ஒரு கொரொனா வைரஸின் எடை 0.85 ஆட்டோக்ராம்ஸ் அல்லது ஒரு ட்ரில்லியனில்
பத்து லெட்சத்தின் (one millionth of a trillion grams) ஒரு பங்கு எனலாம்.
70 பில்லியன் கொரொனா வைரஸ்கள் ஒருவரை நோயாளியாக்கினால் அவருடைய உடம்பில்
இருக்கும் கொரொனா வைரஸ்களின் மொத்த எடை 0.0000005 க்ராம்கள். இப்போது
உலகில் இருக்கும் கொரொனா நோயாளிகள் 20 லெட்சம் பேர். ஆக இந்த 20 லெட்சம்
நோயாளிகளின் உடம்பில் இருக்கும் ஒட்டு மொத்த வைரஸ்களின் எடை வெறும் 1
க்ராம் மட்டுமே. 700 கோடி மனித இனம் கொண்ட உலகமே வெறும் ஒரு க்ராம் வைரஸ் முன் மண்டியிட்டுக்கிடக்கிறது.
ஏர்லைன் இண்ட்ஸ்ட்ரீஸ் இன்னமும் முழு வீச்சில் இயங்க இரண்டு ஆண்டுகளாகும்.
பல்லாயிரம் கோடிகள் இழப்பு இந்த இரண்டு மாதத்திலேயே.மொத்த வேலையிழந்தவரின்
எண்ணிக்கை அமெரிக்காவில் மொத்தம் 3 மில்லியன் மக்கள். இந்தியாவில் வேலை
மற்றும் வீடிழந்தோர் எண்ணிக்கை முப்பது கோடியைத் தாண்டும். இந்தியாவின் இந்த
ஆண்டுக்கான ஜிடிபி 2 விழுக்காடு போலும் இருக்காது என ஆரூடம் ஓடுகிறது.
வேலையிழப்பு , மேலும் வேலை பார்ப்போருக்கு 40 முதல் 50 சதமானம் வரை சம்பளம்
குறைப்பு. முழு வீச்சில் பொருளாதாரம் மீண்டு எழ இன்னமும் இரண்டு
ஆண்டுகளாகும். எல்லாம் எதனால் வெறும் ஒரே ஒரு க்ராம் வைரஸால்.
ஒரு க்ராம் வைரஸை வைத்துக்கொண்டு உலகையே ஆண்டுக் கணக்கில் முடக்கிப்போட முடியுமெனில் இதை விட (உயிரி) ஆயுதம் வேறேதும் வேணுமா ?? ஆறாம் அறிவு கொண்டு செவ்வாய் வெள்ளி எனப்பயணித்துக் கொண்டிருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைத்த மனித அறிவார்ந்த இனம் ஒரு க்ராம் வைரஸினும் கீழ் தான் என நினைக்கும்போது... #ஒருக்ராம்

No comments:
Post a Comment