Thursday, December 29, 2011

ஒற்றை மழைத்துளி



நேற்றிரவு பெய்த மழையில்
எனது மொட்டுகள் முழுசாக
நனைந்து தான் விட்டன

நீர்த்துளிகள் தொடர்ந்து விழுந்து,
அதன் பாரம் தாங்காது
அவை தொய்ந்து போய்க்கிடந்தன

விரைவில் மலரும் என்று
விழி வைத்துக்காத்திருந்தேன்
பகலவனை எதிர்பார்த்து
மொட்டுகளும் காத்திருந்தன

நேரம் ஆக ஆக
எனக்கு பொறுமையின்றிப்போனது
அவை அங்கனம்
ஏதும் காட்டிக்கொள்ளவில்லை

மழையில் குளித்தெழுந்த
சூரியனும் தன் பூசணம் பூத்த
கதிர்களை மொட்டுகளின்
மீதேவினான்

மெல்லச்சோம்பலுடன்
விரிந்த ஒரு மொட்டு
தம்முள் யாருமறியாது
தேக்கி வைத்திருந்த
ஒற்றை மழைத்துளியை
எனக்கு மட்டும் காட்டியது.


.

9 comments:

  1. மெல்லச்சோம்பலுடன்
    விரிந்த ஒரு மொட்டு
    தம்முள் யாருமறியாது
    தேக்கி வைத்திருந்த
    ஒற்றை மழைத்துளியை
    எனக்கு மட்டும் காட்டியது.
    மிகவும் அருமை

    ReplyDelete
  2. ரசித்த சசிகலாவிற்கு நன்றி,,!

    ReplyDelete
  3. நண்டு சார் நன்றிகள்..!

    ReplyDelete
  4. இனிமையான அனுபவத்தைத் தந்த கவிதை. நன்று. மிக ரசித்தேன்.

    ReplyDelete
  5. அழகியல் என்றும் ரசனைக்குரியது!
    கணேஷ் நன்றிகள்..!

    ReplyDelete
  6. நல்ல கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete