Wednesday, September 28, 2011

நியூற்றினோவும் எனது தோழியும்





 நியூற்றினோவின் துணை கொண்டு
ஒளியினுங்கூடுதல் வேகம்
பயணித்தும் உன் மனதின் ஆழம்
இன்னும் அறிய இயலவில்லை தோழி
ஐன்ஸ்டீன் தோற்றதும்
இங்கனம் தான் போலிருக்கிறது.

பயணத்தில் பல படிகள்
கீழிறங்கும் போது அறிய முடிந்தது.
இதுவரை நீ எனக்குக்காண்பிக்காத
உனது உள் மனத்தின்
ஒரு படியிலும் எனக்கான
இடம் இல்லை என்பதை.

எங்காவது ஒரு மென்மையான
மூலையில் எனக்கான ஒரு
இடம் இருக்குமென நினைத்து
எனக்குள் மகிழ்ந்திருந்த என்னை
என்றோ பிறந்த உன்னுடன் ,
நேற்றுப்பிறந்த நீயூற்றினோவும்
சேர்ந்து சபித்துவிட்டதில்
முதல் முறையாக எனக்குக் கோபம் வந்தது

ஐன்ஸ்டீனின் விதியை
மீள நிரூபிக்கும் ஆராய்ச்சியில்
இனியும் தாமதிக்காமல்
முழு மனதுடன் இறங்கிவிடுவதென்று
முடிவெடுத்திருக்கிறேன்.
புரட்டிப்போடும் அறிவியலும்
இந்த இயல்(ற்)பியலுக்கு
உதவவில்லை என்பதால்



.

3 comments:

  1. அடேங்கப்பா ஐயா சாமி இந்த லெவல்ல காதலப் புரட்சிக் கவிதையை இதுவரை யாரும் எழுதினதை நான் அறியவில்லை!.....தலையைக் குனியுங்கள் சகோ இந்தக் கிரீடம் உங்களுக்கு மிக
    பொருத்தமானது என்பதே என் தீர்மானம் .இதை யாராலும் மாற்ற முடியாது .வாழ்த்துக்கள் .....வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் .............
    என் கண்கள் ஆனந்தத்தில் குளமாகிறதே அருமை சகோ அருமை !....

    ReplyDelete
  2. எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு .ஒரு சின்ன மன
    வேதனை நச்சு நச்சென்று 101 ஓட்டுப் போட முடியாமல் போச்சே ...........

    ReplyDelete
  3. @அம்பாளடியாள்: கிரீடம் பெறத்தகுதியுள்ளது தானா என் தலை ?! :-) மிக்க நன்றி...
    எத்தன நாளைக்கித்தான மானே, தேனேன்னு எழுதுறது..?! :-)))

    ReplyDelete