தவளையின் முதுகில்
கல்லைக்கட்டி அதை
எம்பச்செய்தேன்
வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளைப் பிய்த்துவிட்டு
அதைப் பறக்கச்செய்தேன்
ஊரிக்கொண்டிருக்கும்
எறும்புகளின் பாதையில்
ஆழமாகக் கோடிழுத்து
அவற்றை அலைபாயச் செய்தேன்
திருப்பிப்போடப்பட்ட
ஆமைகளின்
வயிற்றுப்பகுதியில்
கால் மிதிபட
அவற்றின் மீதோடினேன்
தமது தொண்டைக்குள் மட்டும்
ஒலியெழுப்பி முயங்கிக்கொண்டிருந்த
புறாக்களைத் திடீரெனப் பயங்காட்டி
பறக்கச் செய்தேன்
குட்டி நாயின் காதுகளை
வலிக்குமளவு திருகி
அவற்றை ஊளையிடச் செய்தேன்
என் நெஞ்சு முழுக்க
இப்போது நான் கல் சுமந்து
திரிகின்றேன்.
கல்லைக்கட்டி அதை
எம்பச்செய்தேன்
வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளைப் பிய்த்துவிட்டு
அதைப் பறக்கச்செய்தேன்
ஊரிக்கொண்டிருக்கும்
எறும்புகளின் பாதையில்
ஆழமாகக் கோடிழுத்து
அவற்றை அலைபாயச் செய்தேன்
திருப்பிப்போடப்பட்ட
ஆமைகளின்
வயிற்றுப்பகுதியில்
கால் மிதிபட
அவற்றின் மீதோடினேன்
தமது தொண்டைக்குள் மட்டும்
ஒலியெழுப்பி முயங்கிக்கொண்டிருந்த
புறாக்களைத் திடீரெனப் பயங்காட்டி
பறக்கச் செய்தேன்
குட்டி நாயின் காதுகளை
வலிக்குமளவு திருகி
அவற்றை ஊளையிடச் செய்தேன்
என் நெஞ்சு முழுக்க
இப்போது நான் கல் சுமந்து
திரிகின்றேன்.
நீங்கள் இணைத்துள்ள சிறுவனின் திரைப்படம் பார்த்துள்ளேன். அருமையான படம் அது.
ReplyDeleteகடைசி வரி கணக்க வெச்சிடுச்சி மனசை... உண்மைதானே...
ReplyDeleteஓ!...அம்மாடி ஏன் இந்தக் கொடுமை!.....(மிகவும் பாதிக்கப் பட்ட ஒரு சிறுவனாகத்தான் இருக்கும்)....
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தமிழ்வாசி : இது கிம் டூக்கிம்'மின் திரைப்படத்தை பார்த்ததன் விளைவு.இது மாதிரி நானும் சிறுபிள்ளைல செய்தது தான்..அறியாப்பருவ நினைவுகள் கடைசி வரை நெஞ்சை அழுத்தத்தான் செய்கின்றன.
ReplyDeleteகவிதை காதலன்: அழிக்க இயலாத நினைவுகள்,குமைந்து போவதைத்தவிர வேறேதும் செய்ய இயலாத நிலை.
ReplyDeleteகோவைக்காவி: அந்தச்சிறுவன் வேற யாருமில்ல.இதே சின்னப்பயல் தான்.
ReplyDeleteகடந்த கால் நினைவுகளை அசைபோடச் செய்யும் அழகான கவிதை.!!
ReplyDeleteகுணசீலன்..ஆழமான ரணங்ளைக்கொண்ட அவை ஆன்மா வரை ஊடுருவிக்கிடக்கிறது
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
நன்றி ரத்னவேல் சார்...
ReplyDeleteதவறு செய்த மனிதனின் நெஞ்சம் இளகியபின்னால்
ReplyDeleteஅதன் மன உணர்வு எப்படி இருக்கும் என்பதை ஒரு
சிறு பையனை வைத்து அழகிய கவிதையால் உணர்த்தப்பட்ட விசயம் அருமை!.பாராட்டுகள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...
நன்றி அம்பாளடியாள்..
ReplyDelete