Wednesday, March 14, 2012

காற்றைக்கடந்துவரும் கருப்பு




கருவாட்டுத்துண்டுக்கும்
பழைய சோற்றுக்கும் அலைந்து,
மல்லிகைப்பூவுக்கும்
மருக்கொழுந்துக்குமெனத்திரிந்து,
சைக்கிளின் பின்புறம் அமர்ந்து
பாரமாக அழுத்தியதெல்லாம்
சலித்துப்போனது எனது பேய்க்கு.

நரபலியை எதிர்பார்த்து

குருதி குடித்து தாகம் தீர்த்து,
பிறர் உடலிற்புகுந்து
அவர் அறியாப்பலமொழிகளைப்
பேசவைத்து ஆட்டுவித்ததெல்லாம்
அலுத்துப்போனது எனது காட்டேரிக்கு.

எதிர்பாரா நேரத்தில்

அறைந்து பயமுறுத்தி,
பார்ப்போர் கண்களில்
மரணபயத்தை உண்டாக்கி
அவரை நிரந்தர மன
நோயாளியாக்கியதெல்லாம்
மடுத்துப்போனது எனது பிசாசுக்கு.

பல இடங்களிலும்

தமது இருப்பை ஒரே நேரத்தில்
காண்பித்து அதை
உணர்ந்தவரின் அடிவயிற்றில்
சுருள்களை உண்டாக்கி
சோர்ந்து போனது எனது சாத்தானுக்கு

அமாவாசை இருட்டில்

நேற்று சலவையிலிருந்து வந்த
வெள்ளையுடையுடன் நின்று
திகிலேற்படுத்தியதெல்லாம்
திகட்டிப்போனது எனது நீலிக்கு,

ஆட்டிவைத்த மந்திரவாதி

ஏற்பித்த கட்டளைகளை
ஒவ்வொன்றாகச் செய்து முடித்து
மேற்கொண்டு கட்டளைகளை
எதிர்பார்த்து விரக்தியாய்ப்போனது
எனது பேய்க்கு,

உங்களிடம் ஏதேனும்

புதிய உத்திகள் உளதா
என எதிர்பார்த்து
நிற்கிறது அது இப்போது..!

.

8 comments:

  1. நன்றி சூர்யஜீவா,,:-))

    ReplyDelete
  2. பயமா இருக்கு.

    அருமைக்கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பயப்பட வேண்டாம் சேகர்..!..நீங்கதான் ஐடியா சொல்லணும் :-))

    ReplyDelete
  4. புதிய உத்தி நிறைய உண்டு...பக்கம் நிரம்பி விடும்...-:)

    ReplyDelete
  5. நிரப்புங்க ரெவெரி .. "காத்து"க்கிடக்குது கருப்பு...:-))

    ReplyDelete