Wednesday, August 3, 2011

ஆர்வமழை



மழையில்
எந்த மழை சிறந்தது?
சிறு தூறலா,
இல்லை அடித்துப்பிளக்கும் மழையா?
வெறுமனே போக்குக்காட்டி விட்டு
போகும் மழையா?

அல்லது
சிறிதும் எதிர்பார்க்காத கணத்தில்
கிளையிலிருந்து
சட்டெனப்பறந்து போகும்
பறவை போல,
தூறிக்கொண்டிருந்து விட்டு
சட்டெனக்கலையும் மழையா?

அல்லது
நேற்றுப்பெய்த மழையா ?
இல்லை, அது கொஞ்சமே பெய்தது.
இன்று பெய்து கொண்டிருக்கும் மழையா?
அது இன்னும் பெய்து முடியவில்லையே
பிறகெப்படி சொல்வது ?

அன்று பெய்த மழை
நேற்று பெய்த மழை
இன்றும் பெய்யும் மழை
நாளைக்குப் பெய்தாலும்
பெய்யும் மழை
எதுவானால் என்ன ?

அதுவும் மேலிருந்து
கீழிறங்குவதைப்
பார்ப்பதில் தான்
நமக்கு
எத்தனை ஆர்வம்...?!


.

11 comments:

  1. விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் நீர் அம்புகள்...
    "ஆர்வ மழை" மிகவும் அழகான சாரல் கவிதை

    ReplyDelete
  2. விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் நீர் அம்புகள்...
    "ஆர்வ மழை" மிகவும் அழகான சாரல் கவிதை

    ReplyDelete
  3. Nice.,
    Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

    ReplyDelete
  4. சாரலில் என்னோடு செர்ந்து நனைந்த ஹேமா'விற்கு வாழ்த்துகள்..! :-)

    ReplyDelete
  5. கருன் -ரொம்ப நாளைக்கு பிறகான உமது வருகை,மழைபோல எனக்கு மகிழ்வைத்தந்தது,., :-)

    ReplyDelete
  6. ரொம்ப ரசிக்க வெச்ச மழை :-))

    ReplyDelete
  7. சாரலும் வாழ்த்தும் இன்ப மழை !

    ReplyDelete
  8. வணக்கம் நண்பரே

    உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

    http://www.valaiyakam.com/

    ஓட்டுப்பட்டை இணைக்க:
    http://www.valaiyakam.com/page.php?page=about

    ReplyDelete
  9. அருமையான கவிதைக்கு அழகு சேர்க்கும் படங்கள்.

    ReplyDelete
  10. என் ஆர்வமழைக்கு அழகு சேர்க்கும் சித்ரா'வின் சாரலுக்கு நன்றி..! :-)

    ReplyDelete
  11. இராஜராஜேஸ்வரி said...

    பருவம் தப்பாத மழையே அழகு.
    August 3, 2011 6:28 PM

    ReplyDelete