Monday, July 2, 2012 By: சின்னப்பயல்

என் மனம் சொல்லிற்று



தொடர்பு கொள்ள முடியாத
தொலைவில் நீயிருப்பதாக
செல்பேசி சொல்லிற்று

அனுப்பிவைத்த குறுஞ்செய்திகள்
காற்றினில் கரைந்துவிட்டதாக
திரும்பி வந்த தகவல்கள் சொல்லிற்று

கருத்திடமுடியாது உன் பக்கங்கள்
மூடப்பட்டிருப்பதாக
சமூக வலைத்தளங்கள் சொல்லிற்று

மின்னஞ்சல்கள் அடைந்துவிட முடியாத
பெட்டிகளை மட்டுமே நீ வைத்திருப்பதாக
திரும்பி வந்தவை சொல்லிற்று

இருக்கும் உன் திசையை
நீ காட்டமறுப்பதாக
இணையதள வரைபடங்கள் சொல்லிற்று

உன் பெயர் மட்டும் எப்போதும்
சாம்பல் நிறத்தில் பூத்திருப்பதாகவே
அரட்டைப்பெட்டிகள் சொல்லிற்று

இவை அனைத்தையும்
நொடிக்கொரு தரம்
சரிபார்த்துக்கொண்டிருந்தவனிடம்
நினைவிற்கெட்டிய தூரத்தில் தானே
அவள் எப்போதும் இருக்கிறாள் என்று
என் மனம் சொல்லிற்று.


.

Post Comment

2 comments:

சின்னப்பயல் said...

சோமா

அவள் நினைவுக்கு எட்டிய தூரத்தில் இல்லை...உம் நினைவெல்லாம் அவளாகவே இருப்பதால் இருக்கலாம் ;-)

சின்னப்பயல் said...

நன்றி சோமா.!

Post a Comment