Tuesday, November 2, 2021

பாலைவனப்பெரும் புழு #Dune

 

Dune: Release Date, Trailer, Cast, Sequel, and Everything We Know So Far 

தந்தையைப்போலவே இவன் கண்களிலும் தெளிவான தடுத்தாற்றலும் தைரியமான கீழ்ப்படிதலின்மையும் தெரிகிறது. எங்களைத்தனியே விட்டுவிட்டு வெளியே நில் என்கிறாள் ஆரக்கிள். அவள் என்ன சொல்கிறாளோ அதை அப்படியே செய் எனக்கூறிவிட்டு வெளிச்சென்று நிற்கிறாள் அன்னை. என் அன்னையின் இல்லத்திலேயே அவளை வெளியே அனுப்புகிறாய் என வினவுகிறான் தனயன்.  அருகில் வந்து மண்டியிட்டு நில் என ஆணை பிறப்பிக்கிறாள் அந்த ஆரக்கிள். ‘என்ன தைரியமிருப்பின் எனக்கே ஆணையிடுவாய்?’  ‘இந்தப்பெட்டிக்குள் உன் வலது கையை விடு’  ஹ்ம்... உனதன்னை நான் சொன்னதைச் செய்யச்சொல்லி விட்டுச் சென்றிருக்கிறாள். ஹ்ம்.. செய் கையை பெட்டிக்குள் வை’ எனக்கூறிக்கொண்டே சரேலென ஒரு ஊசியை எடுத்து அவன் கழுத்தின் மிக அருகில் வைத்துவிட்டு ‘கையை வெளியே அடுத்தால் அடுத்த நொடி இந்த ஊசி உன் கழுத்தில் பாயும்... அத்தனையும் விஷம் , நொடியில் மரணம்’ என்பவள்  ‘இந்தப்பரீட்சை மிகச்சுலபம் , கையை வெளியே எடுத்தால் உடனடியா நீ இறப்பாய்’ ’இந்தப்பெட்டியில் அப்படி என்னதானிருக்கிறது?’ “வலி”, உள்ளிருப்பது வலி’ என்கிறாள் ஆரக்கிள்.

காவலாளிகளை அழைக்கவேண்டிய அவசியமில்லை.  உன்னன்னை வெளியே தான் நிற்கிறாள் கதவருகே அனைத்தையும் கேட்டுக்கொண்டு, அவளைத் தாண்டி யாராலும் வந்து விடமுடியாது !” “ ஏனிதைச்செய்கிறாய் எனக்கு?’ ‘ கூண்டிலடைப்பட்ட மிருகம் தன்கால்களை தொடர்ந்து கடித்துக்கொண்டு தப்பிக்கப்பார்க்கும்’ நீ என்ன செய்யப்போகிறாய்?” என வினவுகிறாள் தம் புருவத்தை சுழித்துக்கொண்டு. பொறுக்க முடியாத வலி, ஊழிப்பெரு வெள்ளத்தில் அடைப்பட்ட மிருகமென தவிக்கிறான்,இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் கிடந்து மருகுகிறான், வெளியில் அவன் அன்னை குமுறுகிறாள், செய்வதறியாது கலங்கிக்கொண்டு உதட்டைக்கடித்துக்கொண்டு வயிற்றை எக்கிப்பிடித்துக்கொண்டு சப்தமின்றி அழுகிறாள். ஹ்ம்.. இன்னொரு பிரசவம் அவளுக்கு..  பெட்டிக்குள் விட்ட கையின் வலி பொறுக்க முடியாத அளவு மிகும்போது அடக்கமுடியாது அரற்றுகிறான் தனயன்... தலையைத்திருப்பி அசைத்து வலியை எங்கனமேனும் கடத்திவிட இயலாது. விஷஊசி குத்தினால் போயேவிடும் உயிர். கழுத்தில் கத்தி, உள்ளேவிட்ட கையில் பொறுக்கமுடியாத வலி. என்ன செய்வாய்?

 ஹ்ம்.. நீ பொறுக்குமளவுக்கே உனக்கு வலிகள் தரப்படும் என்கிறது பைபிள். என்னைகேட்டால் மகிழ்வுக்கும் அதுவே பொருந்தும். மகிழ்வுகளும் வலிகளும் பொறுக்குமளவுக்குத்தான் தரப்படுகின்றன எல்லா உயிர்களுக்குமே, எனினும் பிரித்தறியாது, பொருளறியாது அரற்றுகிறோம் இல்லையேல் கொண்டாடித் தீர்க்கிறோம்.  

