இந்தக்கவிதை
உங்களால்
வாசிக்கப்படுகிறது என்பதை அறிய
என்னாலான
சிறிய
முயற்சி
என்னவாக இருக்கக்கூடும்?
எழுதிக்கொண்டிருக்கும்போது
என்னுள்
ஏற்பட்ட கொந்தளிப்புகள்
உங்களுக்கு
என் எழுத்துகளினூடாகத்
தெரிந்துவிட
வாய்ப்பில்லைதான்
ஒருவேளை
காகித எழுத்துகளுக்கும்
உணர்ச்சிகள்
இருந்திருப்பின்
உங்களுக்கு
அவை சுட்டிக்காட்டியிருக்கலாம்
கண்டுபிடிக்க
முயற்சிகள் நடக்கின்றன
என்
தற்கொலைக்காரணங்களை
என்னாலும்
உங்களாலும்
இதில்
யார் முந்துவது என்பதில்
போட்டி
வர வாய்ப்பிருக்கிறதா.?
இங்கிருந்து
கடந்து சென்ற
அந்த
ஒரு கடைசி நொடியை
ஆவணமாக்கும்
முயற்சியில்
இம்முறை
கண்டிப்பாக எனக்குத்தோல்விதான்
கைவிரல்கள்
பரப்பி வைத்து
சயனைடின்
சுவை சுட்டமுயன்ற
அறிவியலாளன்
போல
வகைவகையாக
தன்னை மாய்த்துக்கொள்ளும்
முயற்சிகளை
வகைதொகையின்றி
ஆவணப்படுத்தினேன்
ஒவ்வொரு
முறை அது தோற்றபோதும்.
அதுவே
நான் அதனிடம்
தோற்றபோது
நிகழ இயலவில்லை.
எனக்காகப்பிறர் எழுதுவதை
எப்போதும்
என்னால் சகித்துக்கொள்ள முடிவதில்லை
அதையும்
நானே எழுதிவிடவேண்டும்
உங்கள்
அருகிலிருந்து
உங்களுடன்
கூட அமர்ந்து
வாசித்துக்கொண்டுதானிருக்கிறேன்.
இதை
உங்களுக்கு
அறியாமலேயே.
நீங்கள்
ஒவ்வொரு முறை
வாசிக்கும்போதும்
நல்ல ஆக்கம்...
ReplyDeleteமிக்க நன்றி ரெவெரி..
ReplyDeleteகிடைப்பவர் கையில் கிடைத்தால் ஒரு சொல் கூட
ReplyDeleteஅதிக பட்ச வீரியம் கொள்ளும் என்பதற்கு
இந்தப் படைப்பின் கடைசிச் சொல் சாட்சி
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDelete