Monday, July 30, 2012

பெருவெடிப்பிற்கெனக் காத்திருக்கிறேன்


எனது இரு நூறாவது பதிவு..!


நீர்நிலைகளை உருவாக்கி வைத்தேன்
அவற்றில் மீன்களை நீந்தவிட்டேன்
பிதுங்கிய நிலப்பரப்பை
கடல் மட்டத்தின் மேலெழும்பச்செய்தேன்
கரையோரம் ஒதுங்கிக்கொள்ளும்
ஆமைகளையும் முதலைகளையும்
பின்னர் சேர்ந்தே உருவாக்கினேன்
காடு கழனி உருவாக்கினேன்
அவற்றில் பாடும் குயில்களுடன்
கோட்டான்களையும் பறக்கச்செய்தேன்
பின்னர் மெல்ல ஊர்ந்து செல்லும்
அனைத்தையும் உருவாக்கிப்பின்
பரிணாமம் நிகழக்காத்து நின்றேன்
நிகழ்ந்தவை அனைத்தையும் தாவும்
விலங்கென அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்
அடுத்த கட்டத்தின் நிகழ்வென
காடு சமைந்து நாடாக்கிய அவனை
வளரச்செய்து இப்போது நான்
அருகிக்குறுகி வரும் மழைக்காடுகளில்
வசிக்கத்தொடங்கியிருக்கிறேன்
மிருகத்தின் நினைவில் எப்போதும்
காடு வசிக்கும் என்றே நினைத்திருந்தது
பிழையென உணர்ந்தேன்
அருவி மலைகள் இன்னபிற
இயற்கை யாவையும் அழித்துக்
கல்லாய்ச்சமைத்தவனை
பிறிதொரு பரிணாமத்திற்கு
எடுத்துச்செல்ல வேண்டி
ஒரு பெருவெடிப்பிற்கெனக்
காத்திருக்கிறேன் இப்போது.


.

14 comments:

  1. 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள் :)

    மீண்டும் முதலிலிருந்து ஒரு பெருவெடிப்பா :) வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான வரிகள்..

    உங்கள் பட்திவுகளை தமிழ் பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள் நண்பரே...

    தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    ReplyDelete
  3. மிக்க நன்றி சுதர்ஷன்...ஹ்ம்..இன்னொரு வெடிப்பிற்கென ஆயத்தம் தொடங்கியிருக்கிறது..! உங்கள் அனைவரின் ஆதரவோடும்..!

    ReplyDelete
  4. இயற்கை யாவையும் அழித்துக்
    கல்லாய்ச்சமைத்தவனை
    பிறிதொரு பரிணாமத்திற்கு
    எடுத்துச்செல்ல வேண்டி
    ஒரு பெருவெடிப்பிற்கெனக்
    காத்திருக்கிறேன் இப்போது//.

    ஆழமான அருமையான
    சிந்தனையுடன் கூடிய பதிவுக்கும்
    நூறாவது பதிவுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ராம் :)

    ReplyDelete
  6. Mikavum karuthulla kavithai. Ulakam alinthu mendum uruvedukka vendum

    ReplyDelete
  7. மிக்க நன்றி ரமணி சார்.. :-)

    ReplyDelete
  8. @ ரசிகன் : ஆஹா... தொடர் பயணத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கும் இந்தச்சின்னப்பயல்..:-)

    ReplyDelete
  9. @ கவி அழகன் : மிக்க நன்றி , வாழ்த்துகளுக்கும் வருகைக்கும்.!

    ReplyDelete
  10. ஆஹா..! நண்டு சார் நன்றிகள் பல..!

    ReplyDelete
  11. அருமை வரிகள் & 200-க்கு வாழ்த்துக்கள். !

    நன்றி.
    (த.ம. 5)


    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  12. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்..!

    ReplyDelete