Wednesday, March 2, 2011

அவரவற்கான பதுங்கு குழிகள்


 கீற்று இணைய இதழில் எனது கவிதை


லாவகமாகவும்,
தான் கண்டுபிடிக்கப்படக்கூடாத
இடத்தில் தன்னை
மறைத்துக்கொள்ளவும்,
தான் மற்றும் தனக்கே உரிய
இடமாகவும்,
தன் தவறுகளை
மெல்ல அசைபோடவும்,
தன் வெற்றிகளை
அகமகிழவும்,
தனது வெளியாக
அதை உணர்ந்து கொள்ளவும்,
பிறர் தொடர்பின்றி
தனக்குள் அமைதி காக்கவும்,
தான் கொண்ட கருத்தாக்கங்களை
தான் கற்பித்துக்கொண்ட
நியாயங்களை
பிறர் சிதைத்து விடாமல்
பாதுகாக்கவும்,
தன்னியல்பை
பிறர் காணாதிருக்கவும்,
முகமூடியின்றி
தன் இயல்பிலிருக்கவும்,

தன்னாலேயே, தாமாகவே
வடிவமைக்கப்படுகின்றன
அவரவற்கான பதுங்கு குழிகள்.

.

1 comment:

  1. வாழ்த்துக்கள் :)
    அந்த பதுங்கு குழிகளை மூளையில் அமைத்தால் இன்னும் நல்லது ..எங்களுக்கு :-))

    ReplyDelete