மரம் வெட்டி
தான் தொலைத்த கோடரி
வேண்டி நின்றான்
தேவதையிடம்
தொலைத்த கோடரி தவிர
வேறெந்த உலோகக்கோடரியும்
வேண்டேன் என்றான் அவன்
எந்தக்கோடரியும்
மரத்தை வெட்டவே பயன்படும்
ஆதலால் உனக்கு கோடரிகள்
நான் கொடுப்பதிற்கில்லை
கனி தரும் கன்றுகள்
யாம் தருவோம்
பயிர் செய்து பிழைத்துக்கொள்
என்றாள் தேவதை.
மரக்கன்றுகள் வாங்கி
அவன் சென்று விட்டான்
கொடுத்த மகிழ்வில்
தேவதையும்
மறைந்து விட்டாள்.
இப்போது என்
கையில் இருக்கிறது
அந்தக்கோடரி.
தான் தொலைத்த கோடரி
வேண்டி நின்றான்
தேவதையிடம்
தொலைத்த கோடரி தவிர
வேறெந்த உலோகக்கோடரியும்
வேண்டேன் என்றான் அவன்
எந்தக்கோடரியும்
மரத்தை வெட்டவே பயன்படும்
ஆதலால் உனக்கு கோடரிகள்
நான் கொடுப்பதிற்கில்லை
கனி தரும் கன்றுகள்
யாம் தருவோம்
பயிர் செய்து பிழைத்துக்கொள்
என்றாள் தேவதை.
மரக்கன்றுகள் வாங்கி
அவன் சென்று விட்டான்
கொடுத்த மகிழ்வில்
தேவதையும்
மறைந்து விட்டாள்.
இப்போது என்
கையில் இருக்கிறது
அந்தக்கோடரி.
.
மிகச் சிறப்பான கவிதை. பொதுவாக எழுதுபவர் பாத்திரங்களை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி என எண்ணுகிறோம். உண்மையில் பாத்திரங்கள் அவரவர் நியாயங்களை எழுதுபவர் முன் வைப்பதே நிகழ்கிறது.அதை இந்த கவிதை அழகாகப் பேசுகிறது.அதோடு இந்த உலகின் சமனற்ற நியாயங்களை இயல்பாகவும், புத்துணர்வோடும் முன் வைக்கிறது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி மிருணா..முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்..:-)
ReplyDelete