Saturday, December 24, 2011

வன்முறைக்கவிதை



நகம் வெட்டிக்கொண்டிருந்த போது
சிறிது சதையையும் சேர்த்து
வெட்டிவிட்டது நகவெட்டி

துணுக்காக வெளியேறிய
ரத்தம், சிறிது பெருகி
வழியத்தொடங்கியது.
நின்று விடும் என்று நினைத்து
கவனியாமல் விட்டுவிட நினைத்தேன்

தொடர்ந்து வழிந்து கொண்டேயிருந்தது.
சரி என்று வாயில் வைத்து
விரலைக்கொஞ்சம்
ஈரப்படுத்தினேன்.

உப்பு தோய்ந்து,சிவப்பு
நிறத்துடனான எனது
குருதியின் சுவை
நாக்கிற்கு மிகவும்
பிடித்துப்போய்விட்டது

இளஞ்சூட்டுடன் வழிவதை
தடுக்க மனமின்றி
சப்பிக்கொண்டேயிருக்கிறேன்

இதை வன்முறைக்கவிதை என்று
பிரசுரிக்க பலரும் மறுக்கின்றனர்
எனக்காக யாரேனும் சிபாரிசு
செய்வீர்களா..?!


 

6 comments:

  1. Sabash..

    இழப்பீடு வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீர்ப்பிற்கு முன் பற்றுகை (ஜப்தி) செய்ய முடியுமா?
    http://sattaparvai.blogspot.com/2011/12/blog-post_4285.html
    T.M. 3 - udanz 3

    ReplyDelete
  2. மிக மிக அருமையான வன்முறைக் கவிதை
    இரத்தம் பிடித்துப் போய்விட்டால் வேறு என்னவாம்
    (அருமையான என்பதைக் கவனிக்கவும் )

    ReplyDelete
  3. ஹ்ம்..நண்டு'வின் பார்வை இப்போதெல்லாம்
    சின்னப்பயலின் மீது வெகுவாகவே விழுகிறது :-) நன்றி..!

    ReplyDelete
  4. ரத்தவாடை பிடித்து வந்த ரமணிக்கு நன்றி..!
    :-))))

    ReplyDelete