Monday, April 11, 2011

அமிழ்ந்த கல்



திண்ணை'யில் எனது கவிதை


அமிழ்ந்த கல்

சிறிய அலையையும்
சில நீர்க்குமிழிகளையும்
உனக்குள்
உருவாக்கிவிட்டு
அசையாமல் அமிழ்ந்த
கல்லாகக்கிடக்க எனக்கும்
விருப்பந்தான் உன்னில்.
ஏனெனில்
உருளும் கல்
பாசம் சேர்ப்பதில்லை.

சிலரும் பலரும்

நான் இங்கிருந்த
வரையில் எனக்கு
எது தேவையோ
அதை மட்டுமே
செய்து வந்தேன்
பிறர் எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்ப அல்ல.
எனினும் சிலருக்கு
என்னைப்பிடித்திருந்தது
பலருக்கு இல்லை.
அந்த சிலரும்
என் போலவே
தனக்குப்பிடித்ததை
மட்டும் செய்து
வந்தனர் போலும்.

நனைக்க/நினைக்க

என்னை
என்னில்
என்னுள்
உன்னால்
நனைக்க

என்னில்
என்னுள்
உன்னை
நினைக்க


.

8 comments:

  1. திண்ணையில் வெளியான உங்களின் அருமையான கவிதைகளை பதிவில் தந்ததற்கு பாராட்டுக்கள்! :-)

    ReplyDelete
  2. அசத்தல்...
    இனி தொடர்ந்து வருவேன்..

    ReplyDelete
  3. நன்றி கருன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..!

    ReplyDelete
  4. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

    ReplyDelete
  5. சிறப்பான கருத்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. நன்றி இராஜராஜேஸ்வரி , உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்,,!

    ReplyDelete