Sunday, January 30, 2011

கையிலெடுக்க உகந்தவை


 இன்று மஹாத்மாவின் நினைவு நாள்

கையிலெடுக்க
உகந்தவை

காதலி,
குழந்தை,
வாத்தியக்கருவிகள்,
மனதிற்குப்பிடித்த
எழுத்தாளரின் புத்தகம்,
பார்த்தவுடனே
சுவைக்கத்தூண்டும் இனிப்பு,
அழகுற வடிவமைக்கப்பட்ட
கண்ணாடிப்பொருட்கள்,
புதிய உடுப்பு,
பனியில் நனைந்த
ஹிமாச்சல் ஆப்பிள்,
மடிக்கணினி,
வேலைப்பாடு மிக்க
கைத்தடி,
எழுத்தாளனின் பேனா,
ஓவியனின் சாயம்
படிந்த தூரிகை,
ஆவி பறக்கும்
டிகிரி காப்பிக்குவளை,
புராதனக் கலைப்பொருள்,
அழகிய புகைப்படம்,
ஹைதராபாத் கண்ணாடி
வளையல்கள்,
காதலியின் உள்ளங்கை,
பூஞ்சையான பூனை,
முசுமுசுவென
இருக்கும் முயல்,
பிசிறற்ற பஞ்சுப்பொதி,
பட்டுப்பூச்சி,
மயிலிறகு,
எவருக்கேனும் கொடுக்க
நினைக்கும் ரோசாப்பூ,
வங்கியிலிருந்து
இப்போது கிடைத்த
மணம் மாறாத புதிய
சலவைத்தாள்,
டிவி ரிமோட்,
சலவைக்குச்சென்று
வந்த உடுப்பு,
பொம்மை,
ரசகுல்லா,
ஓடையில் சலசலக்கும்
குளிர்ந்த நீர்,
ஐஸ்க்றீம்,
காதலிக்கு அனுப்ப
நினைக்கும் வாழ்த்து அட்டை,
வியர்க்கும் வேளையில்
அருகில் கிடக்கும்
பனைஓலை விசிறி,
பாய்ந்து ஓடி வரும்
வெள்ளாட்டுக்குட்டி,
செல்பேசி,
கடைந்த வெண்ணை,
பிரிக்காத பரிசுப்பொதி,
பூங்கொத்து,
புறா,
திருக்குறள்,
சப்ளாக்கட்டை,

என
இவை யாவும்
கையிலெடுக்க
உகந்தவை
...
ஆனால்
துவக்கு அல்ல.



.

2 comments:

  1. அனைத்தும் அருமை ..நன்றாக ரசித்திருக்கிறீர்கள் ..இவற்றில் எதை கையில் எடுக்க சிறந்தது என்று தெரிவு செய்ய முடியவில்லை ..அனைத்தும் அருமை ..வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  2. சுதர்ஷன் இதிலருக்கிற எல்லாத்தையும் எடுங்க...ஆனா கடைசியா சொன்னது மட்டும் வேணாம்...

    ReplyDelete