காலங்களில் நடந்து முடிந்துவிடுகின்றது
பின்னர் ஆறஅமர உட்கார்ந்து
என்னுள் அழுதுகொள்ள ஏதுவாக
அனைத்தும் எனக்குப்பிடிக்காத
காலங்களில் என்னை விட்டு
விலகிச்சென்றுவிடுகின்றது
பின்னர் எங்கேனும் அமர்ந்து ஆசுவாசத்துடன்
என்னைத் தேற்றிக்கொள்ள ஏதுவாக
அனைத்தும் எனக்குப்பிடிக்காத
காலங்களில் என்னால் மறுதலிக்கப்படுகின்றன
பின்னர் எனக்குப்பிடித்த காலங்களில்
அவைகள் பற்றி நினைத்து
எனக்குள் மாய்ந்துகொள்ள ஏதுவாக
எனக்குப்பிடித்த எதுவும்
நான் விரும்பும் காலங்களில்
என்னோடேயே இருந்துவிடுமாயின்
இப்படி எழுதி வைத்துக்கொள்ள வாய்க்காது
உங்களிடம் வந்து நான் சொல்வதற்கு ஏதுவாக.
.
அருமை.
ReplyDeleteஉண்மை தாங்க வாழ்த்துக்கள்.
ReplyDelete@ ராமலக்ஷ்மி : மிக்க நன்றி..!
ReplyDelete@ சசிகலா : வாழ்த்துகளுக்கு நன்றி.
ReplyDeleteஉண்மை வரிகள்...
ReplyDelete"நடக்கும் என்பார் நடக்காது...
நடக்காதென்பார் நடந்து விடும்..."