காக்கை பறந்து வந்து
என் வீட்டுத்திண்டில் அமர்ந்தது.
அருகில் இருந்த குடுவையில்
அடியில் மட்டுமே கொஞ்சம் நீர்.
எப்படித்தான் எடுக்கும்
என்று பார்த்துக்கொண்டிருந்தேன்
அது குடுவையின் அருகே
வந்தமர்ந்து வெறுமனே
பார்த்து விட்டு
பின் நடை பழகியது,
எதையும் எடுத்து
குடுவைக்குள் போடவுமில்லை
நீரும் மேலே வரவில்லை
பறக்கும் காக்கைக்கு
ஒரு சிறிய குடுவையும்
அதன் நீரும் பெரிதா ?
காக்கை பறந்து சென்றுவிட்டது
இப்போது எனக்குத்
தாகம் எடுக்கிறது.
என் வீட்டுத்திண்டில் அமர்ந்தது.
அருகில் இருந்த குடுவையில்
அடியில் மட்டுமே கொஞ்சம் நீர்.
எப்படித்தான் எடுக்கும்
என்று பார்த்துக்கொண்டிருந்தேன்
அது குடுவையின் அருகே
வந்தமர்ந்து வெறுமனே
பார்த்து விட்டு
பின் நடை பழகியது,
எதையும் எடுத்து
குடுவைக்குள் போடவுமில்லை
நீரும் மேலே வரவில்லை
பறக்கும் காக்கைக்கு
ஒரு சிறிய குடுவையும்
அதன் நீரும் பெரிதா ?
காக்கை பறந்து சென்றுவிட்டது
இப்போது எனக்குத்
தாகம் எடுக்கிறது.
.
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஅழகிய கவிதை...
28/7/11 7:38 PM
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅருமை.
28/7/11 8:52 PM
மதி said...
ReplyDeleteநல்ல கவிதை .. நீண்ட நாளாக மனிதம் சிந்தித்திருக்க வேண்டிய கேள்வி :-)
29/7/11 1:58 AM
ஆழமான கருத்து அருமை
ReplyDeleteநவீன காகம்!!!
ReplyDeleteநன்றி பனித்துளி , வெகு காலமய் உங்களை காண இயலவில்லை, :-)
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி : காகம் நவீனமா..?! :-)இல்லை கவிதை நவீனமா..?! :-) நன்றி உங்கள் கருத்துக்கு..!
ReplyDelete