Tuesday, December 18, 2018

மன்ட்டோ'மன்ட்டோ' பார்த்துக்கொண்டிருந்தேன் காலையில். லூதியானாவில் பிறந்து பாம்பேவிற்கு குடி பெயர்ந்து, பின்னர் லாகூக்கு புலம் பெயர்ந்த எழுத்தாளர். ரொம்ப நாட்களாக அவர் பெங்காலி என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் பஞ்சாபி ! தண்டா கோஷ்ட் (குளிர்ந்த இறைச்சி) கதைக்காக கோர்ட் வாசலுக்கு நடையாய் நடந்திருக்கிறார். லாகூரில் 'பாக் டீ ஹவுஸ்'ல் அவரும் சக எழுத்தாள நண்பர்களும் காரசாரமாக இலக்கியம் அரசியல் என  விவாதிப்பதை உள்ளூர் சர்வாதிகாரிகளாலும் தடுக்க இயலாதாம். என்ன படம் முழுக்க ஒரு ஆவணப்படம் போல தோன்றுவது சலிப்பு. இத்தனைக்கும் நவாஸுதின் ஸித்திக்கி, இவரை ரமன் ராகவ்'விலும் பின்னர் ஷாரூக்கானின் 'ரயீஸிலும்' பார்த்ததை விட இங்கு ஏமாற்றியிருக்கிறார்.இவரைத்தான் கொண்டு வந்து 'பஞ்ச் டயலாக்' பேச வைத்தனர் பேட்ட ஆடியோ ரிலீஸீல். ஹிஹி.

புகைக்கிறார் குடிக்கிறார் எனக்கு ஒரு எழுத்து போலும் புரியாத உருதுவில் எழுதித்தள்ளுகிறார். அவர் பிடித்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை எப்படியும் ஒரு ஐநூறைத்தாண்டும் படத்தின் இரண்டு மணிநேரத்துக்குள். அதிக உருது வசனங்கள். புரியச்சிரமம் , இன்னொரு முறை 'அடியெழுத்துகளின்' துணையுடன் பார்க்க வேணும். குதா ஹாஃபிஸ், தஷ்ரீஃ ரக்கியே.. எல்லாம் உருது யப்பாஆ..  நீ இப்டி எழுதறாலதான் நாம இப்டி கஷ்ட்டப்பட்றோம்னு மனைவி சொன்னதும் விருட்டென எழுந்து சென்று கை கழுவுகிறார்.

மனதைத்தைக்கும் இடமோ , இல்லை வசனங்களோ, இல்லை நிகழ்வுகளோ இல்லை. காமராஜர் படம் இப்படித்தான் இங்கு இருந்தது. எல்லாம் வரலாற்று ஆவணங்கள். சலிப்பூட்டும் திரும்பத்திரும்ப வரும் காட்சிகள். எழுதி முடித்த கதைகளுக்கு/நாடகங்களுக்கு இப்பவே பணம் கொடுத்தாலே ஆயிற்று என்று பல காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பு. தானாய் மூடிக்கொள்ளும் திட்டிக்கதவை வலுவாய்த்திறந்து மூடி தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று அவர் நண்பர் சொல்ல, ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என மன்ட்டோ கூறுகிறார். இந்த பாகிஸ்தான் இந்தியா பிரிவினை குறித்து தமிழனுக்கு கிஞ்சித்தும் தெரியாது. எதையும் கிளறவும் செய்யாது. இருப்பினும் அந்தக்காட்சி அத்தனை உணர்ச்சியற்ற அமைப்பு. எப்படா படம் முடியும் என்றாகி விட்டது எனக்கு. நந்திதா தாஸ் நடிச்சா மட்டும் போதும் ...#மன்ட்டோNo comments:

Post a Comment