திண்ணையில் வெளியான எனது கவிதை
என்
மனம் என் வசப்படுமா
அதோடு பிறர்மனமும் ?
என்
அலைபாயும் எண்ணங்கள் என்னிலிருந்து
அகலுமா?
என்
நிஜத்தேடலை பிறர் அறியாவண்ணம்
பாதுகாக்க இயலுமா..?
சக ஞானியின்
கூட்டத்தைவிட எனக்கு கூடுதல் கூட்டம்
கூடுமா ?
அவ்வாறு
கூடிய கூட்டத்தை என்கட்டுக்குள்
வைத்திருக்க இயலுமா ?
வெள்ளைத்தோலுடையோர் என்
அங்கத்தினராவரா ?
தொலைக்காட்சியின் தொடர்
நிகழ்ச்சிக்கு வாய்ப்புகள் குவியுமா ?
என் சித்துவேலைகள்
ரகசியமாகவே தொடருமா ?
புலித்தோலும் மான்தோலும்
தடைசெய்யப்பட்டதால்
என் ஆசனத்திற்கான
மென்பட்டுப்பூச்சிகளின்
கூட்டுக்கும் தடைவருமா ?
இட்ட வசியமை
கூட்டம் முடியும்வரை கலையாதிருக்குமா ?
எனக்கே
பகுதிகூட விளங்காதிருக்கும் என்பேச்சு
கூடியுள்ளவருக்கு முழுதும் விளங்காமலிருக்குமா..?
கடைசியாக ஒன்று
தன்னை உணர்ந்தவனே ஞானி
என்றநிலை அனைவர்க்கும்
தெரிந்துதான் போகுமா?
.
அருமையான கவிதை...
ReplyDeleteSee,
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_21.html