Monday, December 17, 2012

ஓய்ந்த அலைகள்



மேற்கத்திய ரசிகர்களின் இசைவுக்கேற்ப இசைத்து அவர்களிடம் தொடர்ந்தும் பெயரெடுக்க வேண்டிய சுயகட்டாயத்தில் சிக்கிக்கிடக்கும் நமது ரஹ்மானின் புதிய ஆல்பம் கடல்அதே பாணியை நாமும் ரசித்துக்கொண்டிருக்கிறோம், என்று நினைத்துக்கொண்டு ரஹ்மானும் மணியும் கொடுத்திருக்கும் ஆல்பம் கடல்”. இதில் எந்தத்துளி நம் மனதைக்கவர்கிறது ? எது நம் கைநழுவிச்செல்கிறது ?.

பாடல்களைப்பற்றி பேசுமுன்னர் கொஞ்சம் இந்தக்கால இசைப்பாணிகளும் ரஹ்மானும் என்று கொஞ்சம் பேசி விட்டு பின்னர் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

Honest Opinion சொல்லணும்னா என்னைப்பொருத்தவரை ‘கடல்’ மிகப்பெரிய ஏமாற்றம். ரஹ்மான் முழுக்க இப்போதெல்லாம் மேற்கத்திய ரசிகர்களையே திருப்திப்படுத்துவதற்காகவே இசைக்கிறார் என்பது தெளிவு. தமிழ் ரசிகர்களிடமிருந்து வெகு தூரம் விலகிச்சென்றுவிட்டதை தெளிவாக உணரமுடிகிறது.நம்ம Feel-ஏ வரல பாட்டு கேக்கும்போது...கேட்கக்கேட்கப்பிடிக்கும் பாடல்கள் எப்போதுமே ரஹ்மானுடையது...ஆனாலும் இங்கு அப்படி ஒரு ஃபீல் வரவேயில்லை..! 127 Hours பின்னணி இசை போல பல இடங்கள்ல முழுக்க முழுக்க Western..! ஏகக்குழப்பத்துல இசையமைத்தது போலருக்கு அத்தனை பாடல்களும்...மகுடி’ மாதிரி பாட்டு போட்றதுக்கெல்லாம் ரஹ்மான் அவசியமா? என்னாச்சு ?! 


இங்கருந்து நம்ம இசையை வெளிநாட்டுக்கு எடுத்துட்டுப்போறதுக்கு திரைத்துறையில் யாரும் இல்லை. அங்கிருந்து கொணர்ந்து சேர்க்க அனைவரும் தயார்.அவங்க இசையான HipHop,Rap , Rock,Jazz,Techno, இன்னும் எத்தனை நம்மளால சொல்லிக்கொண்டே போகமுடிகிறது ? , அவங்க கிட்ட கொஞ்சம் நம்ம இசை பற்றிக்கேட்டுப்பார்ப்போமே எத்தனை பேருக்குத் தெரியுமென்று ? ஒருத்தருக்கும் தெரியப்போவதில்லை. ரஹ்மானோட பாணியே இப்படிப்பட்டதுதான். கொஞ்சம் ராஜஸ்த்தானி இசை கலந்து , பின்னர் கேட்கும் இயக்குநர்களுக்குத் தகுந்தவாறு , கர்நாடக/இந்துஸ்த்தானி ராகங்களைக் கலந்து கொடுப்பதே அவரது எப்போதுமான ஸ்டைல்.

நூற்றுக்கணக்கான Track களை , வெகு சுலபமாக கையாளும் திறமை அவரது இசையை எட்ட முடியாத தொலைவுக்கு எடுத்துச்சென்றது. ரோஜா படத்தை Stereoவில் பதிவு செய்ய நினைத்தபோது , இங்க எல்லாத் தியேட்டர்லயும் அதை Reproduce செய்ய வசதி இல்ல, ஏன் பல தியேட்டர்கள்ல ஒரு ஸ்பீக்கர் வெச்சுக்கிட்டு ஓட்றதுல்லாம் இருக்குன்னு முகத்திலடித்தது போல சொல்லப்பட்டது அந்தக்கால இளைய ரஹ்மானுக்கு. இப்போது அதே ரஹ்மானின் ஆல்பம் வெளிவருகுது என்றால் உலகளாவிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது உண்மை தான்.அதே அழுத்தத்தில் எல்லோர்க்கும் பிடிக்கும் வகையிலான ஒரு ஆல்பத்தை கொடுக்க நினைப்பதை விட Suicidal Attempt வேறேதும் இருக்க இயலாது.

