Sunday, October 14, 2012

ஒன்று சேர்ந்த தென்றல்



ஜன்னல் கதவுகள் மூடியிருப்பினும்
அவற்றின் இடைவெளியூடே
பயணித்து வருகிறது


சிலசமயம் வரவா வேண்டாமா
என்று கேட்டுக்கொண்டு
அங்கேயே நிற்கிறது.


மர இலைகளை சிறிது அசைத்துப்பார்த்துவிட்டு
தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையெனக்
கோபித்துக்கொண்டு சட்டென நின்றுவிடுகிறது,


வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளை
மெலிதே மடங்கச்செய்து பின்,

சற்றே வலுவாகி அதைத்தன்போக்கில்
இழுத்துச்செல்கிறது


இலைகளை அசைத்துக்கொண்டிருப்பதைப்
பார்த்துக்கொண்டிருக்கும் என்னை நோக்கி
வர எத்தனிக்கிறது 


சீராகப்பெய்து கொண்டிருக்கும் மழைச்சாரல்களின்
உள்ளே புகுந்து அவற்றின் சீர் வரிசையைத்
தள்ளாடச்செய்கிறது ,


கீழே விழுந்துவிட்ட இளம் இலையைத்
தம்மால் இயன்றவரை மேலெழும்பச்செய்கிறது,


வியர்த்திருக்கும் வேளையில்
அந்தப் பனித்துளிகளைக் கவர்ந்து செல்கிறது,


அருகிலுள்ள பூந்தோட்டத்தின் வாசனையைத்
தம் கரங்களால் அள்ளிவந்து என்னிடம் சேர்க்கிறது,


இவையனைத்துமாக ஒன்று சேர்ந்து
உன்னை நினைத்ததும்
என் மனதுக்குள் பரவி நிற்கிறது.


 .

6 comments:

  1. அருமை
    படிக்க படிக்க தென்றல் என்னுள்ளும்...
    மனம கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ மிக்க நன்றி ரமணி சார், பொதிகை டீவீல ஞாயிற்றுக்கிழமைகள் மதியம் 1:30 க்கு கவிதை நிகழ்ச்சி நடத்துறது நீங்களா..?!

    ReplyDelete
  3. ரசித்தேன்... நன்றி... (TM 4)

    /// ஞாயிற்றுக்கிழமைகள் மதியம் 1:30 க்கு கவிதை நிகழ்ச்சி நடத்துறது நீங்களா..?! ///

    இல்லை...

    ReplyDelete