Wednesday, March 25, 2020

லாக்டௌன்21

எங்கள் பெங்களூர் அப்பார்ட்மெண்ட் பில்டிங்ல ’வொர்க் ஃப்ரம் ஹோம்’ பண்ணும் இளந்தாரிகளின் தொல்லை பெருத்துவிட்டது. அவரவர் வீட்டின் கக்கூஸுக்குள் உட்கார்ந்து சிகரெட் பிடிக்கிறார்கள். கேட்டால் புகைத்தால் தான் வெளிவரும் என்கின்றனர். உபயோகித்த நீர் வெளியேறும் பைப்கள்/வெண்டிலேட்டர்கள் மூலம் மற்ற தளங்களின் கக்கூஸ்/பாத்ரூமுக்குள் இலவச புகைச்சேவை. மறந்து கதவைத்திறந்து வைத்தால் அறைக்குள்ளும் புகை வாசம் மண்டுகிறது. கண்டதையும் ஆன்லைனில் ஆர்டர் பண்ணி இல்லை நடந்துபோய் வாங்கிக் கொண்டு வந்து கீழ் வீடுகளிலிருக்கும் உப்பரிகைகளில் போட்டு விடுகிறார்கள். கேட்டால் கை தவறி விழுந்து விட்டது என அழிச்சாட்டியம். பீர் பாட்டில்களை குடித்து விட்டு பின்னிலிருக்கும் நந்தினி கார்டனில் தூக்கி வீசுகின்றனர். ரெண்டு முறை ரெய்டு வந்து சென்றனர் கே.எம்.எஃப் லிருந்து. சில்லி சாஸ் பாகெட்டை பிரித்து எனது வீட்டு உப்பரிகையில் கொட்டி வைத்திருந்தனர். நான் கூட எதோ புறாக்கழிவாக்கும் என நினைத்து தண்ணீரை ஊற்றி கழுவி விட்டேன்.பிஸ்ஸா வாங்கி வந்து அதன் மேல் தூவும் பெப்பெர்/சில்லி பாக்கெட்டுகளை பிரிக்கிறேன் பேர்வழியென தூவி விடுகிறார்கள் அது ஜன்னல் வழி விழுந்து பெருந்தும்மல் இருமல் வருகிறது. விட்டால் போலீஸே வந்துவிடும் போலருக்கிறது இந்த பில்டிங்க்ல எவனுக்காவது கரோனா புடிச்சிருக்கான்னு கேட்டூ. 

லிஃப்ட் பயன்பாடு வேண்டாம் என்றால் கேட்பதேயில்லை (மொத்தமே நான்கு தளங்கள் தான் பில்டிங்கில்). டெலிவரி பாய்ஸ்களை பில்டிங் உள் நுழையுமுன் கைகளைக்கழுவி விட்டு வர ஏற்பாடாக சோப்புக்கரைசல் செக்யூரிட்டியிடம் கொடுக்கப் பட்டு கையெழுத்து போட்டு வீடு வருமுன் கழுவி விட்டு வர ஏற்பாடு செய்திருக்கிறது. வீட்டு வேலை செய்ய வரும் அம்மணிகளிடமும் அங்கனமே செய்துவிட்டு வர பணித்திருக்கிறோம். வீட்டின் மேல் தளத்தில் ஒரு ஜிம் உள்ளது. ஒரு உபகரணமும் ஒழுங்கில் இல்லை. எல்லாவற்றையும் பாழடிக்கின்றனர். இந்த இளந்தாரிகள் டம்பிள்ஸை தூக்கிக்கொண்டு தமது வீட்டில் வைத்து கொண்டு இல்லை எனச் சாதிக்கின்றனர்..வெயிங் மெசினை என்ன செய்தார்களென தெரியவில்லை. தும் தும்’மென்று விட்டிலிருக்கும் ஹோம் தியேட்டரில் பாட்டு போட்டு பில்டிங்ல எதோ கல்யாணம் போலருக்குன்னு நினைக்க வைக்கிறாங்யள். இவங்யளுக்காகவாவது கொரொனா மனசு வெச்சு பெங்களூரை விட்டு ஓடிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்டீல்லாம் கோள்மூட்றாங்யன்னு தெரிஞ்சு அசோசியேஷன் வாட்சப் க்ரூப்ல இந்த அங்கிள்கள் தொல்லை தாங்கலைன்னு மீம் போட்டு விடுறாங்ய. அடச்ச. #லாக்டௌன்21

1 comment: