Friday, January 4, 2013

தூரம்



அவனிடம் எந்தக் கடைக்கோ
இல்லை கோவிலுக்கோ
இல்லை பஸ்ஸ்டாண்டுக்கோ
வழி கேட்டால் கூட
கலைச்செல்வி வீடு இருக்குல்ல மச்சான்
அதிலருந்து என் வீடு உள்ள
தூரம் போல இரண்டு மடங்கு
இல்லை ஒரு மடங்கு இருக்கும்
இல்லை அதில பாதி தான்
என்பான் எப்போதும்.

உனக்கும் கலைச்செல்விக்கும்
எவ்வளவு தூரம்டா மச்சான்
என்று கேட்டால் மட்டும்
அவனிடம் கட்டி நிற்கும் மௌனம்
ஒளியாண்டுகள் தொலைவு நீளும்.


4 comments:

  1. அற்புதம்...:)
    அருமையான கவிதை
    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  2. இந்த 'ம்' வாங்கறதுக்கு இத்தனை நாளாயிருக்கு எனக்கு ;) நன்றி நண்டு!

    ReplyDelete