ரஹ்மானின் இசையில் என் சுவாசக்காற்றே’, ‘படையப்பா’, ‘காதல் தேசம்’ ‘மே மாதம்போன்ற படங்களில் அத்தனை பாடல்களும் முத்துக்கள்.அப்படிப்பட்ட ஆல்பங்கள் இனியும் அவரிடமிருந்து வருவதற்கான வாய்ப்பே இல்லை என்பதுதான் தமிழ் கூறும் நல்லுலகின் சாபக்கேடு. இங்கு மட்டுமே இருந்து பெயர் வாங்கினால் போதாது என்று நினைத்து , வெளிநாடு சென்று என் இசையைப் பிரபலப்படுத்துவேன் என்பதில் அவரை விடவும் வெற்றி பெற்றவர் எவரும் இல்லை ..உண்மை தான்.
  


இப்ப கொஞ்சம் நாள் முன்னால ஜெயா டீவி நிகழ்ச்சில, எல்லாப்பெரிய பாடகர்களின் ஆதங்கமும் ஏன் ரஹ்மான் இன்னும் திரும்பி தமிழுக்கு முழுதாக வரவில்லை என்பதுதான்.நமக்கும் அதேதான்.முழுக்க அன்னியமாகி நிற்கிறது அவரது இசை இங்கு.” மலர்களே, மலர்களே” (மிஸ்டர் ரோமியொ), தனியே தன்னந்தனியே (ரிதம்) , எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலைபாயுதே) என்பன போன்ற அதிசயங்கள் இன்னும் நிகழும் என்ற நம்பிக்கை எனக்கு கிஞ்சித்தும் இல்லை.!
 
நெஞ்சுக்குள்ளே

மக்காயேலா’, ‘சொர்க்கம் மதுவிலே’ என்று கலக்கல் குத்துகளை விஜய் ஆண்டனியிடம் பாடிய ‘சக்திஸ்ரீ கோபாலன்’ இங்கு ‘நெஞ்சுக்குள்ளே’ என்று படக்கென்று ஆரம்பிக்கிறார். இரண்டாவது அடியில் அவராலேயே சரி செய்யப்படுகிறது பாட்டும் வரிகளும். எனெக்கென்னவொ MTV Unplugged-ல ரஹ்மான் பாடின Version நல்லாருக்குன்னு தோணுது. :) எந்த இடையிசையும் உறுத்தாமல் செல்லுகிறது பாடலோடு. அந்த Unplugged Versionக்கும் இந்த Plugged Versionக்கும் ஒரே வித்தியாசம் , ரஹ்மான் இங்க ஹார்மனி பாடீருக்கார் 2:48 ,,அவ்வளவுதான்! ஏன் இந்தப்பாட்ட முதல்ல வெளிவிட்டார்னு இப்பதான் தெரியுது :) ,மற்ற பாடல்கள் நம்மிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன.இது மட்டுமே கொஞ்சம் நமக்குப்பக்கத்துல வருது :) சக்தியின் குரல் ஓரளவு சூச்சியின்( Excuse me Mister Kandasamy) குரலோடு ஒத்துப்போகிறது. அதிரடி பாடல்கள் பாடியே பழகியவருக்கு இப்படி ஒரு மென்மையான பாடல் ஒரு சவால்தான் :)