Dune - Dolby

 ‘அமைதி’ என்பதை அத்தனை சத்தமாக ஆணையிடும் குரலில் சொல்கிறாள் ஆரக்கிள். அமைதி என்பதையும் சப்தமிட்டுச்சொல்லும்போது மட்டுமே அதன் பொருள் புரிகிறது. அன்னைக்கும் தனயனுக்குமான போராட்டம். ஹ்ம்.. இன்னொரு பிறப்பு,  வெளியே “நான் பயப்படக்கூடாது” என வாய்விட்டுச் சொல்லிக் கொண்டு தன்னைத்தேற்றிக்கொள்கிறாள் அன்னை. கண்டிப்பாக நான் பயப்படக்கூடாது’ இதுவும் கடந்து போகும், இக்கணங்களை அனுபவித்தே தீர்க்கவேண்டிய கட்டாயம் இருவருக்கும் ”பயம் என்பது உள்ளத்தை, என் தைரியத்தைக்  கொன்றழிக்கும் கருவி” பயம் என்பது சிறு மரணம் விட்டால் உன்னை முட்ட முழுக்காக கொன்றழித்தே தீரும்.  இந்தபயம் என்னைக்கடந்து செல்லும், அதை நான் அனுமதிப்பேன் மேலும் அதை எதிர்கொள்வேன் என அரற்றுகிறாள் அன்னை.  அது என்னைக்கடந்து சென்ற பின்னர் அதன் வழித்தடத்தை நான் கண்டறிவேன் என் உளக்கண்களால் பயம் தன்னைக் கடந்து சென்றபிறகு ஒன்றுமே இருக்காது , நான் மட்டுமே நிலைத்து நிற்பேன், கடந்து சென்ற பயமோ வலியோ அல்ல,.  என அழுகையுடனூடே மகிழ்ந்து கொள்கிறாள் அன்னை.

 ”போதும்” என கூறிவிட்டு ஊசியை விலக்கிவிட்டு கையை வெளியே எடுக்கப் பணிக்கிறாள் ஆரக்கிள். எதையும் பொறுமையின்றி  உடனடியாகச்செய்து முடித்து விடவேண்டும் என்ற ஆவல் கொண்ட மிருகத்தைபோல நீ நடந்து கொண்டிருப்பாயானால்  உன்னை வாழ அனுமதிக்க இயலாது கொன்றழித்திருபேன் என்கிறாள் ஆரக்கிள். உன் பரம்பரை வழி அதிஉன்னத ஆற்றலைப்பெற்றிருக்கிறாய்  ‘ஏனெனில் நான் அரசனின் மகன் என்பதாலா?. இல்லை நீ ஜெஸ்ஸீக்காவின் மகன்( அரசி) என்று கூறிவிட்டு அன்னையை  உள்ளே அழைக்கிறாள். ”ஹ்ம்.. நீ உன் கனவுகளைப்பற்றிச்சொல்  நீ கண்ட கனவுகளைப் போலவே எல்லாம் நடப்பதாக உணர்கிறாயா ?” என வினவுகிறாள் ஆரக்கிள் தனயனை நோக்கி. ”அப்படி இல்லை ” என்பதில் அடங்கி இருக்கிறது அவனது முன்னேற்றம். 

Dune' Release Plans: Why Warner Bros. Is Keeping the Film on HBO Max -  Variety

ஹான்ஸ் ஸிம்மர், தனயனின் பொறுக்க முடியாத வலிகளை சப்தத்தில் கொண்டு வர மிகப்பிரயத்னப்பட்டிருக்கிறார். சுற்றிக்கொண்டிருக்கும் ராட்டினத்தில் எதிர்பாராத கீழிறக்கம் வரும்போது, இல்லை தரையில் ஓடிக்கொண்டிருக்கும் விமானம் சரேலேன அதே வேகத்தில் அந்தரத்தில் மேலெழும்போது நமக்கு ஏற்படும் எக்கிப்பிடிக்கும் வயிற்றின் வலி ..கணநேரமானாலும் நம்மை ஒருவழி பண்ணிவிடும்.  அந்த உணர்வை தொடர்ந்தும் தக்கவைக்கிறது ஆதங்கத்துடனும் அழுகையுடனும்..ஆஹா.. ஓலம் ஒலிக்கிறது. இதே போல ஓலம் ‘ பேண்டிட் க்வீன் பூலன் தேவி படத்தில் நுஸ்ரத் ஃபதே அலிகான் இசைத்திருப்பார். கொஞ்சம் அரேபியன் ஸ்டைலில் சூஃபி கலந்திருக்கக்கூடும் என்றே எண்ணுகிறேன்.

கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்பதிலிருந்து,  மெய்ப்படும் கனவுகள் மட்டுமே வேண்டும் என்ற நிலை நோக்கி நகரும் படம். அழுத்ததுக்கு உட்பட்ட எந்த ஆத்மாவும் புடை போட்ட தங்கம் போல ஜொலிக்கும் என்பதை தலைவனாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தனயன் உணர்கிறான் காலம் செல்லச்செல்ல. Dreams are messages from the deep.! அதிஉன்னத மனிதன் தாம் தலைவனாவதை ஒருபோதும் விரும்புவதில்லை , அவன் அழைக்கப்படுகிறான் காலத்தால் பின்னர் அதற்கு அவன் பதிலளிக்கிறான்.

