Thursday, January 10, 2013

கருக்கலைப்பு



முட்டையை உடைத்து
இரண்டு கருக்களையும் ஒன்றாகக் கூட்டி
தலைக்குத் தேய்த்து வர முடி நன்றாக வளரும்

விடிகாலையில் வெறும் வயிற்றில்
முட்டையை உடைத்து அப்படியே விழுங்கி, பின்
உடற்பயிற்சி செய்து வர புஜபலம் கூடும்

வேண்டாத கொழுப்பு உம் உடலில் சேராதிருக்க
முட்டையின் மஞ்சட்கருவை நீக்கிவிட்டு
வெள்ளைக்கருவை மட்டும் உட்கொள்தல் வேண்டும்

இவையெல்லாம் செய்வதை விடுத்து
அப்படியே அடைக்காக்க விட்டுவைத்தால்
அதிலிருந்து ஒரு கோழிக்குஞ்சு கூட வரும்.

.

7 comments:

  1. ஹா ஹா ஹா !!!

    அப்பறம் எப்படித்தான் முட்டை சாப்பிடுவது, உங்க வரிகளை படித்தபிறகு, இனி எனக்கு முட்டை சாப்பிட நினைக்கும்போதெல்லாம் இந்த வரிகள்தான் கண் முன்னே வந்து நிற்கும்.

    ReplyDelete
  2. ம்ம்...குஞ்சு அப்புறம் முட்டை போடும்....அப்புறம் !

    ReplyDelete
  3. முட்டையை விட்டுவிடலாம் என்கிறீர்களா..?

    ReplyDelete