Saturday, August 20, 2011

கல் நெஞ்சு



தவளையின் முதுகில்
கல்லைக்கட்டி அதை
எம்பச்செய்தேன்

வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளைப் பிய்த்துவிட்டு
அதைப் பறக்கச்செய்தேன்

ஊரிக்கொண்டிருக்கும்
எறும்புகளின் பாதையில்
ஆழமாகக் கோடிழுத்து
அவற்றை அலைபாயச் செய்தேன்

திருப்பிப்போடப்பட்ட
ஆமைகளின்
வயிற்றுப்பகுதியில்
கால் மிதிபட
அவற்றின் மீதோடினேன்

தமது தொண்டைக்குள் மட்டும்
ஒலியெழுப்பி முயங்கிக்கொண்டிருந்த
புறாக்களைத் திடீரெனப் பயங்காட்டி
பறக்கச் செய்தேன்

குட்டி நாயின் காதுகளை
வலிக்குமளவு திருகி
அவற்றை ஊளையிடச் செய்தேன்

என் நெஞ்சு முழுக்க
இப்போது நான் கல் சுமந்து
திரிகின்றேன்.


12 comments:

  1. நீங்கள் இணைத்துள்ள சிறுவனின் திரைப்படம் பார்த்துள்ளேன். அருமையான படம் அது.

    ReplyDelete
  2. கடைசி வரி கணக்க வெச்சிடுச்சி மனசை... உண்மைதானே...

    ReplyDelete
  3. ஓ!...அம்மாடி ஏன் இந்தக் கொடுமை!.....(மிகவும் பாதிக்கப் பட்ட ஒரு சிறுவனாகத்தான் இருக்கும்)....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. தமிழ்வாசி : இது கிம் டூக்கிம்'மின் திரைப்படத்தை பார்த்ததன் விளைவு.இது மாதிரி நானும் சிறுபிள்ளைல செய்தது தான்..அறியாப்பருவ நினைவுகள் கடைசி வரை நெஞ்சை அழுத்தத்தான் செய்கின்றன.

    ReplyDelete
  5. கவிதை காதலன்: அழிக்க இயலாத நினைவுகள்,குமைந்து போவதைத்தவிர வேறேதும் செய்ய இயலாத நிலை.

    ReplyDelete
  6. கோவைக்காவி: அந்தச்சிறுவன் வேற யாருமில்ல.இதே சின்னப்பயல் தான்.

    ReplyDelete
  7. கடந்த கால் நினைவுகளை அசைபோடச் செய்யும் அழகான கவிதை.!!

    ReplyDelete
  8. குணசீலன்..ஆழமான ரணங்ளைக்கொண்ட அவை ஆன்மா வரை ஊடுருவிக்கிடக்கிறது

    ReplyDelete
  9. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  10. நன்றி ரத்னவேல் சார்...

    ReplyDelete
  11. தவறு செய்த மனிதனின் நெஞ்சம் இளகியபின்னால்
    அதன் மன உணர்வு எப்படி இருக்கும் என்பதை ஒரு
    சிறு பையனை வைத்து அழகிய கவிதையால் உணர்த்தப்பட்ட விசயம் அருமை!.பாராட்டுகள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...

    ReplyDelete
  12. நன்றி அம்பாளடியாள்..

    ReplyDelete