அன்னையின் இன்னொரு கருவை குறிப்பறிந்து சொல்கிறான் அவளுக்கே இன்னமும் உறுதியெனத் தெரியாத போதும். எதிர்காலத்தை குறிப்பறிந்து சொல்லும் உணர்வுகள், தம் இனத்தின் ,பிறரின் மற்றும் எதிரியின் நகர்வுகள் எல்லாவற்றையும் ஒரு Soothsayer போல குறிப்பாலுணர்த்தியும் அதற்கென தயார் நிலையில் தம்மையும் தம்மின மக்களையும் வழிநடத்திச்சென்ற நல்ல தலைவர்கள் துரோகத்தால் வீழ்த்தப்படுவது தமிழினத்துக்கு புதிதில்லை. இங்கும் அதுவே நிகழ்கிறது..

சிஜி’யின் பங்களிப்பு அபரிமிதம். அந்த ஹெலிகாப்டரை ‘ஊசித்தட்டான்’ போல வடிவமைத்து. அதன் இறக்கைகளை ஒருசேரக்குவித்து நிலத்துக்குப் பாய்வது என்பதெல்லாம் மிகப்புதிது  இருப்பினும் இன்னமும் வெள்ளைதோலனையரே எல்லாவற்றையும் எல்லோரையும் சேவியராக இருந்து காப்பர், கறுப்பின மக்கள் அவர்களுக்கு தொண்டூழியம் செய்யவே பிறந்தவர், பிற நாடுகளுக்கு வரும் இடர் அனைத்தையும் போக்க வெள்ளைத்தோலுள்ளவரையன்றி உலகில் வேறு யாரும் இல்லை என்ற தொன்மங்களைத்தவிர்த்திருக்கலாம்.

பாலை மணலில் கிடைக்கும் வேற்றுக்கிரக/ இண்டெர்ஸ்டெல்லார் பயணங்களுக்கு பயணிக்க உதவும் எரிபொருள் ஸ்பைஸஸ் பெற்றோலேயன்றி வேறொன்றுமில்லை. ஸ்பைஸை எடுத்துக்கொண்டு செல்லுங்கள், மணலை நாட்டினை எங்களிடம் விட்டுவிடுங்கள் எனக்கெஞ்சும் பாலைநில மக்கள் ஆஃபகானிஸ்தானேயன்றி வேறொன்றுமில்லை. உருமாறி வந்திருக்கும் ட்யூன் மணற்குன்று.

இந்த இயக்குநர் ’டெனிஸ் வில்லெனுவ்‘ இயக்கிய Arrival என்கிற வேற்றுக்கிரக வாசிகள் நம்முலகுடன் தொடர்பு கொள்ளுவதைப் பற்றிய படம். எல்லா அயலான் படங்களை விடவும் சற்று விலகி நின்று யோசிக்க வைத்தது. இசையும் மிகப்பிரமாதமாக அமைந்திருந்த ஒன்று. எனினும் அதில் ஸிம்மர் இல்லை.

#dune

 
 
Dune Character Posters Released - Flipboard

Friday, October 22, 2021

Easy On Me - Adele


 

அடெலின்’ புதிய பாடல். Easy on Me’  அப்படியே அவரின் பழைய பாடலான ‘Hello’வின் மறுபதிப்பு.. ஹ்ம்… இப்பாடலைப்பற்றிய பதிவுகள் விளம்பரங்கள், விவாதங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏகத்துக்கு எக்கச்சக்க அளவில் பரவிக்கிடந்தது. எனக்குந்தான்.  முடிவில் எதிர்பார்த்தது போல ஆறின காப்பி. இவரின் குரல் ஒரு ஆப்ரா சிங்கரின் குரல்.  விட்னி ஹூஸ்டனின் பாடல் கேட்கலாம் ‘Bodyguard’ல் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அழுத்தமான பாரம்பரிய இசை கொண்ட ராகங்களின் அடிப்படையில் அமைத்துவிடுவார். அதுவும் அப்படியே கேட்போர் மனதில் ஒட்டிக்கொள்ளும். கேட்டு முடித்த பிறகும் எதிரொலி போல ஒலித்துக்கொண்டேயிருக்கும் தலையில். சூயிங்கம் போட்டாலும் அகலாது இசைக்கும் தலைக்குள்.

அடேலிடமிருந்து இப்போதைய ஒலீவியா ரோட்ரிக்ஸ் போல ராக் இசை/ ஹிஸ்பானிய இசையெல்லாம் எதிர்பார்க்க இயலாது.  இருப்பினும் எனக்கென்னவோ ஆப்ரா சிங்கர் அடேலின் குரல் நம்ம அருணா சாய்ராம் (விஷமக்காரக்கண்ணன்) குரலை ஒத்திருப்பது வியப்பன்று. என்ன ஒன்று அவரின் குரலுக்கு கொட்டிக்கொடுக்கலாம். இப்பவே 10கோடி பார்வை கடந்து இன்னமும் சென்றுகொண்டிருக்கிறது ஊட்டூபில்.

