Sunday, May 7, 2017

தேவசேனா..


தேவசேனா..ஹ்ம்..சரி சரி மலர் டீச்சர் மாதிரி .ஹிஹி. அவ்வளவு அழகு.பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும். வழக்கம் போல மேல் ஷாவனிஸக்கத தானேங்ணா.. அவ்வளவ் பெரிய லிங்கம்லாம் வெச்சிகினு சக்திய எப்டி ராணியாக்கறது ? அதுவும் சர்தான். இவ்வளவு பெரிய ராணி சிவகாமி சூழ்ச்சி கூடவா தெரியாம இருப்பார்? சகுனியின் சூழ்ச்சியில் சிக்கி தவறான முடிவுகளை எடுத்து தத்தளிக்கிறார். அந்தப்பாவத்துக்குத்தான் கைகளை உயர்த்திப்பிடித்து பாகுபலியைக்காப்பாற்றி தன்னை மாய்க்கிறார். இளையவனுக்கு மணமகள் , மூத்தவனுக்கு மணிமகுடம் என்று ஸ்ப்பிளிட் செகண்ட்ஸ்ல முடிவெடுக்கும் சிவகாமி. ஆஹா.. இப்டில்லாம் இப்ப யாராவது இருக்காங்களா? அடுத்த தேர்தல் வரைக்கும் கொஞ்சம் அடை காப்போம்னு காத்துக்கெடக்கற ஆட்கள் தானே குமிஞ்சி கெடக்காங்ய :) 


விஎஃப்எக்ஸ், சிஜி, எல்லாம் இப்ப தண்ணி பட்ட பாடாப்போச்சு. இங்க ஒரு மாயான்னு ஒரு இன்ஸ்ட்டிட்யூட் எல்லாம் இந்த நகாசு வேலே பண்றவா தான். அதுல விளம்பரத்துல இந்தப்படத்துல வேலே பாத்தவா எல்லாப்பேரும் இங்க தான் படிச்சிருக்கான்னு போட்ருந்தான்..ஹிஹி.. வீடியோ கேம்ஸ் நிறைய வருது இதை விடவும் மிரட்டலா. அதனால இந்த சிஜின்னா இதுக்கு மேலே யாராவது எதாவது செஞ்சு காட்ட மாட்டாளோன்னு மனசு கெடந்து அடிச்சிக்கிது. ஸ்டார் ட்ரெக் காலங்களிலிருந்து , ப்ரிடேட்டர், ஏலியன்ஸ், பொம்ப்பி, க்ளாடியேட்டர், இடையில சிப்மங்க்ஸ் கூட மனிதர்களை இணைத்துன்னு எக்கச்சக்கமா ஆயிட்டதால ஒண்ணும் பிரமாதமில்லை இங்கு.



மிரட்டல் காட்சி என்றால் பல்லா'வுக்கு மகுடம் சூட்டும் காட்சி தான். எல்லாம் முடிந்து பாகுபலி படைத்தளபதி எனப்பேர் சொன்னதும், ஒவ்வொரு குழுவாக ஆர்ப்பரிப்பதும், யானைப்படை காலாட்படை, என ஒவ்வொன்றாக அதிரவைக்கும் கோஷங்கள். அரியணை வரை அதிருகிறது. தேவசேனையின் இருக்கை அதிர்ந்து மெல்ல இடம் மாறுகிறது. மன்னவனின் இருக்கையில் அரிமா வரை அதிர்கிறது. சிவகாமி வெளிக்காட்டாமல் திரும்பி பாகுபலியைப் பார்க்கிறாள். கொற்றம் கொடி கும்பம் சாய்கிறது..படிகளில் தவறி விழுந்து சிந்திச்சிதறி அடடா அது தாண்டா பிரம்மாண்டம். கடைசிக்கு பாகுபலி போய்த்தான் கொற்றக்குடையை விழாமல் பிடித்துப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது . பின்னர் நடக்கப்போவதை அப்படியே சொல்லியிருக்கிறார் அந்தப்பத்து நிமிடங்கள்ல…. ..அதாண்டா ராஸ்மவுலி...வாழ்த்துகள்ங்ணாஆ….!

ஆமா ஏன் நேரடியாதமிழ்ல கொடுக்கவில்லை, பல இடங்கள்ல லிப் ஸிங்க் ஆகாம கொல்ட்டி டப்பிங் பாத்தாமேரி ஒரு ஃபீலிங்கி. அந்தக்காலத்துல நரசிம்ம ராஜூன்னு ஒரு நடிகர் நடித்து ஜெயமாலினில்லாம் பேயா வரும் படங்கள் மாதிரியே பல இடங்கள்ல எனக்கு தோணியது. இப்ப அந்தப்படங்கள்லாம் 'முரசு'ல போட்டுத்தள்றான். சின்னப்பிள்ளைகள்ல பார்த்தது, திரும்ப ஞாபகப்படுத்துறார் ராஸ்மௌலி..ஹ்ம்.. ..!

