Wednesday, March 23, 2011

இரண்டாவது கோப்பை

கீற்று இணைய இதழில் எனது கவிதை 

உருவாக்கியபோதும்                                       
ஒன்றாகத்தான் இருந்தன
களிமண்ணாக இருந்தவற்றை
கற்கள் பிரித்து சீர்படுத்தி சுட்டு ,
பின் வேக வைத்து,
வண்ணக்குழம்புகள் பூசி,                                       
ஒன்றாகத்தான் அடைபட்டன
அந்தக் காகிதப்பெட்டிக்குள்
விலையும் அதே                                                  
ஒரு வித்தியாசமுமில்லை.
வாங்க வந்தவனும்                            
வேறுபாடு ஏதும்
பிரித்தறிய இயலாமல்
வாங்கிச்சென்றான்.
அதுவரை கூடவே இருந்த
கோப்பைகள்
பிரித்து வைக்கப்பட்டன.
இரண்டாவது கோப்பையாய்
டீக்கடையில்
புரியாமலே நானும்
அந்தக்கோப்பைகளை
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அவையும் என்னை.


.

No comments:

Post a Comment