Thursday, November 3, 2011

பறவை



திருப்பிப்போடப்பட்ட 'எஃப்' வடிவத்தில்
அமர்ந்திருந்தது ஒரு பறவை அந்தக்கிளையில்
நீள அலகு , கால்கள் சிறகுக்குள் புதைந்து,
விரல்களின் நகங்கள் மட்டும் நீண்டு
மரக்கிளையை கவ்விக்கொண்டு நின்றது.
வால் சிறிது நீண்டு மரக்கிளைக்கு
கீழே வரை தெரிந்தது.

கச்சிதமான "எஃப்" தான்.
எஃப்'பைத்திருப்பி சரியாக்கினால்
என்ன எனத்தொன்றி
கல்லை விட்டெறிந்தேன் அதன்மேல்
பறந்து செல்கையில்
ஒரு எழுத்தையும் போல அல்லாமல்
நீண்ட கோடாகப்பறந்தது.

எஃப்'ம் கோடும் எனக்குத்தெரிகிறது
அந்தப்பறவைக்குத்தெரியுமா ?!




4 comments:

  1. என்னவோ சொல்ல வரீங்க, அனேகமா குழந்தைகளை திருத்துவதை பற்றியா? அப்படி தான் எனக்கு தோன்றுகிறது

    ReplyDelete
  2. நன்றி ஜீவா , கருத்திட்டமைக்கு, கொஞ்சம் ஆழமா யோசிங்க, கவிதை புரியும்!

    ReplyDelete
  3. என்ன சொல்லுறீங்க சின்னப் பையா?...எங்க மூளைக்கு
    இது பெரிய சவாலாக உள்ளதே (மூளை இருந்தாத்தானே ஹி..ஹி ..ஹி ..)
    வாழ்த்துக்கள் புதிய கோணத்தில் வளர நினைக்கும் அரிய கவிதை வரிக்கு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  4. ஹ்ம்..அம்பாளடியாள் நன்றி வழமையான வாழ்த்துக்களுக்கு,,தொடர்ந்து வாசிங்க எனது பக்கத்த,:-)

    ReplyDelete