அன்பின் வாசலிலே

பழைய ஆல் இண்டியா ரேடியோ’வில சேர்ந்திசை, தேசபக்திப்பாடல்கள்னு போட்டு ( இன்னும் இதெல்லாம் யாரும் கேக்றாங்களா என்ன ? J ) நம்மள ஒரு வழி பண்ணுவாங்க. நிலையக்கலைஞர்கள்.அதே மாதிரி Genreல இருக்கு இந்தப்பாடல். “அன்பென்ற மழையிலேன்னு இசைத்த ரஹ்மானா இது ? இசையே இல்லாமல் முழுக்க வரிகளையும் , ராகத்தையும் நம்பியிருந்த அந்தப்பாடல் எங்கே, இது எங்கே ?.. இதுவும் இறைத்தூதன் இயேசுவின் புகழ் பாடும்(Christian Choir) பாடல் தான். முழுக்க கோரஸ் பின்னாடியே பாடுகிறது. கேட்கும் போது சர்ச் ஃபீல் வரும் . அப்டித்தான் நினைக்கிறேன். கோவிச்சுக்காதீங்க. கிஞ்சித்தும் இந்தப்பாடலுக்கு அருகில்கூட செல்ல இயலவில்லை கேட்கக் கேட்க பிடிக்கும் பாடல் இல்லை இது, கேட்கக்கேட்கச் சலிக்கும் பாடல்.!

மூங்கில்தோட்டம்

‘நெஞ்சுக்குள்ளே’யிலருந்து வெளிவரவேயில்லை போலருக்கு ரஹ்மான், அதே Feelல் இசைத்தது போல , கிட்டாரும் வயலினும் இழைக்கிறது. எதோ “நெஞ்சுக்குள்ளே“ பாடலின் Demix ( Remix இல்ல) போலவே இருக்கு இந்தப்பாடல்.இன்னும் Tempo குறைத்து இசைத்தது போலவே இருக்கு. Opening Music அப்படியே  Hotel California மாதிரியே கிட்டாரில் இசைக்கிறது.இவங்கல்லாம் தமிழ்ப்பாட்ட எப்ப தமிழ்ப்பாட்டு மாதிரி பாடுவாங்கன்னு கத்தத்தோணுது.கடித்துக்கடித்து உச்சரிக்கிறார்கள் பாடல் முழுக்க.! பாடலுடன் நம்மை ஒன்றவிடாமல் எதுவோ தள்ளியே வைக்கிறது என்னவென்று தான் தெரியவில்லை.  

கிட்டத்தட்ட பத்து இருபது தடவைகளுக்கு மேல் முழு ஆல்பத்தையும் ஓலிக்க விட்டுக் கொண்டிருந்தேன் , இந்த விமர்சனம் எழுதுவதற்காக, ஒவ்வொரு முறையும் இந்தப்பாடலை Skip செய்துவிட்டு போவதையே வழக்கமாகக்கொண்டிருந்தேன். Sorry Rahman இது உங்க பாட்டே இல்ல.


எலே கிச்சான்

Cotton-Eyed Joe என்ற American Country Song போலவே ஒலிக்கிறது ( அதிவேக Tempo வில் ஒலிக்கும் இந்த ஆங்கிலப்பாடலை கொஞ்சம் வேகம் குறைத்துக்கேட்டால் இந்த கிச்சான் வந்துவிடுவார்! ) பாடல்.மணப்பாடு கிராமத்துலயும், குலசைலயும் இப்டி American Country song பாடிக்கிட்டேதான் மீன் பிடிக்கப் போறாங்களா ரஹ்மான் ? ஆரம்பத்தில் ஒலிக்கும் கிட்டாரும் பின்னர் 3:47ல் வழித்துக்கொண்டு செல்வது போல ஒலிக்கும் கிட்டாரும் அந்த அமெரிக்கப்பாட்டேதான் என்று சொல்லாமல் சொல்கிறது. சரணங்களில் கொஞ்சமும் வரிகள் ராகத்துக்குபொருந்தவேயில்லை , விலகி நிற்கின்றன வரிகள்/சொற்கள்.(4:07 ல் ஆரம்பிக்கும் சரணத்தின் வரிகள் தாளத்துடன் ஒட்டவே இல்லை , விலகி வெளியே நிற்கிறது) வள்ளங்களி பிரபலமான கேரளாவில் எப்படிப்பாடுவாங்க இந்தப்பாட்டை , நினைத்தால் எனக்கு சிரிப்புத்தான் வருகுது ரஹ்மான். வேண்ணா அமெரிக்கன் கடல்களில் இதைப் பாடச்சொல்லிக்கேட்டால் காட்சிகளுக்குப் பொருந்திப்போகும்! Mild Rock based பாடல் நம்ம கடற்புரத்திற்கா ?!

கிட்டத்தட்ட இதே போல சூழலுக்காக இந்திராபடத்தில் ஓடிய ஓடக்கார மாரிமுத்துக்கு கொஞ்சமும் பக்கத்தில் கூட இல்லை இந்த கிச்சான். ஏன் ரஹ்மான் , நம்மகிட்டயே இந்த மாதிரியான வள்ளங்களிகளுக்கு ஏகப்பட்ட பாட்டு இருக்கே.”நெஞ்சினிலே நெஞ்சினிலேகூடச்சொல்லலாம்.! இதை இரண்டு Spanish and English Songs ன் கலவை என்று இப்பவே ஏகப்பட்ட ஹிட்ஸுடன் யூட்யூபில் இசைத்துக்கொண்டிருக்கிறது.

மகுடி மகுடி

Perfect Rap , ஏன் எல்லாரும் இப்ப Rap ல இறங்கிட்டாங்கன்னு தெரியல. ஒரு வகையில் Apache Indian ஐ திரும்பக்கொண்டுவந்தது போலத்தெரிகிறது. இப்பத்தான் யுவன் ஆதிபகவன்ல ஒரு Rapபாடல் போட்டிருந்தார். ஆத்திச்சூடி என்று விஜய் ஆண்டனியின் இசையில் பாடிய அதே தினேஷ் கனகரத்னம் இங்குமகுடி மகுடி என்று மகுடி வாசிக்கிறார், எத்தனை பேர் மயங்குவார்கள் என்பதே கேள்விக்குறி. ஆய்த எழுத்து”வில் வந்த “யாக்கைத்திரி” பாடல் போல Club Song தானிது. அதே சாயலில் , அதே Beatsல் ஒலிக்கிறது. எனக்கென்னவோ இந்த மாதிரிLow Grade Street Singers பாடல்களை இசைக்க ரஹ்மான் தேவையில்லை என்றே தோணுகிறது. Rap எல்லாரும் விட்டுவிட்டு வெளியே வந்த பிறகும் அப்படியே ஒரு பாடலைக்கொடுக்க வேண்டிய அவசியந்தான் என்ன ? மணி கேட்ருப்பார் போலருக்கு , காட்சிக்கு தகுந்த மாதிரி பொருந்துவதற்கென.!


 
சித்திரையே நிலா

‘சித்திரையே நிலா’ன்னு ஆரம்பிக்கும்போது ஜேசுதாஸின் குரல் போலவே ஒலிக்கிறது விஜய் ஜேசுதாஸின் குரல். அதிரவைக்காத “Bass” உடன் 1:47 வரை வகையறா, தொகையறா போல தொடர்கிறது. ரோஜா’வில் மென்மையான பாடலான “காதல் ரோஜாவே”யில் அதிரவைக்கும் ட்ரம்ஸின் அழுத்தமாக ஒலித்தது போல , இங்கு இல்லை. தடவிச்செல்கிறது முழு இசையும். “இரவைத்திறந்தால் பகல் இருக்கும், என் இமையைத்திறந்தால் நீ இருப்பாய்” என்று ஏற்கனவே ‘மே மாதம்’ பாடலில் வந்திருந்த வரிகள் மீண்டும் இங்கு ஒலிக்கிறது. இருந்தாலும் இந்தப்பாட்டு ஜெயமோகன் எழுதினதா ? “டே” டே”ன்னு வரிகள் எல்லாம் முடியுதே அதான் கேட்டேன் :) . இடையில் முழுக்க வேறு தளத்தில் பயணிக்கிறது பாடல்.முன்னப்பாடினதுக்கு ஒரு Connection ஏ இல்லாம.. என்ன சொல்வது ? எண்ட ஆசானே , ஒண்ணு செரியாக்கித்தரூ :)

