Tuesday, April 5, 2011

தாங்கல்

திண்ணை'யில் எனது கவிதை

எதையும் கடந்து செல்லுதல்
என்பது முடிவுறாப்பயணத்தின்
மூலம் மட்டுமே சாத்தியமெனில்
பாதி வழிப்பயணத்தில்
தங்கிவிட்ட என்னிலிருந்து
எதுவும் தானாகச்
சென்றால் மட்டுமே
அவை எனைக்கடந்து
செல்லுதல் சாத்தியம்.

உண்மையில்
என்னை எதுவும் கடந்து
செல்வதில்லை
காய்ந்த நீரோடையின்
வடுக்களைப்போல அவை
தங்கித்தான் விடுகின்றன.

என்றாவது பயன்படும்
என எடுத்துவைத்த
ஒரு சிறு குண்டூசியைப்போல
அவை இன்னமும் என்னுள்
தைத்துக்கொண்டு தானிருக்கின்றன.


.

3 comments:

  1. உண்மையில்
    என்னை எதுவும் கடந்து
    செல்வதில்லை
    காய்ந்த நீரோடையின்
    வடுக்களைப்போல அவை
    தங்கித்தான் விடுகின்றன.


    ......வர்ணனை - அருமையாக பொருளோடு அமைந்து வந்து இருக்குது. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    பார்க்கவும்: வியாழன் கவிதைகள் சரமாக

    ReplyDelete