Monday, January 9, 2012

பரிணாமம்



ஒரே ஒரு புள்ளி
சுழிப்பரிமாணம்.

இரண்டு புள்ளிகளை
இணைக்கும்
ஒற்றை நேர்கோடு
ஒற்றைப்பரிமாணம்.

அந்த நேர்கோட்டுக்கு செங்குத்தாக
சற்று உயரத்தில் ஓர் இணைகோடு
வரைந்து அவைகளை இணைத்து
ஒரு சதுரம் உண்டாக்கி
அந்த சதுரத்திலுள்ள புள்ளியை
வலது இடது மேலே கீழே
நகற்ற முடிந்தால்
அது இரண்டாம் பரிமாணம்.

இதே போல் இரண்டு சதுரங்களை
எடுத்துக் கொண்டு
ஒரு சதுரத்தின்
நான்கு மூலைப்புள்ளிகளை
அடுத்த சதுரத்தின்
நான்கு மூலைப் புள்ளிகளுடன்
இணைத்து
ஒவ்வொரு முகமும் சதுரமாகவும்
ஒவ்வொரு உச்சந்தலையிலும்
மூன்று முகங்களுமாக
ஒரு கனசதுரம்
உண்டாக்கினால்
அது மூன்றாம் பரிமாணம்.

முதல் கனசதுரத்தின்
எட்டு உச்சந்தலைகளை
அதேபோலுள்ள
இரண்டாவது கனசதுரத்தின்
எட்டு உச்சந்தலைகளுடன்
சேர்த்தால் கிடைப்பது
மிகை கனசதுரம்.
அது நான்காவது பரிமாணம்.

ஆறு முகங்களும்,
எட்டு உச்சந்தலைகளும்,
பன்னிரெண்டு விளிம்புகளும்
கொண்ட நான்காம் பரிமாண
கனசதுரத்திலிருந்துகொண்டு
முதலில் தொடங்கிய
சுழிப்பரிமாணத்தை
தேடிக்கொண்டிருக்கிறேன்.


.

4 comments:

  1. @ நண்டு :

    மூன்றில் திருப்தி கொள்ளாது நான்காவதையும் காணத்துடிக்கும் எனதருமை நண்பா , நன்றிகள்..!

    ReplyDelete
  2. அருமை அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  3. @ Ramani சுழியில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம்
    அனைவரும்,,! நன்றி....

    ReplyDelete