பாகுபலி அவந்திகா காதலைவிட , பாகுபலி தேவசேனா காதலைச்சொன்னவிதம் லயிக்கும்படி இல்லை. போர்த்திறமும், மதிநுட்பமும், காதலாகுமா ?..ஹ்ம்.. படைத்தளபதியை தேர்ந்தெடுக்கிறார் என்றால் சரி. ..இது காதலய்யா காதல். ஹ்ம்.. வேஸ்ட். எப்பவும் வில்லும் அம்புமா அலையிற பொண்ணை எப்படியப்பா மயக்குவது என்று விட்டால் பாகுபலி நம்மிடமே கேட்பார் போலிருக்கிறது :) அவர் தோள் மீதேறி இருமருங்குமாக நடந்து சென்று படகில் ஏறும் காட்சி மட்டும் கொஞ்சம் லவ்ஸ்ங்ணா.. அந்தப்படகு ஒரு சர்ரியலிஸப்படம் ஒன்றை நினைவு படுத்தத்தவறவில்லை. கடல், பாலம், மற்றும் சிறுகச்சிறுக பாலங்கள் ஒன்று கூடி பாய்மரப் படகுகள் போல காட்சி தரும். அது மாதிரி இறக்கைகள் எல்லாம் பாய்மரங்கள், இருபுறமும் பறந்து விரிந்து அடங்கும் துடுப்புகள் எல்லாம் கால்கள் , முகமோ ஒரு அன்னப்பட்சி, அதன் திறந்த கழுத்தில் தலைவனும் தலைவியும்……...அடடா , சாபு சிரில்ணே அசத்திட்டீங்கோ :)



எல்லாம் சரி, ப்ராபாஸின் முகத்தில் பல இடங்களில் களைப்பு தெரிகிறதே என்ன காரணம் ? என்னய்யா மெளலி சீக்கிரம் படத்த எடுத்துவிடுய்யா என்ற உணர்வா? போட்டு சவ்வாஆ இழுத்துக்கிட்டு திரியிற…?!

இசைக்கும் இந்தப்படத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. பிரம்மாண்டங்களை செவிக்கு எடுத்துச்செல்ல ஒரு நல்ல தீம் கூட இல்லை. பாட்டுகள் எல்லாம் பக்கா ஆண்ட்றா லோக்கல். அதுலயும் ஒரு பாட்டுல கூட தமிழ்ல வாயசைப்பே இல்லை. முதல் படம் நேரடியாத்தமிழ்ல கொடுத்ததால இரண்டாவதை எப்டிக்குடுத்தாலும் பாப்பாங்க்யன்னு நெனச்சிட்டார் போலருக்கு. இந்திக்காரங்க்யள விடுங்க. அவங்கயளுக்கு விந்திய மலைகள் தாண்டினா எல்லாம் மத்ராஸி தான். எல்லாம் ஒரே கடகடாகுடுகுடு தான். தகரடப்பால கல்லப்போட்டு குலுக்கினாப்போலன்னு எங்கிட்டயே சொல்லுவாங்க்ய..ஹ்ம்..!

நிறைய ரஜினி ஃபார்முலா. பதவி மறுப்பு, ஊரை விட்டு (இங்க அரண்மனைய) விலக்கி வைத்தல், சூழ்ச்சி பண்ணி அவரது மனைவியையே சபை முன்னால நிறுத்தி அவமானப் படுத்துதல்னு ஏகத்துக்கு "அச்சச்சோ இத்தன நல்லது பண்ற மனுசனுக்கு இப்டி கெடுதி யாராச்சும் பண்ணுவாஹளா" சமாச்சாரங்கள். இதெல்லாம் ரஸ்னி படத்துலயே இப்பல்லாம் யாரும் காமிக்கிறதில்லை. பிள்ளைவாள் கொஞ்சம் கவனிச்சிருக்கணும்



ஃபேன்டஸியா புராணக்கதையா இல்லை வெறும் புருடாவா என்பதெல்லாம் சர்ச்சையே இங்கு தேவையேயில்லை. ஏனென்றல் அத்தனை சர்ச்சை செய்யுமளவிற்கு படத்தில் ஒன்றுமேயில்லை. சினிமான்னாலே கொஞ்சம் மிகைதான். இது வழக்கமான தெலுகு மிகை. பாக சால பூந்தி. முதல் படத்தில் ஊற்றிக்கொடுக்கும் சின்ன கேமியோ ரோலில் வந்தவர் இந்தப்படத்தில் ஏன் வரலை ?!..ஹ்ம். சிஜிக்கே பிராணனன் போய்ட்டுது போலருக்கு...ஹிஹி..

உண்மையைச்சொல்லணும்னா என்னால் முதலை ரசிக்கமுடிந்த அளவிற்கு இரண்டாவதை ரசிக்க முடியவில்லை. முதலே முடிவாக இருந்திருக்கலாம். நல்லவேளை இரண்டாவதிலாவது முடிந்ததே என்ற சலிப்பு மேற்படுவதை ஒருக்காலும் தவிர்க்க இயலவில்லை.




7 comments:

  1. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் சிறப்பு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்..வெகு நாட்களுக்குப்பிறகு என் தளத்தில் ..நன்றி :)

      Delete
  2. Funny Review! are you from tinnaveli?

    ReplyDelete
  3. Phew! Finally somebody with the same thoughts as mine :)

    ReplyDelete