விடுதலை
எப்போதும் சில்லறைக்கு
சண்டை போடும் நடத்துநர்,
கூடுதல் சாம்பார் கேட்டால்
ஊற்றியபின் இலையின் நடுவில்
குத்தி விட்டு செல்லும் பரிசாரகன்,
இரண்டு நாள் வாடகைத்தாமதத்திற்கு
கூடம் வரை வந்து கூசும்வார்த்தைகளால்
திட்டிச்செல்லும் அறைஉரிமையாளன்,
‘நீ கேக்ற சீப் ப்ராண்ட் இல்லை’ என்று
எப்போதும் பரிகசிக்கும் பார் டெண்டர்,
இப்படி
எங்கு சென்றாலும்
யாரேனும் என்னைத்தெரிந்தவர்கள்
இருந்துதான் தொலைக்கிறார்கள்
எப்போதும் சில்லறைக்கு
சண்டை போடும் நடத்துநர்,
கூடுதல் சாம்பார் கேட்டால்
ஊற்றியபின் இலையின் நடுவில்
குத்தி விட்டு செல்லும் பரிசாரகன்,
இரண்டு நாள் வாடகைத்தாமதத்திற்கு
கூடம் வரை வந்து கூசும்வார்த்தைகளால்
திட்டிச்செல்லும் அறைஉரிமையாளன்,
‘நீ கேக்ற சீப் ப்ராண்ட் இல்லை’ என்று
எப்போதும் பரிகசிக்கும் பார் டெண்டர்,
இப்படி
எங்கு சென்றாலும்
யாரேனும் என்னைத்தெரிந்தவர்கள்
இருந்துதான் தொலைக்கிறார்கள்
யாசிப்பு
தன்னை முடித்துக்கொள்ள
நினைத்த கவிதை
ஒருபோதும் எழுதுபவனை
யாசித்து நிற்பதில்லை
உதிரச்சுவடு
உருகி ஓடும் மெழுகில்
தம்மினத்தின் உதிரச்சுவடு
தேடி அலையும் விட்டில்கள்
தன்னை முடித்துக்கொள்ள
நினைத்த கவிதை
ஒருபோதும் எழுதுபவனை
யாசித்து நிற்பதில்லை
உதிரச்சுவடு
உருகி ஓடும் மெழுகில்
தம்மினத்தின் உதிரச்சுவடு
தேடி அலையும் விட்டில்கள்
பிணம்
வீட்டில் பிணம்
விழுந்து கிடந்தாலும்
பசிக்கத்தான் செய்கிறது
வீட்டில் பிணம்
விழுந்து கிடந்தாலும்
பசிக்கத்தான் செய்கிறது
உதிரச்சுவடுகள் வலியின் ஆழம் !
ReplyDeleteஅனைத்தும் நன்று.
ReplyDeleteநன்றி ஹேமா..!
ReplyDeleteநன்றி ராமலஷ்மி ..!
ReplyDelete