Wednesday, January 18, 2012

ஊறிய பிறகு



இறுகி முறுக்கிக்கொண்ட
என் மரக்கதவுகள்
குளிர்காலம் வந்துவிட்டதை
எனக்கு உணர்த்துகின்றன
அடித்துச்சாத்திய காலங்கள்
கடந்து விட்டன
ஒலி எழுப்பாது
சாத்திக்கொள்ளும் அவை
எவ்வித எதிர்ப்பும்
தெரிவிக்காத என்னையே
பல சமயங்களில்
எனக்கு நினைவுறுத்துகின்றன
ஈரமிருப்பின் எல்லாம்
சுளுவாகிப்போவதை.


.

9 comments:

  1. மனதுக்கும் அப்படித்தான்...
    ஈரம் இருந்துவிட்டால் பிரச்சனைகளே இல்லை...

    அழகிய கவிதை வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி சசிகலா..வாழ்த்தியமைக்கு..!

    ReplyDelete
  3. ஈரமிருப்பின் எல்லாம்
    சுளுவாகிப்போவதை. //

    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    tha.ma 4

    ReplyDelete
  4. ஆஹா..ரமணி சார் நன்றிகள் பல..!
    தொடர்ந்தும் உங்கள் கட்டுரைகளை/கவிதைகளை வாசித்து வருகிறேன்..அத்தனையும் உண்மையே பேசுகிறது..:-)))

    ReplyDelete
  5. அருமையான கவிதை நண்பா!

    ReplyDelete
  6. நன்றி dhanasekaran .S வாழ்த்தியமைக்கு..

    ReplyDelete