”நல்ல எண்ணங்களும் வலுவான நம்பிக்கையும் கொண்டிருந்தேன் இப்போது பார்த்தால் அவையாவும் வெளித்தெரியவேயில்லை. ” இது அவரின் இப்போதைய பாடலைப்பற்றிய எந்தன் கருத்து இல்லை. பாடல் வரிகள்… ஹ்ம்.. அப்படியும் வைத்துக்கொள்ளலாம்.

I had good intentions
And the highest hopes
But I know right now
It probably doesn't even show

Verse and Chorus ஒன்றுமில்லை நம்ம பல்லவி சரணம் தான். வெஸ்ட்டர்ன் இசையில் இப்படியாப்பட்ட பெயர் அது. Bridge என்ற ஒன்று வரும். அதை அப்படியே அனுபல்லவி என்று அழைத்துக்கொள்ளலாம். மேலே எழுதியிருக்கும் வரிகள் மேலே ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் வரிகள்  bridge’ போல அவரின் புலம்பல்களை ஒன்று சேர்க்கிறது.
#EasyOnMe

 

Friday, October 1, 2021

கடவுள்களின் கலகம் (Coup of Gods)



'மெஹ்தி ராஜாபியன்’ ஒரு பயங்கரமான க்ரிமினல். பல முறை சிறை சென்றார். பலமுறை இல்லச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தனிச்சிறையில் செல்லில் அடைக்கப்பட்டு இருந்திருக்கிறார். முழு அரசாங்க கண்காணிப்பில் தொடர்ந்து இன்னமும் இருப்பவர். அவர் செய்த குற்றம் தான் என்ன? பெண்களை, பாடகிகளை அழைத்து தமது இசைத்தொகுப்பில் பாடவைத்தார் என்பதே! இவ்வளவையும் மீறி சென்ற வெள்ளியன்று அவரின் புதிய் ஆல்பம் வெளியாகி இருக்கிறது. ’நான் இசையின் மூலம் விடுதலையடைய விரும்புகிறேன். இசைக்கொடி மேலெழும்போது வானத்தில் இசையின் விடுதலை காட்சியளிக்கும் அதுவே எனக்கு உத்வேகம் ’என்கிறார்.
 
2007ல் ஒரு அண்டர்க்ரெளண்ட் இசைத்தளமாக ‘Barg Music’ ஐ உருவாக்கி அதன் மூலம் தமது இசையை விநியோகித்து வந்தார். ஆறாண்டு களுக்குப்பிறகு அது கண்டுபிடிக்கப்பட்டு முழுதுமாக அந்தத்தளம் மூடப்பட்டது. அலுவலகமும் அடைக்கப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்ட ராஜாபியன்,மிகவும் குரூரமான சிறையான ’Evin Prison’ ல் அடைக்கப்ட்டார். இடைவிடாத 24 மணிநேர விசாரணை, கைகால்கள் துண்டிக்கப்படும் என்பதான மிரட்டல்கள், சொல்லொணா துயரங்கள் அவருக்கு கிடைத்தன. இத்தனையும் அவர் இசைத்த தனால் விளைந்தவை. மூன்றுமாத தனிச்சிறையில் அடைக்கப்ட்ட காலங்களை இப்படி வர்ணிக்கிறார். ‘கண்களை மூடிக்கொண்டு மூன்று மாதகாலங்கள் கொடுஞ் சிறையில் காலந்தள்ளினேன்,அப்போது என் காதில் கேட்டவையெல்லாம் இசை இசை மட்டுமே , அப்போது தான் உணர்ந்தேன் இசையின் மகத்துவம் என்னவென்று..அதன் சக்தி என்னவென்று!’
 
2016ல் மீண்டும் அதே சிறையில் அடைக்கப்பட்டு, உண்ணா நோன்பு இருந்ததில் மேலும் அங்கு கிடைத்த கடும் தண்டனைகளால் உடல் நலிவுற்றார். தன் பார்வையை முற்றிலும் இழந்தார். ஒரு இசைக்கருவி போலும் இசைக்க முடியாது போனது அதன் பின். சிறையிலிருந்தபோதே தாம் உருவாக்கி வைத்திருந்த இசைக்கோவைகளுக்கு உயிரூட்ட எந்த உள்ளூர் இசைக் கலைஞர்களும் தயாராக இல்லை. இன்ஸ்டாக்ராம்/ வாட்ஸாப் வழி வேற்று வெளிநாட்டு இசைக் கலைஞர்களை தொடர்பு கொண்டு பாடவைத்தார். இதன் மூலம் அவருக்கு க்ராமி அவார்டுகள் கொடுக்கும் ரிக்கார்டிங் அக்காடமியின் சி.ஈ.ஓ ஹார்வி மேஸன் ஜூனியரின் தொடர்பு கிடைத்தது. இவரின் இசையை புகழ்ந்து தள்ளுகிறார் ஹார்வி.

மேலும் இப்போது வெளிநாட்டு பயணங்களுக்கான தடைகளுடன் உள்நாட்டிலேயே வசித்து வருகிறார். இந்த முப்பத்தோரு வயது மெஹ்தி ராஜாபியன். இந்த 2021/22 ஆண்டுக்கான கிராமி விருதுகளை வெல்லும் பாக்கியம் எனக்கு நிச்சயம் கிட்டும் அதன்மூலம் எனது வக்கீல்கள் எனை வெளிநாட்டு பயணங்களின் தடைகளை நீக்க உள்ளூர் நீதி மன்றங்களில் வாதிட்டு வெளிக் கொணர்வர் என்று உறுதி படக்கூறுகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பாக இவரின் இசை ஆல்பம் யூட்யூபில் வெளியிடப்பட்டிருக்கிறது. Truly International Music! Indeed.
 
மெஹ்தி வசிக்கும் நாடு இரான். #கடவுள்களின்கலகம்

 

Saturday, July 31, 2021

Don't Go Yet...

 


கமீலா கபேலா ஒரு புது சாங்கு ஒண்ணு எறக்கி விட்ருக்கு... எங்க பார்த்தாலும் அதே பாட்டுதான். ட்வீட்டர்ல, இன்ஸ்டாவுல, ஃபேஸ்புக்ல, யூட்யூப்லன்னு எத தொறந்தாலும் அம்மையாரின் பாட்டு. ( பின்ன....இப்டி பின்னாலே அலஞ்சா இப்டித்தான் அப்டேட் வந்து விழும்..ஹிஹி ) டிப்பிக்கல் சவுத் அமேரிக்கன் ஸாங். ஹிஸ்பானியா அண்டு மெக்ஸிகன் ஃப்ளேவர். அங்கருந்து வந்தவா தானே அதான். அமேரிக்கா வந்து இங்கிலீஷு கத்துக்கினு பாடுது அம்ணீ. கமீலா Fifth Harmony – Girl Band- லருந்து பிரிந்து வந்தபின் ஒவ்வொரு பாட்டும் பின்னிப் பெடலெடுக்குது அம்ணீக்கு. Work From Home-ன்னு ஒரு பாடல் Fifth Harmony-லருந்தப்போ வந்த பாட்டு. அதில இருக்கும் பல டான்ஸ் ஸ்டெப்ஸ் இந்தப்பாட்டிலும் இருக்கிறது.

ரிக்கி மார்ட்டின், என்ரிக் இக்லேஷியஸ், அப்புறம் நம்ம லூயி ஃபோன்ஸி (டெஸ்பாஸிட்டோ புகழ்) ஏன் ஸ்வாமி ஜெனிஃப்ர் லோபேஸ், அப்பால செலீனா கோமேஸ். (ஹிஹி முன்னாள் பீய்பெர் கேர்ள் ஃப்ரெண்டு) எல்லாரும் ஹிஸ்பானிய இசையை திகட்ட திகட்ட கொடுத்தவர். இப்ப அந்த லிஸ்ட்ல நம்ம ஒல்லிராணி கமீலாவும் அடக்கம்.

சரி இப்ப இந்த Dont go Yet’க்கு வருவோம். எப்பவும் சொல்றது தான் முன்ன வந்த ‘ஹவானா’ பாட்டு மேரி அவ்வளவு சுரத்து இல்லை. கொஞ்ச நாள் கழிச்சா இதப்பத்தியே எல்லாரும் பேசுவாங்க. நடக்கறது தானே.? டின்னர் பார்ட்டி சாங்.

ஆமா ஏன் இவ்வளவு சீக்கிரமாவே பாட்டு முடிந்துவிட்டது..?! Dont go yet!. அப்படீன்னு யோசிக்க வைக்கும் பாடல். ஜஸ்ட அவங்க பாரம்பரிய இசையைக் கொடுத்தாலே போதும் அத்தனை பேரும் விழுந்து விழுந்து கேக்றாங்ய,! ஹிஹி. அற்புதமான ஸ்பானிஷ் கிட்டாரில் ஈ ஸ்ட்ரிங்கில் முகப்புடன் துவங்கும் இசை மேலும் அவங்க மொழியில மட்டுமே பாடி பாடலை பிரபலமாக்க முடிகிறது அவர்களுக்கு. இருந்தாலும் இங்கு இது இங்கிலீஷூ பாட்டுதான். ஆனாலும் ஏதும் புதிதில்லை.

