இல்லை கோவிலுக்கோ
இல்லை பஸ்ஸ்டாண்டுக்கோ
வழி கேட்டால் கூட
கலைச்செல்வி வீடு இருக்குல்ல மச்சான்
அதிலருந்து என் வீடு உள்ள
தூரம் போல இரண்டு மடங்கு
இல்லை ஒரு மடங்கு இருக்கும்
இல்லை அதில பாதி தான்
என்பான் எப்போதும்.
உனக்கும் கலைச்செல்விக்கும்
எவ்வளவு தூரம்டா மச்சான்
என்று கேட்டால் மட்டும்
அவனிடம் கட்டி நிற்கும் மௌனம்
ஒளியாண்டுகள் தொலைவு நீளும்.
அற்புதம்...:)
ReplyDeleteஅருமையான கவிதை
வாழ்த்துக்கள் சகோ
நன்றி ஆத்மா..!
ReplyDeleteம் ...
ReplyDeleteஇந்த 'ம்' வாங்கறதுக்கு இத்தனை நாளாயிருக்கு எனக்கு ;) நன்றி நண்டு!
ReplyDelete