கீற்று இணைய இதழில் எனது கவிதை
இவ்வாறெல்லாம்
செய்ய
வேண்டித்தானிருக்கிறது
நக்கிப்பிழைக்க,
பரிந்து பேச,
பணிந்து போக,
அடங்கிப்போக,
இழந்துபோக,
அவமானப்பட,
குருகி நிற்க,
வழிய,
ஏச்சும்,பேச்சும் வாங்க,
ஏங்கி நிற்க,
நெஞ்சுக்குள்ளேயே
குமைந்துகொள்ள,
வளைந்து கொடுக்க,
விட்டுக்கொடுக்க,
சர்வ நாடியும் அடங்கி
ஒடுங்கிப்போக,
வெட்கப்பட,
வெள்ளந்தி போல்
நடிக்க
வேண்டித்தானிருக்கிறது.
அப்போதெல்லாம்
அந்த தனக்குத்தானே
அர்த்தம்
கற்பித்துக்கொள்ளும்
"தன்மானம்" என்ற
மயிர்
என்ன தான்
செய்து கொண்டிருக்கிறது?
.
"தன்மானம்" என்ற
ReplyDeleteமயிர்
என்ன தான்
செய்து கொண்டிருக்கிறது?///ரொம்ப டச்சிங் தலைவா?
அருமை,அருமை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html
நருக்குனு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..
ReplyDeleteஇது சின்னபயல் எழுதியதா தெரியல.... நல்ல பட்டறிவு பெற்ற முதிர்ந்த எழுத்தாதான் தெரியுது. பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி கருன்,
ReplyDeleteநன்றி கருணாகரசு..