நனைந்துவிட்ட கவிதைப்புத்தகத்திலிருந்து
நீர் மட்டுமே தாரை தாரையாகச்
சொட்டிக்கொண்டிருந்தது
நீர் மட்டுமே தாரை தாரையாகச்
சொட்டிக்கொண்டிருந்தது
சொட்டிய நீர் சிறுகுளமாகித் தேங்கிவிட
அதில் திடீரென அன்னப்பறவைகள்
நீந்தத்தொடங்கின
அதில் திடீரென அன்னப்பறவைகள்
நீந்தத்தொடங்கின
எங்கிருந்து வந்திருக்கக்கூடுமென்று
நினைத்த பொழுதில்
அவை என்னைப்பார்த்து அகவின
அவற்றின் குரல்களில் வெளிப்பட்டவை
யாவும் கவிதைகளாகவே இருந்தன.
நினைத்த பொழுதில்
அவை என்னைப்பார்த்து அகவின
அவற்றின் குரல்களில் வெளிப்பட்டவை
யாவும் கவிதைகளாகவே இருந்தன.
புத்தகத்தை கையிலெடுத்து
உலரச்செய்து நோக்கும்போது
அதில் நான்காம் பக்கத்தில் இருந்த
அன்னப்பறவைகளும்
அவற்றோடிருந்த கவிதைகளும்
கரைந்து போயிருந்தன.
உலரச்செய்து நோக்கும்போது
அதில் நான்காம் பக்கத்தில் இருந்த
அன்னப்பறவைகளும்
அவற்றோடிருந்த கவிதைகளும்
கரைந்து போயிருந்தன.
.
சோமா says:
ReplyDeleteApril 21, 2012 at 6:34 pm
புத்தகத்தின் நான்காம் பக்கத்து நீர் குளமாகி அன்னம் உயிர் பெற்று கவிதை வீட்டை நிரப்பியது. கவிதைக்கு கீழ் இருந்த பெயர் மனிதனாக உயிர் பெற்று “சின்னப்பயல்” என அந்த வீட்டிற்கு உரிமையாளராய் தன்னை நிர்ணயித்துக்கொண்டது.
அருமையான கவிதை
ReplyDeleteநன்றி சோமா
ReplyDeleteநன்றி ராஜபாட்டை ராஜா ..
ReplyDeleteவிளங்கற மாதிரி சொல்லவே மாட்டீர்களா?
ReplyDeleteகாதலியின் கூந்தல் நீர் சொட்டும் குளத்தில் மிதக்கும் அன்னம்.கற்பனை அழகு !
ReplyDeleteஎழுத்தாளர் , கவிஞர்,இதழியலாளர் @ விஜயா'விற்கு இது விளங்கவில்லையா..?! ஆச்சரியம் தான்.. ! :-))
ReplyDelete@ ஹேமா : ஹ்ம்.. காதலும் காதலியும் கவிதையும் அன்னமும் , அதோடு உங்களின் வாழ்த்துகளும் அழகு தான்..:))
ReplyDeleteகற்பனை அழகு... கவிதை அழகு...
ReplyDeleteரெவெரி..நன்றி..!
ReplyDelete