Friday, December 16, 2011

பாரதி செல்லம்மா




கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்கங்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.

கடிதம் -1 -  1901ம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுவிற்கு எழுதியது.
 
                                                        ஒம்
                                                                                                                
ஸ்ரீகாசி
                                                                                                               
ஹனுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்லஇதைப்பற்றி உன்னை சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.
     

உனதன்பன்
சி.சுப்ரமணியபாரதி

****







இந்த கடிதம் பெற்ற வெங்கடேசுவர எட்டுத்தேவர் பாரதியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். சமவயது நண்பர். கடையம் வந்ததும் தனது மைத்துனர் அப்பாதுரையின் வீட்டில் தங்கியிருந்த பாரதி கடையம் ராமசாமி கோவிலுக்கு வடக்கே பட்டர்வீடு என்ற ஒட்டுக்கட்டடத்துக்கு குடியேறுகிறார். இதை பற்றிய விபரங்கள் தான் கடிதத்தில் உள்ளது. ஜமீன்தார் பொருளதவி செய்து உதவினாரா என்ற தகவல்கள் தெரியவில்லை.



கடிதம்எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கு கடிதம். 1919
         

                                                                                                         கடயம்.
                                                                                                          30
ஜனவரி. 1919


ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால்  இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையததாகயிருக்கிறது.

இந்த விஷயத்தைக் குறித்து  மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக்கூடிய தொகையை ஸ்ரீமான் சி. சுப்ரமணிய பாரதி பழைய கிராமம் கடையம் என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னம்மாச் சித்தி மூலமாகவேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்

உனக்கு மகாசக்தி அமரத்தன்மை தருக 

 உனதன்புள்ள
 
சி. சுப்ரமணிய பாரதி.



.

5 comments:

  1. அருமை.
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி நண்டு..! அவர் எழுதிய ஒவ்வொரு வரியும்
    எழுத்தும் படிக்கபடிக்க திகட்டாதவை.!

    ReplyDelete
  3. வரலாற்று ஆவணம்...
    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    தமிழ்மணம் 4

    ReplyDelete
  4. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
    பாரதியின் அரிதான விஷயங்களை
    வெளிக்கொணர ஒரு சிறிய முயற்சி இது

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி
    அருமை .

    ReplyDelete