அடியே

Mild Rock with Jazz Beats ல் அமைந்திருக்கிறது பாடல்.பாடுபவரின் (சித் ஸ்ரீராம்,மரியா ரோ வின்செண்ட்) குரலும் , அவரின் உச்சரிப்பும் ,அவர் தமிழே இல்லை என்பதாலும், இசையமைப்பும் ராகமும், Rock based ஆக இருப்பதாலும் முழுக்க அன்னியமாவே தெரிகிறது பாடல். இதையெல்லாம் மீறி உங்களால் உங்களை இந்தப்பாடலுக்குள் இழுத்துச் செல்லமுடியுமானால் கண்டிப்பாக ரசிக்க முடியும். Perfect Rock இது. கோரஸும் இணைந்து பாடுகிறது. பெரும்பாலும் Rock Songsகளில் கோரஸ் இருப்பது கிடையாது.இது நம்ம தமிழுக்கான Extension போலவே கோரஸும் கூடவே சேர்ந்து ஒலிக்கிறது. குரல் ரொம்ப புதிதாகவும் Refreshing ஆகவும் இருப்பது இந்தப்பாடலுக்கு ஒரு PlusPoint. அருமையாக பிருகா பாடக்கூடிய குரல் போல இருப்பதால். “இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவை தொட்டிலில் கட்டி வைத்தேன்” போலவே ஒலிக்கிறது இந்த வரிகள் “இந்தக்காட்டுப்பய ஒரு ஆட்டுக்குட்டி போல ஒன் பின்ன சுத்துறேனே “ Eric Claption’s Tears In Heaven/Wonderful Tonight மாதிரி இருக்கு பல இடங்கள்ல , Resemblances :)  ஹிந்திப்பாடல்களுக்கு தமிழில் வாயசைப்பதைபோல அப்படி ஒரு கொஞ்சம் கூடப்பொருந்தாத பாடல் .


முழுக்க Involve  ஆகிவிட்ட ஒரு விஷயத்திலிருந்து , அத்தனை சீக்கிரம் வெளியே வருவதுங்கறது அத்தனை எளிதல்ல. அதிகாலையில் பாடப்படும் பூபாள ராகத்தை , அரசனின் அவையில் அந்திப்பொழுதிலும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான் ஒரு இசைக்கலைஞன், அவ்வளவு மூழ்கிப்போய் தன்னால் அதிலிருந்து வெளிவரவே இயலாத நிலையில் , அந்தியிலும் தொடர்ந்து இசைக்கச்சேரியில் அவன் பூபாளமே பாடினான் என்பதற்காக அரசன் அவனைத்தண்டிக்கவில்லை, மன்னித்து அனுப்பிவைத்தான். அதையே நம்ம ரஹ்மானுக்கும் சொல்லலாம்.

கடைசியா இயக்குநர் மணிரத்னத்திடம் ஒரு கேள்வி , தொடர்ந்தும் இளையராஜாவையே அவர் தமது படங்களுக்குப் பயன்படுத்தி வந்த போது, ஏன் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என்ற கேள்விக்கு “ அவர் இசையில் நிறைய ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார் அதனால் அவரையே தான் பயன்படுத்துகிறேன்’ என்று பதிலளித்தார். பின்னர் நிகழ்ந்த கூட்டுமுட்டலில் புதிய மலராக இந்த திலீப்குமார் முளைத்தார். அதே போல இப்போதும் ஒரு புதிய வீச்சில், பயணித்துக் கொண்டிருக்கும் அல்லது பயணிக்க நினைக்கும் புத்தம் புது மலர்களுக்கு ஏன் வாய்ப்பளிக்கக் கூடாது ?




