது
போலிருந்தது.
எண்ணி மாளவில்லை
என் நினைவுகளையும்
பறவைகளையும்.
*
பிடிக்கவில்லை
பிடித்தவை எல்லாம்
பிடிக்காமல் போகிறது
கொஞ்ச நாளில்
பிடிக்காதவையும்
பிடிக்கும் வரை.
*
காற்று
காற்றாடியிலிருந்து
காற்று வரவில்லையே
என்ற கவலை எனக்கு.
*


.

Saturday, August 21, 2010

முக (நூல்) நக நட்பு

அவள் இப்போது தனிக்கட்டை
இவள் இப்போது ஒரு உறவில்
அவள் அப்போது சிக்கலான உறவில்
இவள் அப்போது தனிக்கட்டை
அவள் ரோஜா தருகிறாள்
இவள் நாய்க்குட்டி தருகிறாள்
இவள் புகைப்படத்தில்
என்னைக் குறியிட்டு
கருத்து கேட்கிறாள்.
அவள் சுவருக்கு சுவர்
பார்க்க அழைக்கிறாள்
பிறகு தான் தெரிந்தது
அவை எனக்கு மட்டுமல்ல
இன்னும் ஆயிரம் பேருக்கும்...!


.

Saturday, August 14, 2010

சுதந்திரம் ?

'கடலைப் பிரிந்த
ஆக்டபஸ் பால்
கண்ணாடிச் சிறையில்'
'காட்டைப் பிரிந்த
சிங்கப்பூர் கிளி
பெட்டிச் சிறையில்"
'தன் நிலத்தைப் பிரிந்த
தமிழினம் தற்போது
வேலிச் சிறையில்'
யாரிடம் கேட்பது
ஆரூடம் ?

.

Saturday, August 7, 2010

இது கவிதையா ?!

கவிதையே எழுத வராது
என நினைத்து இதுவரை
எழுதாமலேயே இருந்தேன்
பின் ஏதோ ஒரு வேகத்தில்
ஏற்கனவே எழுதி
வைத்திருந்த
உரை நடையை மடக்கி


க்
கி... ஒன்றன் பின் ஒன்றாகப்
பல வரிகளாக்கினேன்
இவ்வாறு எழுதி முடித்ததை
பூரிப்போடு மீண்டும்
ஒருமுறை முழுக்க
வாசித்துப் பார்த்தேன்
முதலில் நினைத்தது தான்
சரியெனத் தோன்றியது..!

.