அழகர் ஆற்றில்
இறங்கும் திருவிழாவில்
காலில் மூங்கில்
வைத்துக் கட்டியிருந்தவன்
மாதிரி என் நிழல்
நீஈஈஈளமாகத் தெரியும்
காலை வெயில்
இறங்கும் திருவிழாவில்
காலில் மூங்கில்
வைத்துக் கட்டியிருந்தவன்
மாதிரி என் நிழல்
நீஈஈஈளமாகத் தெரியும்
காலை வெயில்
என் கால்களுக்குள்ளேயே
விழுந்து கொள்ளும் என் நிழல்
கழுதை கூடப்பொதி
சுமக்காத மத்தியான வெயில்
விழுந்து கொள்ளும் என் நிழல்
கழுதை கூடப்பொதி
சுமக்காத மத்தியான வெயில்
எம்பிக்குதித்து கைநீட்டி எக்கினாலும்
பிடிக்க முடியாத மேற்கூரையை
எளிதில் தொட்டுவிடும் என் நிழல்
மஞ்சள் நிற மாலை வெயில்
பிடிக்க முடியாத மேற்கூரையை
எளிதில் தொட்டுவிடும் என் நிழல்
மஞ்சள் நிற மாலை வெயில்
வெயிலின் அருமை
நிழலில் தான் தெரிகிறது.
நிழலில் தான் தெரிகிறது.
.
மொத்த அருமை உங்கள் கவிதையில் தெரிகிறது.
ReplyDeleteஆஹா...வெய்யிலின் அருமை தேடி என் நிழல் வந்த தனசேகரனுக்கு நன்றி..! :-)
ReplyDeleteவரிகள் கலக்கல்...கவிதை அருமை...
ReplyDeleteகலக்கிய பின்னூட்டத்திற்கு நன்றிகள் @ ரெவெரி.!
ReplyDeleteசில உணர்வுகள் வார்த்தைகளை கிழித்துக் கொண்டு
ReplyDeleteவெளிக் கிளம்புவதுண்டு
சில கவிதைகளும் படிப்பவர்கள் உள்ளங்களில்
தாவி அமர்ந்து கொள்வதுமுண்டு
தங்கள் படைப்பினைப் போல......
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சில உணர்வுகள் வார்த்தைகளை கிழித்துக் கொண்டு
ReplyDeleteவெளிக் கிளம்புவதுண்டு
சில கவிதைகளும் படிப்பவர்கள் உள்ளங்களில்
தாவி அமர்ந்து கொள்வதுமுண்டு
தங்கள் படைப்பினைப் போல......
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி , எளிமையைக் கவிதையாக்குவதே எனது விருப்பம்..:-))
ReplyDelete