8 comments:

  1. karthik says:
    December 17, 2012 at 8:42 pm

    good review.

    ReplyDelete
  2. சின்னப்பயல் says:
    December 18, 2012 at 4:44 am

    மிக்க நன்றி கார்த்திக்

    ReplyDelete
  3. நான் நெஞ்சுக்குள்ளே......பாட்டு மட்டும்தானே கேட்டேன்....இன்னுமிருக்கே.நன்றி சின்னப்பையா !

    ReplyDelete
  4. @ ஹேமா : இன்னும் கேளுங்க..தமிழ்ப்பாட்டு கேக்கற Feel வருதானு கொஞ்சம் சொல்லுங்க ;)

    ReplyDelete
  5. இசைக்கு மதம், மொழி, தேசம், இனம் கிடையாது நண்பா, தமிழ். தமிழன் என்று எவ்வலவு நாளைக்கு தான் பினாத்துவது, உலகோடு ஒன்றி வாழ நாம் கற்றுக்கொள்ள தான் ரஹ்மான் சார் இந்த புது முயற்சியில் இறங்கி உள்ளார் என்று எனக்கு தோன்றுகின்றது.
    இது ஒரு உலக இசை.
    தமிழனுக்கு மட்டும் சொந்தமானதல்ல!
    இந்த இசையும் ரசிக்க தக்கதாய் தான் உள்ளது.
    ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அனுபவம்,
    ஒரே பாணியில் இசையமைத்து கொண்டிருந்தாள் ரஹ்மானின் இசை நமக்கு எப்போதோ சலிப்பு தட்டியிருக்கும்.
    [நீ தானே என் பொன் வசந்தம் எடுபடாததன் காரணம் இன்னுமா புரியல?]
    "இந்த உலகில் மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது"
    "மணப்பாடு கிராமத்துலயும், குலசைலயும் இப்டி American Country song பாடிக்கிட்டேதான் மீன் பிடிக்கப் போறாங்களா ரஹ்மான் ?/"
    இனிமேல் பாடித்தான் பார்க்கட்டுமே நண்பா!
    மாற்றங்களை ஏற்றுகொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  6. கருத்துக்கு நன்றி கிரிஷ். இசைக்கு மொழியில்லை, உண்மை, ஆனால் நம் மொழிக்கென ஒரு இசை உண்டு. அது இந்த ஒலிப்பேழையில் ஒலிக்கவில்லை.அவரின் முழு ஈடுபாடு இப்போதெல்லாம் மேற்கத்திய ரசிகர்களை திருப்திப்படுத்துவதே..மேலும் எந்த இசையமைப்பாளர்களையும் ஒப்பிட்டு சொல்வது கிடையாது.அவரவர் அவரவரின் பாணியில் மேன்மையுள்ளவரே.

    ReplyDelete
  7. rahmanin padalgal eppodhum namakku anniyamaga irukka rajavin isai oru karanam.rahman/maniratnam iruvarum thaan thamil cinimavin jambavangal endru ninaithukondu tharum padaipugal namma meedu thinikka murpaduvathu pol irukku.paadagal peridhaga kavara villai innum sila madangalil marandhu pogum alavil thaan irukku karanam idhu pol paadagal miga sulabamaga uruvakkum instant isai thayarippalagal iruppadal thaan.rahaman endha isaiyum thandaal adhu ulaga isai raja thandal adai rasikkamal vimarsikka orukku nooru per..
    angilam kalandhu thandalthaana ulaga isai?
    paadal varigalo manadai thoda marukkiradhu
    kadal pondra sumarana paadalgal vida rajjavin nee thane ponvasantham paadalgal vasantham thaan. barathirajavakku tajmahal thanda anubavam thaan manikku kadal tharapogiradhu..

    ReplyDelete
  8. நன்றி பாலகிருஷ்ணன், தமிழ்ல எழுத முயற்சி செய்யுங்க..!

    ReplyDelete