சென்யோரீட்டா’விடமிருக்கும் அந்த ஸெக்ஸி குரலும் தெனாவட்டும் தான் தொடர்ந்தும் கவனிக்க வைக்கிறது. சாப்பிடச்சொன்னா இப்டி மேசைல ஏறி ஆடிப்பாடவா செய்றது?!

I replayed this moment for months
Alone in my head, waitin' for it to come
I wrote all your lines in the scripts in my mind, and
I hope that you follow it for once

I imagine myself in satin, the room was platinum and gold
I'd dance and catch your eye, you'll be mesmerized, oh
We'd find a corner, then your hands in my hair
Finally we're here, so, why
Are you sayin' you got a flight, need an early night?
No, don't go yet

 

Saturday, June 12, 2021

Gate to Hell - HeraPolis

 Private Tour: Pamukkale Hierapolis and Aphrodisias Tour 2021

ஜாஷ் கேட்ஸின் ’Josh Gates’ ‘Expedition to the Unknown’ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். டிஸ்கவரியில், இவர் இன்னொரு பியர் க்ரில்ஸ். ஆனாலும் இவரின் நிகழ்ச்சிகள் வெறும் மலையேற்றம், நீண்ட சுழலுள்ள நெடுநதியில் நீந்திக்கடத்தல் என்பன போன்ற சாகசங்கள் இல்லை. அத்தனை நிகழ்வுகளும் தொல்லியல் சம்பந்தப் பட்டவை. இன்றைய நிகழ்ச்சி இறப்பிற்குப்பின் வாழ்வு என்பது குறித்து, வழக்கமாக யூட்யூபில் பார்த்துச்சலித்த அதே விஷயங்களைப் போட்டுத் தாளிக்க போகிறார் என நினைத்து உட்கார்ந்தால் அத்தனையும் மிகப்புதுமை.
 
ஹீராபோலிஸ் என்ற ஒரு இடம். துருக்கியில் இருக்கிறது. விக்கியில் தேடினால் விபரங்கள் கொட்டுகின்றன. அதுவல்ல முக்கியம். இங்கு ஒரு Gate to Hell அதாவது ஒரு ‘நரகத்தின் வாயில்’ இருக்கிறது. உள்ளே நுழைந்தவர் மீள்வதில்லை என்பது ஐதீகம். 🙂 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பூசாரி பலி கொடுக்க கிடாக்களையும் , செம்மறிஆடு, மாடுகளையும் அந்த குகையின் உள்ளே கொண்டு செல்வார், பின்னர் அவர் மட்டுமே திரும்ப வருவார். என்ன ஆகிறது அந்த அனிமல்ஸுக்கு. அவை உள்ளே சென்ற கணம் பலி கொடுக்கப் படுகின்றன. இருப்பினும் பூசாரி கையில் எந்த ஆயுதமும் எடுத்துச் செல்வதில்லை.
 
நம்ம ஜாஷ் கேட்ஸ், கூட வந்த தொல்லியலாளரிடம் கேட்கிறார். நாம இப்ப உள்ள போனா திரும்பி வருவமா? என. ‘வந்தாலும் வரலாம்; எனக்கூறிச் சிரிக்கிறார் அவர். ஜாஷ் ஒரு ஜேம்ஸ்பாண்ட், கொஞ்சம் கூட யோசிக்காது ஒத்துக்கொள்கிறார். இப்ப என்ன பிரச்னை எனில் அந்தப் பகுதியில் முன்னரே இருந்த வெந்நீரூற்றுகள் கசிந்து அந்த குகை முழுக்க பரவிக் கிடக்கிறது. குகை வெந்நீர்க்குளமாக இருக்கிறது. உள்ளே செல்ல வேணுமெனில் நீர்மூழ்குவபர் (Divers) உடை அணிந்தே செல்ல வேணும். நீர்க்குமிழிகள் நுரைத்துக்கொண்டு வெளிவருகின்றன. அதில் மூழ்கி சென்று உள்ளே என்ன தான் இருக்கிறது என்று பார்த்தே ஆகவேணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருவரும் செல்கின்றனர். உள்ளே செல்லச்செல்ல குமிழிகள் கேமெரா திரையை மறைக்கின்றன. வெந்நீரூற்று கசிந்து வெளியேறும் சிறு இடைவெளி வரை பயணித்து செல்கின்றனர். இருவரும். கூடவே கேமராக்காரரும் :) ஹ்ம்.. நம்ம ஜேம்ஸ் பாண்டுக்கு ஒன்றும் ஆகவில்லை. உள்ளே பேசிக் கொண்டே செல்கிறார். அவர் பேசும் அத்தனையும் திரையில் பெரிய எழுத்துகளில் தெரிகிறது. நீருக்குள் மூழ்கினால் சொற்கள் தெளிவாகக் கேட்காது என்பதால்.

