Saturday, January 7, 2012

புறக்கணிப்பின் வலி - அனிருத்
'கொலவெறி' பாடலுக்கு இசையமைத்த அனிருத் இளையராஜா'வின் சமீபத்திய நிகழ்ச்சியை உட்கார இடம் தரப்படாமல் ஓரமாக நின்று கொண்டே பார்த்தார்.அதே அனிருத்'தைப்பற்றிய கேள்விக்கு ரஹ்மான் "no comments" என்று பதிலளித்தார் # நீங்களே கண்டுக்கலன்னா அந்தப்பையன் எப்டி சார் முன்னேறுவான்..?! ஏனிந்தக்கொலவெறி??? இதேபோல முதலில் சகபடைப்பாளிகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் தானே இருவரும்..? அப்றமும் ஏனிந்தக்கொலவெறி..?

ஒருத்தர் ஆன்மீகத்துல கரை கண்டவர், இன்னொருத்தர் "எல்லாப்புகழும் இறைவனுக்கே"ன்னு சொல்லிக்கிட்டு அலைகிறவர்..இப்டி இருக்குறவங்களாலேயே சகபயணி ஜெயிக்கிறத சகிச்சுக்க முடியலன்னா எப்டி ...?! ரொம்ப வருத்தமா இருக்கு சார்.! Dam 999 க்கு இசையமைத்தவர்க்கு  ஆஸ்கார் கிடைக்கட்டும்னு பாராட்டத் தெரிஞ்சவருக்கு இந்தப்பையனப்பத்தி நாலு வார்த்தை சொல்லத்தெரியாதாமா..?! Specificஆ கேட்டும் பதில் சொல்ல விருப்பமில்லைங்கறத என்னான்னு சொல்றது ?

ஒரு விஷயத்தப்பத்திக் கருத்தே சொல்லாம ஒதுக்குறது தான் பெரிய வலி.நாலு வார்த்த திட்டிட்டுப்போனாக்கூட அங்கீகரிச்சு அதத்திட்றதாத்தான் நினைக்கத்தோணும். எதுவும் பேசாமப்போனா அத ஒதுக்குறதாத்தான் தோணும்.இதை வளர்ந்துவிட்ட கலைஞர்கள் வேணா சகிச்சிக்கிட்டுப்போயிறலாம். ஆனா ‘அனிருத்’ இப்பதான் மொளச்சு ‘மூணு’ எல விட்ருக்கார். எம்.ஜி.ஆர் சிவாஜி காலங்கள்ல , டி.எம்.எஸ்’ஸுக்கும்/விஸ்வனாதன் ராமமூர்த்திக்கு நேர்ந்த கதி தான் இப்ப இவருக்கு நேர்ந்துக்கிட்டிருக்கு. அருணகிரினாதரில் டி.எம்.எஸ் பாடி/நடிச்சதப்பாத்துட்டு , இவருக்காகத்தான் எம்ஜியாரும் சிவாஜியும் மாறிமாறிப்பாடீருக்காங்கப்பா என்று கூறிய காலங்கள் தான் நினைவுக்கு வருது,

ஏதோ நம்மளப்போல போட்டி,பொறாமை, அடுத்தவனுக்கு புகழ் வர்றத தாங்கிக்க முடியாத சாதாரண மனிதர்கள்  இல்ல அவங்க.ஏற்கனவே ஒரு நிலையை அடைந்து, இதுக்கு மேலயும் எந்த விருதுகளும் வாங்கித்தான் அவங்களுக்கு பேர் வரணும்ங்கறதுமில்ல.இந்த நிலைக்கு வந்த பிறகும் அவங்களால இந்தப்பையனின் அபரிமித வளர்ச்சியப்பொறுத்துக்க முடியலங்கறத நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு சார்.

தனுஷ் இதே காலகட்டத்தில நிறையப்பாடல்கள் பாடிருக்கார். அந்தப்பாடல்கள்ல எல்லாம் கிடைக்காத புகழ் இந்தக்’கொலவெறி’ல தான் அவருக்கு கிடைச்சிருக்கு..! ஏன் ?..அழகான கேட்சி ட்யூனும் , குழப்பாத இசைச்சேர்க்கையும், நம்ம பாரம்பரிய இசைக்கருவிகளை நாதஸ்வரம் தவில் மற்றும் ஷெனாய் வைத்தும் என ஏற்கனவே நமக்கு மிகவும் பரிச்சயமான விஷயங்கள மட்டுமே உள்ளடக்கியதால எல்லார் மனங்களிலும் லகுவாக இடம் பிடித்தது. இந்த இசைக்கருவிகள் வெளிநாட்டினர்க்கு பரிச்சயமில்லாது, ரொம்பவும் புதிதாகத்தெரிவதனால் அங்கயும் ஒங்கி அடிச்சிருக்கு.

“கமல் ஐம்பது விழா” வில் மம்மூட்டி பேசினது எனக்கு ஞாபகம் வருது.இப்ப எனக்கு முன்னாடிப்பேசினவங்கள்லாம் வெறும் வாயால பேசினாங்க, உள் மனதிலருந்து யாரும் பாராட்டினதாத்தெரியலன்னு. எவ்வளவு நிலை உயர்ந்தாலும் , தனது சுயநலத்தைப்பற்றிய சிந்தனையும், தனக்குக்கிடக்கும் புகழ் போல இன்னொருவனுக்கு கிடைத்துவிடக்கூடாதுங்கற நினைப்பும் இருக்குற இவங்களையெல்லாம் எங்க கொண்டுபோய் நிறுத்தும்..?! இவங்களுக்கெல்லாம் ஞானி,புயல்’ங்கற பட்டங்களெல்லாம் எதுக்கு,,?!

கடைசிக்கொசுறு : மன்மோஹன் சிங்கின் இரவு விருந்திலயும் அனிருத்துக்கு இடம் இல்லை.! தனுஷும் அவர் மனைவியும் சேர்ந்து உண்ட விருந்தில பங்கு கிடைக்கல அனிருத்துக்கு..!

பொதுவாவே அடுத்த தலைமுறை கொஞ்சம் வெளஞ்சே வர்றது யாருக்குமே புடிக்கிறதில்ல..அதுல இசைத்துறையும் விதிவிலக்கில்லங்கறது இப்ப மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.


4 comments:

 1. மனதில் உறுத்திக்கொண்டு இருந்த விடயம்

  ReplyDelete
 2. @ நண்டு : பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாக
  எழுதிய பதிவு இது ..மேலும் என்னோட ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் இந்தப்பதிவே தவிர எந்தவித உள்நோக்கத்துடனும் எழுதப்பட்ட
  பதிவு அல்ல இது. ..

  ReplyDelete
 3. @ முன்பனிக்காலம் : மற்றவர்களைப்பற்றி குறை சொல்லி,தவறான தகவல்களைத்தந்து குழப்புவதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை. இது ஒரு தனி மனிதனின் அங்கீகாரம் பற்றிய ஆதங்கம் மட்டுமே.

  ReplyDelete