Monday, March 19, 2012

நிழல் தரும் வெயில்



அழகர் ஆற்றில்
இறங்கும் திருவிழாவில்
காலில் மூங்கில்
வைத்துக் கட்டியிருந்தவன்
மாதிரி என் நிழல்
நீஈஈஈளமாகத் தெரியும்
காலை வெயில்

என் கால்களுக்குள்ளேயே
விழுந்து கொள்ளும் என் நிழல்
கழுதை கூடப்பொதி
சுமக்காத மத்தியான வெயில்

எம்பிக்குதித்து கைநீட்டி எக்கினாலும்
பிடிக்க முடியாத மேற்கூரையை
எளிதில் தொட்டுவிடும் என் நிழல்
மஞ்சள் நிற மாலை வெயில்

வெயிலின் அருமை
நிழலில் தான் தெரிகிறது.


.

7 comments:

  1. மொத்த அருமை உங்கள் கவிதையில் தெரிகிறது.

    ReplyDelete
  2. ஆஹா...வெய்யிலின் அருமை தேடி என் நிழல் வந்த தனசேகரனுக்கு நன்றி..! :-)

    ReplyDelete
  3. வரிகள் கலக்கல்...கவிதை அருமை...

    ReplyDelete
  4. கலக்கிய பின்னூட்டத்திற்கு நன்றிகள் @ ரெவெரி.!

    ReplyDelete
  5. சில உணர்வுகள் வார்த்தைகளை கிழித்துக் கொண்டு
    வெளிக் கிளம்புவதுண்டு
    சில கவிதைகளும் படிப்பவர்கள் உள்ளங்களில்
    தாவி அமர்ந்து கொள்வதுமுண்டு
    தங்கள் படைப்பினைப் போல......
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சில உணர்வுகள் வார்த்தைகளை கிழித்துக் கொண்டு
    வெளிக் கிளம்புவதுண்டு
    சில கவிதைகளும் படிப்பவர்கள் உள்ளங்களில்
    தாவி அமர்ந்து கொள்வதுமுண்டு
    தங்கள் படைப்பினைப் போல......
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மிக்க நன்றி ரமணி , எளிமையைக் கவிதையாக்குவதே எனது விருப்பம்..:-))

    ReplyDelete