Thursday, September 22, 2011

நான் எப்பொதெல்லாம் தனிமையிலிருக்கிறேன்



எதையும் யோசிக்காதபோதும்,
எதையும் செய்ய,செய்விக்க இயலாதபோதும்,
ஒரு பாடலையும் பாடாதபோதும்,

என் கிட்டாரின் மெல்லிய விள்ளல் இசையை
என் விரல்களால் தூண்ட இயலாதபோதும்,
என் கவிதைகளில் காதல் இல்லாதபோதும்,
என் கண்களில் ஈரம் குறையும் போதும்,

என்னைச்சுற்றி நடப்பவை பற்றி எனக்கு
சிறிதும் அக்கறையில்லாத போதும்,
எனக்கென சாலையோரப்பெட்டிக்கடைக்காரன்
ரொட்டியை மீதம் வைத்திருக்காத போதும்,

தூரத்தில் ஒலிக்கும் தடதடக்கும் ரயிலின் ஓசை
சட்டென மறையும் போதும்,
என்றும் வரும் என நம்பிக்காத்திருந்த
மழைக்குருவி இன்று வராமலேயே போகும்போதும்

என
நான் எப்போதெல்லாம்
தனிமையிலிருக்கிறேன்
என்று உணர்ந்துகொண்டிருக்கும்
அப்போதெல்லாம் தனிமை
என்னைப்படர்ந்து கொண்டிருக்கிறது.
 




   .

4 comments:

  1. Rajesh t says:
    September 12, 2011 at 3:30 am

    //என்னைச்சுற்றி நடப்பவை பற்றி எனக்கு
    சிறிதும் அக்கறையில்லாத போதும்,
    எனக்கென சாலையோரப்பெட்டிக்கடைக்காரன்
    ரொட்டியை மீதம் வைத்திருக்காத போதும்,//

    //நான் எப்போதெல்லாம்
    தனிமையிலிருக்கிறேன்
    என்று உணர்ந்துகொண்டிருக்கும்
    அப்போதெல்லாம் தனிமை
    என்னைப்படர்ந்து கொண்டிருக்கிறது.//

    Nice friend .

    ReplyDelete
  2. குமரி எஸ். நீலகண்டன் says:
    September 12, 2011 at 3:50 am

    தனிமையை அழகாக கவிதையில் சொல்லி இருக்கிறீர்கள்…

    ReplyDelete
  3. தனிமையிலிருக்கிறேன்
    என்று உணர்ந்துகொண்டிருக்கும்
    அப்போதெல்லாம் தனிமை
    என்னைப்படர்ந்து கொண்டிருக்கிறது.
    // அசத்தலான வரிகள் சகோ...

    ReplyDelete
  4. கருனின் தற்போதைய பதிவுகளில் சமூக சிந்தனைகளைத்தொடர்ந்து வாசிக்கிறேன்.

    நன்றி கருன் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..! :-)

    ReplyDelete