உள்ளே சென்று பார்த்தவருக்கு சப்’பென ஆகிவிட்டது, பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் தான். ஆரும் மரிக்கவில்லை. ஆடும் மரிக்க வில்லை. ஹிஹி...சரி போதும் இங்கருந்து என்ன பண்றது என்று இருவரும் நீந்திக்கடந்து வாயிலை அடைகின்றனர். மரண வாயில் அல்ல அது. சரி மேலே தான் வந்து விட்டோமே என ஆக்ஸிஜன் மாஸ்க்கை கழற்ற முற்படுகிறார் கேட்ஸ். அப்போது தான் தொல்லியலாளர் தடுக்கிறார். கழற்ற வேண்டாம், கழற்றினால் இறப்பு உறுதி எனக்கூறி விட்டு உங்களுக்கு ஒன்று காண்பிக்கிறேன் என்கிறார். ஆக்ஸிஜன் மற்றும் இன்னபிற வாயுக்களை ஆராயும் மானியை இயக்கி காண்பிக்கிறார்.

அங்கு அந்த இடம் முழுவதும் ,குகை உள்ளே வெளியே, நீரூற்று பரவிக்கிடக்கும் அத்தனை பகுதியிலும் எவ்வித விலங்குகளாலும், மனிதனாலும் சகிக்க இயலாத அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு பெருகிக் கிடக்கிறது. ஆக்ஸிஜன் மிகக்குறைந்த அளவே இருக்கிறது எனினும் மனிதர்களால் அங்கு நிலை கொள்ள முடியும் எனக்கூறிச் சிரிக்கிறார். ஆஹா இவ்வளவு தானா மரணவாயில். உள்ளே அழைத்துச் செல்லும் விலங்குகளை அதன் உயரத்திற்கு இருக்கும் குறைந்த அளவு ஆக்ஸிஜன், பெருகிக்கிடக்கும் கரியமில வாயு தானாகக் கொன்று விடுகிறது. பூசாரியின் உயரத்தில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருப்பதால் அவரால் வெளியே வந்து விட முடிகிறது. கரியமிலவாயுதான் நரகத்தின் வாயில் 🙂 #GatetoHell
 
.

Saturday, May 29, 2021

பேர் வெச்சாலும்...!

 


”பேர் வெச்சாலும் வெக்காம” இந்த மைக்கேல் மதன காமராஜன் பாடலை மீளுருவாக்கம் பண்ணீருக்கார் புள்ளாண்டான். ஹிஹி..யுவன் தான். சந்தானம் படத்துக்காக. ஆஹா... ரம்மியமா இருக்குடா. கொஞ்ச காலங்கள் முன்னாடி இந்த 80களின் இந்திப்பாடல்களை ஜங்க்கர் பீட்ஸ் (Jhankar Beats) என்று அடிவெளுத்து ஆளுயர ஸ்பீக்கரில் வூஃபருடன் போட்டு தூள் பறத்துவார்கள் அது மாதிரி இந்தப்பாட்டு எங்கியோ கொண்டு போகுதுடா. இப்பக்கூட கூலி நம்பர்-1 இந்திப் படத்துக்காக 90களின் இசையை அப்படியே எடுத்து பாடலையும் எடுத்து படத்தையும் எடுத்து.. அடங் கொய்யா, அப்டியே போட்ருந்தார்கள். “மென் தோ ரஸ்தே மே ஜா ரஹாத்தா துஜ்கோ மிர்ச்சீ லகி தோ மென் க்யா கரூம்” ( ரகு தாத்தா இல்ல....ஹிஹி) அதையும் கேட்டுப்பாருங்க. சும்மா அள்ளும்டே.

இந்த ”பேர் வெச்சாலும் வெக்காத “பாடல் பல்லவிக்கும் சரணத்துக்கும் அதிக வித்தியாசமில்லாத ராகம். (பஹாடி ராகம் என்று போட்ருக்கு....ஹ்ம்.. எதோ கஷ்மீரி நாட்டார் பாடலாம்) அடிதூள் பறத்தணும்னு முடிவு பண்ணி ராசைய்யா போட்டுத்தாக்குனது..ஹீஹி.!

இது போன்ற பாடல்களெல்லாம் ஒரிஜினலிலேயே நன்றாக இருப்பதால் தான் மீளுருவில் இன்னமும் அள்ளுகிறது நம்மனதை! ஒரு சேஞ்சுக்காக இந்தப் பாடலை உங்க கம்ப்யூட்டரில் இருக்கும் விஎல்சி ப்ளேயரில் (இல்லை எந்தப்ளேயரிலும்) ராக் இசைக்கான ஈக்வலைஸர் செட்டிங்கில் வைத்து கேளுங்க. மக்கா ...கரோனால்லாம் எம்பதெட்டு அலை வந்தாலும் எங்கன்னு ஓடீரும்டா... ஹிஹிஹி...! #பேர்வெச்சாலும்

 

Friday, May 14, 2021

leave the door open!

 


ப்ரூனோ மார்ஸ்’ன் leave the door open! நல்ல பாடல். Rhythm and Blues வகையில் சேர்க்கப்பட்டிருக்கும் பாடல் எனக்கென்னவோ இது ஒரு நல்ல ஜாஸ் எனவே தோன்றுகிறது.  ப்ரூனோ மார்ஸ் கொஞ்சம் ரெட்ரோக்களை (பழைய )தொட்டு இசைத்து சுகிப்பதில் விருப்பமுடையவர். Uptown Funky World கேட்டுப்பாருங்க தெரியும். ஆர்ப்பாட்டமான பாடல்  Dont believe me Just Watch...! அப்புறம் Cardi B-யுடன் பாடிய Finesse ஆகட்டும் எல்லாம் ஆடிப்பாடித்திளைக்க வைக்கும் பாடல்கள். இங்கு leave the door open-ல் மேடையில் ஒரு குழுவாக அமர்ந்து கொண்டு ஒரு ட்ரம்ஸ், ஒரு ப்யானோ இன்னபிற இசைக்கருவிகளை வைத்துக் கொண்டு மேடைப்பாடல் போலவே அமைந்திருப்பது. நம்ம ‘கேளடி கண்மணி பாடகன் சங்கதி’ ஒரு மேடைப்பாடல் தான்.

ராசைய்யாவின் ‘கண்ணன் வந்து பாடுகின்றான் பாடலெல்லாம்’ , ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பின்னர் ரஹ்மானின் ‘அடியேய் என்ன எங்க நீ கூட்டிப்போற’ ’ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி’ கூட சொல்லலாம். சந்தோஷின் ‘அக்கம் பக்கம் பார் அம்மா அப்பா யார்’ பாடல் ...ஆனால் இவையெல்லம் அச்சசல் நூறு சதமானம் ஜாஸ் இசை..! இதஒயெல்லாம் கொஞ்சம் கேட்டுட்டூஊ இந்த ப்ரூனோ மார்ஸக்கேட்டா You will definitely leave the door open!... ஹிஹி...!

’சவரம் செய்து கொண்டு இப்போ பிறந்த குழந்தை போலிருக்கிறேன் வா’ எனக் காதலியை கூப்பிடுகிறார் ப்ரூனோ. ஹிஹி.. ஊரில் மேடைப் பாடல்கள் பாடும்போது, திருவிழாக்களில் இப்படித்தான் பின்னில் நிழல் போல உருவங்கள் பதிந்தோடும் பாடுபவர்களின் மேலும், இசைக் கருவிகளிலும் , முழு மேடையிலும்.. அதெற்கென கருவியை கொண்டே வருவர், பாடலிசைக்கும் போது எஃபெக்ட்கள் கொடுப்பதற்கு. ஆமாம்.. இது ஒரு ரெட்ரோ பாடல்தான். அந்த Feel வருவதற்காக நிழல்கள் ஓடுகின்றன. 01:50 செகண்ட்களில் உங்கள் கை தானாகத் தட்டத்துவங்கும். இல்லையெனில் அது தேவையேயில்லை எனலாம்.!

I ain't playin' no games
Every word that I say is coming straight from my heart
So if you tryna lay in these arms

02:29-ல் ஆரம்பிக்கும் அந்த ‘ல லல் லாஆஆ’ வில் மயங்கி நீங்க எழுந்து ஆடித்தானாகணும்,! வேறு வழியேயில்லை. பாடலின் உயிரே அந்தப்பகுதியில் தான் துவங்குகிறது. மேலும் பழைய பாடல்களில் முடிவுறும் தருவாயில் Fading செய்து கொண்டே போய் பாடல் முடிவுறும்.. ஆஹா இங்கும் அதே தான். இப்போதைய பாடல்களில் அந்த Fading முறை கைவிடப்பட்டு கடைசி வரை முழு சப்தத்துடன் பாடி ஓயும். ! 

Rhythm and Blues-க்கெனெவே  Trace Urban என்ற ஒரு சேனல் வந்து கொண்டிருந்தது எனது கேபிளில். அதை மாற்றி இப்போது டாட்டா ஸ்கை வந்ததும் எல்லாம் போயேவிட்டது. ஸ்கையில் இருக்கிறதாவென தேடித்தான் பார்க்கணும். நம்பவே இயலாது. அந்த சேனலில் ஒரு முறை ஒரு விளம்பரம் கூட வரவே வராது. முழுக்க முழுக்கப்பாடல்கள் தான். We love R and B என்ற முகப்பு வாக்கியத்துடன் சேனல் ஒலிக்கும், ஒரு மாதம் தொடர்ந்து பார்த்தாலும் விளம்பரங்களே வராது. அதனாலேயோ என்னவோ அந்தச்சேனல் எனக்கு வருவதேயில்லை...!!