வயலினின் ஒரு இழையில்
வாசித்துக்காட்ட எத்தனிக்கிறேன்
அதன் தந்திகளிலிருந்து கிளம்பும் கீற்று
அறைச்சுவரை முட்டித்
திரும்ப வருமுன் உன் இதயத்தைச்
சென்றடைந்தால் நலம்
வாசித்துக்காட்ட எத்தனிக்கிறேன்
அதன் தந்திகளிலிருந்து கிளம்பும் கீற்று
அறைச்சுவரை முட்டித்
திரும்ப வருமுன் உன் இதயத்தைச்
சென்றடைந்தால் நலம்
நினைத்ததை முழுக்கவும் மீட்ட இயலாது
தவறிப்போகும் சங்கதிகள் போலத்தான்
சுவரில் முட்டி எதிரொலிப்பதும்.அது நான் ஒலித்ததல்ல.
தவறிப்போகும் சங்கதிகள் போலத்தான்
சுவரில் முட்டி எதிரொலிப்பதும்.அது நான் ஒலித்ததல்ல.
இசைச்சங்கதிகளை மீட்டி
இம்மியும் தவறாது
கிடைக்கும் ஊடகத்தின் வழி
ரசிப்பவர் மனதிற்குக்கடத்த முயலும்
ஒரு இசைக்கலைஞன் போலத்தான் நானும்
என்னை எண்ணிக்கொண்டிருக்கிறேன்
இம்மியும் தவறாது
கிடைக்கும் ஊடகத்தின் வழி
ரசிப்பவர் மனதிற்குக்கடத்த முயலும்
ஒரு இசைக்கலைஞன் போலத்தான் நானும்
என்னை எண்ணிக்கொண்டிருக்கிறேன்
எனினும் ஊடகக்காற்று தின்றது போக
மீதமே கிடைக்கப்பெற்ற ரசிகன் போல
பின் வந்து சேரும் சங்கதிகளில்
சலிப்படையும் என்னை யார் தேற்றுவது ?
மீதமே கிடைக்கப்பெற்ற ரசிகன் போல
பின் வந்து சேரும் சங்கதிகளில்
சலிப்படையும் என்னை யார் தேற்றுவது ?
எந்த ஊடகமுமின்றி
சங்கதிகள் கடத்துதல் பற்றிய ஆய்வில்
இன்னும் எனக்கு வெற்றிகள் தாமதப்படுகின்றன
சங்கதிகள் கடத்துதல் பற்றிய ஆய்வில்
இன்னும் எனக்கு வெற்றிகள் தாமதப்படுகின்றன
எனினும் இந்த வயலினுக்கு மட்டும் எப்படியோ தெரிந்து விடுகிறது?என் மனத்தின் கூக்குரல்.
.
ரசிக்க வைக்கும் வரிகள்... முடிவில் அருமை...
ReplyDeleteம் ...
ReplyDeleteஇசைக்கு வடிவம் கொடுப்பதுபோலத்தான் காதலுக்கும்.இரண்டுமே உணர்வால் உணர்வது மொழி வேண்டாம்.அழகான கவிதை பையா !
ReplyDeleteநன்றி தனபாலன்
ReplyDeleteவெறுமே 'ம்' னு சொல்லிட்டுப்போனா எப்டி.. :-)
ReplyDelete@ நண்டு
@ ஹேமா : ஹ்ம்...மொழி சொற்கள் இதெல்லாம் சில நேரங்கள்ல அர்த்தமற்றவைகளாக ஆகிவிடும் :-)
ReplyDelete